என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பொள்ளாச்சி செல்லும் கனரக வாகனங்கள் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை
    • பாலக்காடு சாலையில் இருந்து வரும் பஸ்கள் சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் செல்லலாம்.

    கோவை,

    உக்கடம்-ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்கு றிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது,

    உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கம் போல கரும்புக்கடை, ஆத்துப்பாலம் வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்லலாம். உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் கனரக வாகனங்கள் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    அந்த வாகனங்கள் பேரூர் புறவழிச்சாலையை அடைந்து புட்டிவிக்கி சாலை வழியாக சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடது புறம் திரும்பி பொள்ளாச்சி செல்லலாம்.

    உக்கடம் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் மட்டும் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப ஆத்துப்பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தால் பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் பேரூர் புறவழிச்சாலையை அடைந்து புட்டுவிக்கி சாலை வழியாக சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடது புறம் திரும்பி பொள்ளாச்சி செல்லலாம்.

    பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் நோக்கி வரும் இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆத்துப்பாலம் பாலக்காடு ரோடு மின்மயானம் அருகில் யு-டேர்ன் எடுத்து கரும்புக்கடை வழியாக உக்கடம் வந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    பொள்ளாச்சியில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக நகருக்குள் வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக குறிச்சி பிரிவில் இருந்து வலதுபுறம் திரும்பி போத்தனூர் கடைவீதி சந்திப்பில் இடது புறம் திரும்பி நஞ்சுண்டாபுரம் வழியாக ராமநாதபுரம் வந்து உக்கடம் செல்லலாம் அல்லது ஆத்துப்பாலத்தில் இருந்து இடதுபுறம் திரும்பி சுண்ணாம்பு காளவாய், புட்டுவிக்கி சாலை, சேத்துமா வாய்க்கால் வழியாக உக்கடம் வந்த டைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும். உக்கடத்திலிருந்து பாலக்காடு மார்க்கமாக செல்லும் வாகனங்கள், உக்கடத்திலிருந்து குனியமுத்தூர், கோவைப்புதூர், மதுக்கரை மார்க்கமாக பாலக்காடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    மாறாக பேரூர் புற வழிச்சாலையை அடைந்து புட்டுவிக்கி சாலை வழியாக சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பாலக்காடு சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள், பஸ் மற்றும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் கரும்புக்கடை வழியாக செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாறாக பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி நகருக்குள் வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் குனியமுத்தூரை அடுத்து சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி புட்டு விக்கி சாலை சேத்துமா வாய்க்கால் வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு மேம்பால பணிகள் முடிவடையும் வரை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆஸ்பத்திரிக்கு வந்து, தங்கள் மகன்களின் உடல்களை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    • தகவல் அறிந்ததும், அமைச்சர் முத்துசாமி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    வால்பாறை:

    கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 10 பேர் 5 மோட்டார் சைக்கிள்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர்.

    சோலையாறு நல்லகாத்து சுங்கம் என்ற இடத்துக்கு சென்ற அவர்கள், சோலையார் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது மாணவர் வினித் ஆற்றில் உள்ள சுழலில் சிக்கி கொண்டு சத்தம் எழுப்பினார்.

    அவரை காப்பாற்றுவதற்காக, தனுஷ், சரத், நபில், அஜய் ஆகியோர் ஆற்றுக்குள் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களும் சுழலில் சிக்கி வெளியில் வரமுடியாமல் தண்ணீரில் மூழ்கினர்.

    இதை கரையில் இருந்த சக நண்பர்கள் பார்த்து அபயகுரல் எழுப்பவே அருகே வசித்து வரும் பொதுமக்கள் ஓடி வந்தனர். மேலும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வினித், தனுஷ், அஜய், சரத், நபில் ஆகிய 5 பேரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர்களது உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து, தங்கள் மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது, அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்தவர்களில் வினித், தனுஷ், அஜய் ஆகியோர் கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தை சேர்ந்தவர்கள். இதில் வினித்தும், தனுசும் அண்ணன் தம்பிகள் ஆவர்.

    ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் சுற்றுலா சென்ற இடத்தில் இறந்ததால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும், அமைச்சர் முத்துசாமி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு இறந்த 5 கல்லூரி மாணவர்களின் உடலுக்கும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கிணத்துக்கடவு மணிகண்டபுரத்திற்கு சென்ற அவர் வினித், தனுஷ் ஆகியோரின் பெற்றோர்களான ராமகிருஷ்ணன்- கவிதா, அஜயின் பெற்றோர் ரவி-தெய்வானை ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    • கோவைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.கவினர் தயாராகி வருகிறார்கள்.
    • மாவட்டத்தின் எல்லையில் இருந்து, திருமண மண்டபம் வரைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரரும், கோவை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன்-ஹேமலதா தம்பதியின் மகன் டாக்டர் ஏ.எல்.விவேக், என்.ரவிசங்கர், ஆர்.சாந்தி தம்பதியின் மகள் டாக்டர் ஆர்.வைஷ்ணவி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று கோவையில் நடக்கிறது.

    கோவை ஈச்சனாரி செல்வம் மஹாலில் மாலை 6 மணியளவில் இந்த வரவேற்பு நிகழ்ச்சியானது நடக்கிறது.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்த உள்ளார்.

    இதற்காக அவர் சேலத்தில் இருந்து கார் மூலமாக இன்று மாலை கோவைக்கு வருகிறார். கோவை மாவட்ட எல்லையில் அவருக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தொண்டர்கள் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    வரவேற்பை ஏற்றுக்கொண்டு, அவர் காரில் ஈச்சனாரி பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு செல்கிறார்.

    அங்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் எஸ்.பி.அன்பரசன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். அதனை தொடர்ந்து அவர், மணமக்களை நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.

    இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் அ.தி.மு.கவினர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று முதலே கோவைக்கு வந்துள்ளனர்.

    இன்று மாலை நடக்கும் விழாவில், அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் பகுதி நிர்வாகிகளும் திரளாக பங்கேற்கின்றனர். அ.தி.முக.வினர் மட்டுமின்றி கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த உள்ளனர்.

    கோவைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.கவினர் தயாராகி வருகிறார்கள்.

    மாவட்டத்தின் எல்லையில் இருந்து, திருமண மண்டபம் வரைக்கும் அவருக்கு வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

    • ஆற்றில் தீயணைப்புத் துறை, போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடி வந்தனர்.
    • சுற்றுலா வந்த மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    சோலையாறு சுங்கம் ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை, போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில், மாணவர்கள் 5 பேரையும் சடலமாக மீட்டுள்ளனர்.

    உயிரிழந்த 5 பேரும் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் இருந்து சுற்றுலா வந்த மாணவர்கள் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

    • சேதுபதி அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆனது.

    கோவை:

    கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்வதற்காக மணமகன் தேடி ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து இருந்தேன். இதனையடுத்து சேதுபதி என்பவர் என்னை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். மேலும் பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருப்பதாக கூறி போலியாக அடையாள அட்டை தயார் செய்து எனக்கு அனுப்பினார்.

    சேதுபதி அடிக்கடி என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்தார். இதனையடுத்து நான் அவரது செல்போன் எண்ணை முடக்கினேன்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது. இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி என்னை தொடர்பு கொண்ட சேதுபதி நான் திருமணம் செய்ய போகும் வாலிபரின் நடவடிக்கைகள் சரியில்லை. அவர் நல்லவர் இல்லை. எனவே அவரை திருமணம் செய்ய வேண்டாம் என உண்மைக்கு மாறான தகவல்களை என்னிடம் கூறினார்.

    மேலும் அவர் நான் திருமணம் செய்ய போகும் வாலிபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார்.

    புகாரின் பேரில் ரேஸ் கோர்ஸ் போலீசார் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த சேதுபதி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் வரும்.
    • தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தியதை வாபஸ் பெற வேண்டும்.

    கருமத்தம்பட்டி:

    கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.

    கருமத்தம்பட்டி நால் ரோட்டில் ரோட்டில் இருந்து சோமனூர் பஸ் நிலையம் வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் மேற்கொண்டார்.

    பின்னர் சோமனூர் பஸ் நிலையத்தில் தொண்டர்கள் மத்தியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் வரும். இந்தியாவில் எங்கும் இல்லாத ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் அலுவலகம் தொடங்கி தாசில்தார் அலுவலகம் வரை ஊழல் மிகுந்து காணப்படுகிறது.

