கடலூர் அருகே மஞ்சள் நீராட்டு விழாவில் தகராறு; இளம்பெண் மானபங்கம்: 6 பேர் மீது வழக்கு - 2 பேர் கைது

கடலூர் பாதிரிக் குப்பத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவரது மாமா சுகுமார் மகள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது சூர்யாவிற்கும் சுகுமாருக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது
கடலூர் அருகே  மஞ்சள் நீராட்டு விழாவில் தகராறு; இளம்பெண் மானபங்கம்:   6 பேர் மீது வழக்கு - 2 பேர் கைது
Published on

கடலூர்:

:கடலூர் பாதிரிக் குப்பத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவரது மாமா சுகுமார் மகள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது சூர்யாவிற்கும் சுகுமாருக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சூர்யா, அவரது மனைவி அருளரசி மற்றும் உறவினர் செல்வகுமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் கடலூர் அடுத்த கண்ணாரப்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வழி மறித்து பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.    மேலும் அருளரசியை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா மற்றும் அவரது உறவினர் செல்வகுமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரண மாக அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் அருளரசி கொடுத்த புகாரின் பேரில் சுகுமார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பரத் (28) குமரன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com