search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
    X

    பண்ருட்டி இஸ்லாமிக் பைத்துல்மால்டிரஸ்ட் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொழில்அதிபர் ஜாகிர்உசேன் தொடங்கிவைத்துபேசினார்.விழாவில் டிஎஸ்பி சபியுல்லா மற்றும் பலர் உள்ளனர்.

    பண்ருட்டியில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

    • .கன்வென்ஷன் சென்டரில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
    • தொழில் அதிபருமான ஜாகிர்உசேன் தொடங்கிவைத்து நோன்பின் மாண்பு பற்றி பேசினார்.

    கடலூர்:

    பண்ருட்டி இஸ்லாமிக் பைத்துல்மால்டிரஸ்ட் சார்பில் பண்ருட்டி, எல்.என்.புரம் சென்னை சாலை ஆர்.கே.எம்.கன்வென்ஷன் சென்டரில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் இஸ்லாமிக் பைத்துல்மால் டிரஸ்ட் செயலாளரும், தொழில் அதிபருமான ஜாகிர்உசேன் தொடங்கிவைத்து நோன்பின் மாண்பு பற்றி பேசினார். மதார்ஷா பள்ளி மாணவர்கள் கிராத் ஓதினர்.

    விழாவில் சிறப்பு அழைப் பாளர்களாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, வர்த்தக சங்க தலைவர் சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் இந்து, முஸ்லீம், கிருஷ்த்துவ சமுதாய தலைவர்கள், அரசுதுறை அதிகாரிகள், நூர் முகமது ஷா அவுலியா தர்கா கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள், ரோட்டரி, அரிமா, எக்ஸ்னோரா, செந்தமிழ், முத்தமிழ் சங்கம், வர்த்தக சங்க நிர்வாகிகள், பள்ளி வாசல் பொறுப் பாளர்கள் திரளாக கலந்து கொண்ட னர். முன்னதாக அனைவரை யும் பண்ருட்டி இஸ்லாமிக் பைத்துல் மால் டிரஸ்ட் தலைவர் வக்கீல் இதயத்துல்லா வரவேற்றார். முடிவில் பைத்துல்மால் டிரஸ்ட் பி.எம்.டி.இ. நவாஸ் நன்றி கூறினார். தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு தொழுகை நடந்தது.

    Next Story
    ×