    சோமனூர் பகுதியில் ஏராளமான விசைத்தறி கூடங்கள், சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பீக் ஹவர் மின் கட்டணம், 250 கிலோ வாட் மின்சாரத்திற்கு மேல் வடுதல் கட்டணம், நிலை கட்டணம் உயர்வு என மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

    இதனை குறைக்க கோரி சிறுகுறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் இந்த தி.மு.க. அரசானது மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தியதை வாபஸ் பெற வேண்டும்.

    மகளிருக்கு உரிமை தொகை கொடுக்கிறோம் என்ற பெயரில், இங்கு ஒத்தையாக கொடுத்துவிட்டு, மற்றொரு புறம் கத்தை, கத்தையாக தமிழக அரசு கொள்ளையடித்து வருகிறது.

    திரைத்துறையை தங்கள் கையில் வைத்துக்கொண்டு, கருப்பு பணம் அனைத்தையும் வெள்ளையாக்கி வரும் வேலைகளில் தி.மு.க. ஈடுபட்டுள்ளது.

    பல்லடத்தில் குடிப்பதை தட்டி கேட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த அரசு டாஸ்மாக் கடைகளை மூடாது. இதனை மூடினால் அரசிற்கு இழப்பு ஏற்படும் என்பதை விட, தி.மு.க.வினர் நடத்தும் மதுபான ஆலைகள் மூலம் கிடைக்கும் வருமானம் நின்று விடும் என்பதால் இவர்கள் டாஸ்மாக் கடையை மூடமாட்டார்கள்.

    தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 5 சதவீதம் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. ஊழல் வழக்குகளில் சிக்கிய அமைச்சர்களை காப்பாற்றுவதிலேயே தமிழக அரசு மும்முரமாக இருந்து வருகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மகேந்திரன் சம்பவத்தன்று தனது மனைவியுடன் உறவினர் வீட்டு இல்ல நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்பா செட்டியார் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(35). சமையலர். இவர் சம்பவத்தன்று தனது மனைவியுடன் உறவினர் வீட்டு இல்ல நிகழ்ச்சிக்கு சென்றார்.

    பின்னர் வீட்டுக்கு திரும்பியதும் அவரது மனைவி தான் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை கழட்டி வீட்டில் உள்ள அலமாரியில் வைத்தார். ஆனால் அதன்பின்பு சில நாட்கள் கழித்து பார்த்தபோது அலமாரியின் லாக்கர் உடைக்கப்பட்டு கிடந்தது.

    உள்ளே வைத்திருந்த 7 பவுன் தங்க நகையை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

    • குழந்தையின் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி மோசடி.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது32).

    இவர் போத்தனூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வருகிறேன். எனது நிறுவனத்தில் ஜனா என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் அவரது 22 பவுன் தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அந்த நகையை மீட்க ரூ.43 ஆயிரம் பணம் தேவைப்படுவதாகவும், நகையை மீட்டதும் உங்களது நிறுவனத்திலேயே அந்த நகையை விற்பனை செய்வதாக கூறினார்.

    இதனைத் தொடர்ந்து ஜனாவை மீண்டும் தொடர்பு கொண்ட அந்தப் பெண் தனது குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு பணம் அவசரமாக தேவைப்படுகிறது என கூறி பணம் கேட்டார். இதனை உண்மை என நம்பிய ஜனா பணத்துடன் பெண் அழைத்த வங்கிக்கு சென்றார். அப்போது அங்கு வந்து பணத்தை பெற்றுக் கொண்ட பெண் பணத்துடன் அங்கிருந்து மாயமாகிவிட்டார்.

    எனவே அந்தப் பெண்ணை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.43 ஆயிரம் பணத்துடன் மாயமான அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

    • 7-ந் தேதி லாக்கர் சாவி காணாமல் போயிருந்தது.
    • செல்வபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா அம்பிகை (22). இவர் செல்வபுரம் போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 5.10.23 அன்று வீட்டில் உள்ள என்னுடைய நகைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் போட்டு பீரோவில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டி சாவியை பீரோவில் வேறு ஒரு இடத்தில் வைத்திருந்தேன்.

    அடுத்த நாள் நான் ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டும் என்பதால் பீரோவை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டேன். 7-ந் தேதி பீரோவை திறந்து லாக்கர் சாவியை எடுக்க பார்த்தபோது லாக்கர் சாவி காணாமல் போயிருந்தது.

