என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி உருவாக்க வேண்டும்: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டத்தில் தீர்மானம்
    X

    கடலூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி உருவாக்க வேண்டும்: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டத்தில் தீர்மானம்

    • கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்றது.
    • மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்,:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பள்ளி, கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி உருவாக்க பட வேண்டும். அமைக்கப்படாத நிறுவனங்களில் உடனடியாக அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு, நிரந்தர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    Next Story
    ×