என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் ஊழியர்"

    • கடந்த 2019-ம் ஆண்டு கூட்டுறவு துறை அமைச்சர் அலுவலகத்தில் 6 மாதம் பணி செய்யும் வாய்ப்பு ரகுவிற்கு கிடைத்தது.
    • சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் தப்பிச் சென்ற 2 பேரும் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் பகுதியில் நடமாடியதை கண்டுபிடித்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் தெருவில் வசித்து வருபவர் ஜெயசந்திரராஜா (வயது 56). சிதம்பரத்தை அடுத்த மேல் அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இவர் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

    இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலை சேர்ந்த ரகு என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணி செய்து, அங்கிருந்து சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அப்போது கடந்த 2019-ம் ஆண்டு கூட்டுறவு துறை அமைச்சர் அலுவலகத்தில் 6 மாதம் பணி செய்யும் வாய்ப்பு ரகுவிற்கு கிடைத்தது. இதனால் அங்குள்ள அமைச்சரின் உதவியாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பழகும் வாய்ப்பு ரகுவிற்கு கிடைத்தது.

    இதையடுத்து உங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்களை கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் பல இடங்களில் பணியில் சேர்த்து விடலாம். இதற்கு பணம் பெற்று நாம் இருவரும் பிரித்துக் கொள்ளலாம் என்று ஜெயமூர்த்திராஜாவிடம் ரகு கூறியுள்ளார்.

    இதனை நம்பிய ஜெய மூர்த்திராஜா, சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களிடம் பணம் பெற்று ரகுவிடம் கொடுத் துள்ளார். வருடங்கள் ஓடின. ஆட்சி மாற்றமும் வந்தது. இதனால் பணம் கொடுத்த இளைஞர்கள் ஜெயமூர்த்திராஜாவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இவரும் ரகுவிடம் கேட்டுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த ரகு 150 நாட்கள் விடுமுறையில் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து கூட்டுறவுத் துறையில் இருந்து ரகு, தூத்துக்குடிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

    இதனை அறிந்த ஜெயமூர்த்திராஜா, பணம் கொடுத்த இளைஞர்களை அழைத்துக் கொண்டு தூத்துக்குடிக்கு சென்றார். விரைவில் பணத்தை திருப்பித் தருவதாக கூறிய ரகு, அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ரகு, பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரவின்குமார் (35) என்ப வரிடம் அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளார். பிரவின்குமாரின் மனைவி வக்கீல் என்பதால், அவர் உதவியுடன் திருவிடை மருதூர் முகமது யாசின் (28) என்ற குற்றவாளியை பிரவின்குமார் அடையாளம் கண்டார்.

    அவர் உதவியுடன் கூலிப்படையை வைத்து ஜெயமூர்த்திராஜாவை கொலை செய்ய ரகு திட்டமிட்டார். இதையடுத்து கடந்த மார்ச் 20-ந்தேதி பிரவின்குமார், முகமது யாசின் ஆகியோர் சிதம்பரம் வந்து ஜெயமூர்த்திராஜாவை கண்காணித்தனர். தொடர்ந்து கும்பகோணத்தைச் சேர்ந்த பாலு என்ற டாடி பாலு, மணிகண்டன், கட்ட பொம்மன் என்ற கலக்கி, ஆறுமுகம் ஆகியோார் மார்ச் 21-ந்தேதி சிதம்பரம் வந்தனர்.

    இவர்கள் 6 பேரும் 3 மோட்டார்சைக்கிளில் ஜெயமூர்த்தி ராஜாவை பின்தொடர்ந்தனர். காலை முதல் மாலை வரை இவரை பின்தொடர்ந்ததில் மார்ச் 21-ந்தேதி மாலை 6.30 மணியளவில் சிதம்பரம் மானாசந்தில் பீர் பாட்டிலால் தாக்கி கொல்ல முயற்சித்தனர். அப்போது ஜெயமூர்த்திராஜாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவரவே, பயந்த போன 6 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டனர்.

    இதில் ஜெயமூர்த்திராஜா கொல்லப்படவில்லை என்பதை அறிந்த ரகு, பிரவின் குமார், முகமது யாசின் ஆகியோர் மீது கோபமடைந்து திட்டியுள்ளார். விரைவில் தீர்த்து கட்டி விடுவதாக ரகுவிடம் உறுதியளித்த 2 பேரும் மாற்று திட்டம் திட்டினர்.

    அதன்படி அரியலூர் மாவட்ட வக்கீல் ஒருவர் மூலமாக முகமது யூனுஸ் என்ற அப்பாஸ் (20) என்ப வருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை அழைத்துக் கொண்டு மார்ச் 30-ந்தேதி சிதம்பரம் வந்தனர். அங்கு தங்கி ஜெயமூர்த்தி ராஜாவை 2 நாட்கள் கண்காணித்து, 3 இடங்களை தேர்வு செய்து, கொலை செய்ய திட்டம் வகுத்தனர்.

    அதன்படி கடந்த 4-ந்தேதி முதல் ஜெயமூர்த்தி ராஜாவை கொலை செய்ய பின் தொடர்ந்தனர். அனைத்து இடங்களிலும் பொது மக்களின் நடமாட்டம் இருக்கவே, கொலை செய்ய முடியாமல் திணறினர். இதையடுத்து இரவு நேரத்தில் வெளியில் வந்தால் கொலை செய்ய திட்டமிட்டு தனியார் விடுதி வாசலில் காத்திருந்தனர். இரவு முழுவதும் ஜெய மூர்த்திராஜா வெளியில் வரதாதால் கூலிப்படையினர் ஏமாற்றத்துடன் வெளியில் காத்திருந்தனர்.

    ஏப்ரல் 5-தேதி காலை விடுதியை விட்டு வெளியில் வந்தவர், காலை 10.30 மணியளவில் சிதம்பரம் அடுத்த மானாசந்து பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரை பின்தொடர்ந்த முகமது யூனுஸ், குருமூர்த்தி ஆகியோர் வழிமறித்து கத்தியால் வெட்டினர். இதில் தலையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து கத்தியால் வெட்ட முயற்சித்த போது அவரது கை விரல் துண்டானது. மேலும், இதில் ஜெயமூர்த்திராஜா ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார். அவர் இறந்து விட்டதாக நினைத்து, கூலிப்படையினர் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கூலிப் படையினரை தேடும் பணி நடைபெற்றது. குறிப்பாக அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்த போலீசார், அதில் கிடைத்த வீடியோவை வைத்து குற்றவாளிகள் அங்கிருந்து வெளியேறும் அனைத்து சாலைகளில் உள்ள சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்தனர். குறிப்பாக 7 மாவட்ட போலீசாரின் உதவியுடன் சி.சி.டி.வி.க்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் தப்பிச் சென்ற 2 பேரும் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் பகுதியில் நடமாடியதை கண்டு பிடித்தனர். உடனடியாக சிறிது நேரத்தில் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் வேறு உடையுடன், வேறு மோட்டார் சைக்கிளில் சென்றதை தனிப்படை போலீசார் கண்டறிந்தனர்.

    இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையினரை ஒவ்வொருவராக கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×