என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ 3.50 லட்சம் பணத்துடன் சாலை ஓரத்தில் மயங்கி கிடந்த டாஸ்மாக் ஊழியர்
- ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர் .
- பணத்தை அவரிடம் ஒப்படைத்த ராஜாராமுக்கு பொதுமக்களும் சக ஊழியர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூரை சேர்ந்தவர் தயாளன்.
இவர் தற்போது நெய்வேலி இந்திரா நகரில் வசித்து வருகிறார். பண்ருட்டி லிங்க் ரோட்டில் உள்ள டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் இவர் நேற்றிரவு வேலை முடிந்து தனதுமோட்டார் சைக்கிளில்வீடு திரும்பினார். மேல்மாம்பட்டு பகுதியில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி கீழேவிழுந்தார்.
அப்போது வேப்பூரில் இருந்துபணி முடிந்து மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு வந்து கொண்டிருந்த ராஜா ராம் என்ற மற்றொரு டாஸ்மாக் ஊழியர் தயாளன் மயங்கிய நிலையில் சாலை ஓரத்தில்கிடந்ததை பார்த்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்சை அழைத்தார். ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர் .
அவரிடம் இருந்த ரூபாய் 3லட்சத்து 50 ஆயிரம் கீழே விழுந்து கிடந்தது. அந்த பணத்தையும் பத்திரமாக அவரிடம் ஒப்படைத்தார். சக ஊழியர் ஒருவரை காப்பாற்றி அவர் எடுத்து வந்த பணத்தை அவரிடம் ஒப்படைத்த ராஜாராமுக்கு பொதுமக்களும் சக ஊழியர்களும் பாராட்டு தெரிவித்தனர்.






