என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையத்தில்  தி.மு.க. பேனர் கிழிப்பு
    X

    பேனரை அப்புறப்படுத்தும் போலீசார்.


    கடையத்தில் தி.மு.க. பேனர் கிழிப்பு

    • கடையத்தில் தி.மு.க. பேனர் கிழிக்கப்பட்டுள்ளது. இந்த பேனர் காற்றின் காரணமாக கிழிந்ததா?
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து கடையம் வடக்கு பஜார் பகுதியில் தி.மு.க.வினர் பேனர் வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் அந்த பேனர் கிழிக்கப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சியினர் அங்கு திரண்டனர். உடனே கடையம் போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர்.

    பேனர் காற்றின் காரணமாக கிழிந்ததா?அல்லது வேறு ஏதேனும் மர்ம நபர்கள் பேனரை கிழித்தார்களா? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக போலீசில் புகார் எதுவும் கொடுக்கப்படாததால் மேற்கொண்டு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×