search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tear"

    • நீர் மோர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது
    • அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்றது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    பேனர் கிழிப்புஇதனை தொடர்ந்து இன்று காலை விழா நடைபெறும் இடத்திற்கு அ.தி.மு.க.நிர்வாகிகள் வந்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்றது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர் . பேனரை கிழித்த மர்ம நபர்கள் யார் ? எதற்காக கிழித்தார்கள் என தெரியவில்லை. தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர். மேலும் யார் பேனரை கிழித்து சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெட்டிச்சா வடி போலீஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடையத்தில் தி.மு.க. பேனர் கிழிக்கப்பட்டுள்ளது. இந்த பேனர் காற்றின் காரணமாக கிழிந்ததா?
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து கடையம் வடக்கு பஜார் பகுதியில் தி.மு.க.வினர் பேனர் வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் அந்த பேனர் கிழிக்கப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சியினர் அங்கு திரண்டனர். உடனே கடையம் போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர்.

    பேனர் காற்றின் காரணமாக கிழிந்ததா?அல்லது வேறு ஏதேனும் மர்ம நபர்கள் பேனரை கிழித்தார்களா? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக போலீசில் புகார் எதுவும் கொடுக்கப்படாததால் மேற்கொண்டு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    திண்டிவனத்தில் வக்கீல் வீடு உள்பட 4 இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாடிக்கார குட்டை தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். வக்கீல். இவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமிக்கும்பிட சென்றார்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாடிக்கார குட்டை தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். வக்கீல். இவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமிக்கும்பிட சென்றார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 8 பவுன் நகை, வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    ரோசனை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 75). இவர் இன்று காலை திருமண விழாவுக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கினர்.

    இதில் அவர் நிலை குலைந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    படுகாயமடைந்த மூதாட்டி ராஜேஸ்வரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோன்று ராஜாராம் என்பவரது வீட்டை உடைத்து மர்மநபர்கள் புகுந்தனர். அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    திண்டிவனம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரி. இவர் காற்று வாங்க வீட்டு முன்பகுதியில் தூங்கினார். இரவு நேரம் மர்மநபர்கள் கேட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டில் இருந்த 500 கிராம் வெள்ளி மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    ஒரே நாளில் திண்டிவனம் பகுதியில் 4 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதால் பரபரப்பு ஏறபட்டது. இது தொடர்பாக போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    சேலம் பசுமை வழி சாலைக்காக புதிதாக கட்டிய அரசு பள்ளி கட்டிடம் இடிபடும் நிலை உள்ளதால் மாணவ- மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். #salemtochennaigreenroad
    பாப்பிரெட்டிப்பட்டி:

    சேலம் பசுமை வழி சாலைக்காக  தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் காளிப்பேட்டையில் இருந்து கோம்பூர் வரை நிலங்களை அளவிடும் பணி நடந்தது. அப்போது மஞ்சவாடி ஊராட்சி பகுதியில் விவசாயி கார்த்திக் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை வருவாய் துறை ஊழியர்களும், போலீசாரும் உடலில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். அவரது நிலத்தை அளப்பதை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு சென்றனர்.

    லட்சுமாபுரம் பகுதியில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடம் பசுமை வழிச்சாலைக்காக இடிபடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும், ஊழியர்களும் போலீஸ் பாதுகாப்புடன் அந்த பள்ளி கட்டிடத்தை அளந்தபோது அங்கு திரண்டிருந்த மலைவாழ் மக்களும், மாணவ- மாணவிகளும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

    லட்சுமாபுரம் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 250 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பெரும்பாலோனர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள் படித்து வருகிறார்கள். குறிப்பாக சின்னமஞ்சவாடி, பெரியமஞ்சவாடி, நடுப்பட்டி, காளிப்பேட்டை, கோம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பழங்குடியின மாணவ-மாணவிகள் தான் அதிக அளவில் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளி ஏற்கனவே பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டித்தர கடந்த 15 வருடங்களாக நாங்கள் போராடி வந்தோம். பின்னர் நாங்களே தற்போது பள்ளி அமைந்துள்ள இடத்தை விலைக்கு வாங்கி அரசிடம் ஒப்படைத்தோம்.  கடந்த 2016-2017-ம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் நபார்டு உதவியுடன் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் பள்ளி கட்டிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டப்பட்டது. 2 தளங்கள் உள்ள இந்த கட்டிடத்தில் 25 அறைகள் உள்ளன.

    புதிய கட்டிடத்துக்கு மாணவ-மாணவிகள் இன்னும் செல்லவில்லை. அதற்குள் இந்த புதிய கட்டிடம் இடிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த புதிய பள்ளி கட்டிடத்தை இடிக்காமல் மாற்று வழியில் பசுமை வழிச்சாலை அமைக்க வேண்டும் அல்லது இன்னொரு இடத்தில் உடனடியாக பள்ளி கட்டிடத்தை கட்டி மாணவ- மாணவிகள் தொடர்ந்து பள்ளியில் படிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தர்மபுரி மாவட்டம் சாமியாபுரம், பாப்பி ரெட்டிப்பட்டி பகுதியில் ஆயிரக்கணக் கான தென்னை, வாழை, மா, புளியமரங்கள் 8 வழி சாலைக்காக அகற்றப்பட இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    சின்ன மஞ்சவாடி, பெரிய மஞ்சவாடி, கோம்பூர், காளிப்பேட்டை பகுதிகளில் உள்ள பழமையான 100 ஆண்டுகளை கடந்த புளியந்தோப்பு, 50 மா மரங்கள், தென்னந்தோப்புகள் வழியாக சாலைக்கு நிலம் அளவிடப்பட்டது. இதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மரங்களை 100 ஆண்டுகளாக தாங்கள் பாதுகாத்து வருவதாக கண்ணீர் விட்டனர் பெண்கள்.  

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று வரை 52 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிலம் அளவிடும் பணி முடிந்துள்ளது. 910 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து முட்டுக்கல்லை வருவாய் துறை ஊழியர்கள் நட்டு உள்ளனர். இன்னும் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிலம் அளவிடும் பணி நடைபெற உள்ளது. இதில் 2 கிலோ மீட்டர் தூர நிலம் வனப்பகுதிக்குள் வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிலோ மீட்டர் தூர நிலத்தையும், தருமபுரி மாவட்ட வருவாய்துறை ஊழியர்களே அளந்து கற்களை நட்டு உள்ளனர்.

    இன்று தருமபுரி மாவட்டம் கோம்பூரில் இருந்து சேலம் மாவட்ட எல்லையான மஞ்சவாடி கணவாய் வரை உள்ள இடங்களை அதிகாரிகள் அளந்து வருகிறார்கள். #salemtochennaigreenroad
    ×