என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.
பண்ருட்டி, திண்டிவனத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
- நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது.
- நூர்முகமது ஷா அவுலியா தர்காவிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்தனர்.
கடலூர்:
நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது. பண்ருட்டியில் ரம்ஜானை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பண்ருட்டி கடலூர் ரோட்டிலுள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று காலை நடந்தது.இதனைமுன்னிட்டு பண்ருட்டி காந்திரோடு நூர்முகமது ஷா அவுலியா தர்காவிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சென்னை ஜேப்பியார் ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட ஏராளமானமுஸ்லிம்கள் திரளாக கலந்துகொண்டுவழிபாடு செய்தனர். பெரிய பள்ளிவாசல் இமாம் இஸ்மாயில் தொழுகை நடத்தினர் தொழுகை முடிந்து திரும்பிய முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டிதழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஏழை, எளியோருக்கு உதவி பொருள்களை வழங்கி உதவினர். ஈத்கா கமிட்டி தலைவர் அனீஸ் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
இதேபோல், திண்டிவனம் நகரில் உள்ள அனைத்து மசூதிகளிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று செஞ்சி ரோட்டில் உள்ள ஈக்தா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் 3000-த்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.தொழுகையை நியாஸ் அஹமத் தொழ வைத்தார். தொழுகை முடிந்ததும் உலக நன்மை வேண்டியும் மழை பொழிய வேண்டும் என்று ( துஆ) பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.