என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீரப்பன் (எ) பகலவன்
புதுவையில் இருந்து கடலூருக்கு மதுபானங்களை கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
- கடலூர் மஞ்சகுப்பம் ஆல்பேட்டை சோதனைசாவடி அருகே சோதனை செய்து கொண்டிருந்தனர்.
- மதுபாட்டில்கள், சாராயத்தை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் கடலூர் மஞ்சகுப்பம் ஆல்பேட்டை சோதனைசாவடி அருகே சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வேன் வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்த போது, புதுவை மாநில 6108 மதுபாட்டில்கள், 50 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் சேர்ந்த வீரப்பன் (எ) பகலவன் (வயது 46) , கத்திரி, ஆகியோர் இதனை கடத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக மதுபாட்டில்கள், சாராயத்தை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் வீரப்பன் (எ) பகலவன் மீது விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவில் 2 சாராய வழக்குகள், கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவில் 2 வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகள் உள்ளன.
இதையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வீரப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






