என் மலர்
உள்ளூர் செய்திகள்

திட்டக்குடியில் திருமணமான ஒரே ஆண்டில் பெண் தூக்கு போட்டு தற்கொலை
- கார்த்திக் (33). இஅபிநயா (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடை பெற்றது.
- அபிநயா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நாலாங்காடி தெருவை சேர்ந்தவர் வைரக்கண்ணு மகன் கார்த்திக் (33). வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியை சேர்ந்த அபிநயா (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடை பெற்றது. இவர்கள் இருவரும் கார்த்திக்கின் பெரியம்மா வெள்ளை யம்மாள் வீட்டில் வசித்து வந்தனர் இந்நிலையில் திருமணம் ஆகி 2 மாதத்தில் கார்த்திக் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். அபிநயா அதே வீட்டில் வசித்து வந்தார். வெளிநாட்டில் இருந்து கார்த்திக், அபிநயா மற்றும் அபிநயா அம்மா 3 பேரும் கான்பரிரன்ஸ் காலில் தொலைபேசியில் நேற்று இரவு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அபிநயா திடீரென போனை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த கார்த்திக், அபிநயாவை தொடர்பு கொள்ள மீண்டும் மீண்டும் முயற்சித்தும், அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. இதனை யடுத்து திட்டக்குடியில் உள்ள அவர்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு, வீட்டிற்கு சென்று அபி நயாவை பார்க்க கூறினார் அங்கு சென்ற உறவினர்கள் வீட்டில் உள்ள அபிநயா உட்புறமாக பூட்டியிருந்ததை கண்டு கதவை தட்டினார்கள். நீண்ட நேரமாக கதவு திறக்கப்ப டாதால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அபிநயா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.
அவரை மீட்ட உறவினர்கள் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திட்டக்குடி போலீசார், அபிநயா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திரும ணமான ஒரே ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் போலீசார் பரிந்துரைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






