என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் அனைத்து கட்சியனர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
கடலூரில் கவர்னரை கண்டித்து அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் அமர்நாத், சி.பி.ஐ. நகர செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தனர்
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேத்தியாத்தோப்பில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசை கண்டித்தும், கவர்னரின் பேச்சை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் அமர்நாத், சி.பி.ஐ. நகர செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தி, துணை மேயர் தாமரைச்செல்வன், சி.பி.எம் மாவட்ட செயலாளர் மாதவன், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட தலைவர் திலகர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதில் சி.பி.ஐ. மாவட்ட துணை செயலாளர் குளோப், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், த.வா.க நிர்வாகி அருள் ஒளி, தி.க. மாவட்ட செயலாளர் எழிலேந்தி, ம.ம.க மாவட்ட செயலாளர் ரஹீம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்கிரான் நன்றி கூறினார்.