    இது குறித்து கணவரிடம் சொன்னேன், கணவரும் லாக்கரை உடைத்து பார்த்தபோது, பீரோ லாக்கரில் வைத்திருந்த பிளாஸ்டிக் பெட்டியில் இருந்த மதிப்புள்ள 26¾ பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் வீடு முழுவதும் தேடினோம். எங்குமே கிடைக்காததால் செல்வபுரம் போலீசில் புகார் செய்தேன் என்று கூறினார். புகாரை பதிவு செய்த செல்வபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மர்மநபர் ஒருவர் பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார்.
    • சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    கோவை,

    கோவையை சேர்ந்த அழகு மீனாட்சி(48) என்பவர் சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

    கடந்த மாதம் எனது செல்போன் வாட்ஸ்-அப்புக்கு வந்த குறுந்தகவலில் கூகுள் மேப் குறித்து ரிவ்யூ கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து நான் 2 ரிவ்யூ கொடுத்ததற்கு ரூ.150 லாபம் கிடைத்தது. அதன் பின்னர் என்னை டெலிகிராம் குழுவில் இணைத்தனர்.

    அதன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். நானும் 12 கட்டங்களாக அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் சிறிது, சிறிதாக ரூ. 5 லட்சத்து 2 ஆயிரம் முதலீடு செய்தேன். ஆனால் அந்த நபர் கூறியபடி லாப தொகையை தரமால் மோசடி செய்து விட்டனர்.

    எனவே அந்த மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்.
    • தி.மு.க ஆட்சியின் ஒரே சாதனை ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை கடன் வாங்கியது தான்.

    கோவை,

    அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி சார்பில் செல்வபுரம் தெலுங்குபாளையம் முத்துமாரியம்மன் கோவில் அருகே பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு 76-வது வட்ட செயலாளர் கேபிள் கருப்புசாமி தலைமை தாங்கினார்.

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் டி.கருப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் டிபி.வேலுசாமி, ராஜா என்ற ராமமூர்த்தி, டி.சக்திவேல், பகுதி செயலாளர்கள் தி.மதனகோபால், வி.குலசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி மற்றும் கொள்கை பரப்பு துணை செயலாளரும், திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ரவி மரியா, பழக்கடை மூர்த்தி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் டி.லட்சுமி–காந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முன்னதாக விழாவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதா வது:-

    எடப்பாடியார் பழனி சாமி முதல்-அமைச்சராக இருந்த போது கோவை மாவட்டத்திற்கு கேட்ட திட்டங்களை எல்லாம் தந்தார்.

    அ.தி.மு.க ஆட்சியில் கோவைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் 2½ ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் எந்த திட்டங்களையும் கோவைக்கு கொண்டு வரவில்லை.

    தி.மு.க ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி உயர்வு என அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர்.காவிரி பிரச்சினைக்காக திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராடாமல் உள்ளனர்.

    கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஏமாந்து வாக்களித்ததாக மக்கள் கூறுகிறார்கள். தி.மு.க ஆட்சியின் ஒரே சாதனை ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை கடன் வாங்கியது தான்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம். எப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 200 தொகுதிக்கு மேல் வென்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் என்.கே.செல்வ துரை, எஸ்.மணிமேகலை, என்.எஸ்.கருப்புசாமி, ஜிகே.விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ.சந்திரசேகர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் டி.சி.பிரதீப், பொதுக்குழு உறுப்பினர் சுசிலா மாணிக்கராஜ், பேரூராட்சி கழக செயலாளர்கள் ஜெகநாதன், கே.கிருஷ்ணராஜ், ஏ.சுந்தர் ராஜ், ரவி(எ) காளிச்சாமி, ஆடலரசு, கே.எஸ்.ஷங்கர், ஏ.விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.மோகன்ராஜ், ஏ.செல்வராஜ், டி.கே.கார்த்திகா பிரகாஷ், பி.கனகராஜ், மற்றும் சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சிவகுமார், மாணிக்கராஜ், பாசறை நிஷ்கலன், ஆவின் எஸ்.முருகன், செபி செபாஸ்டியன், முத்துஇள ங்கோவன், சுரேஷ்குமார், அப்துல்ரகுமான், வட்ட கழக செயலாளர்கள் சித்திரை செல்வராஜ், ஏ.செல்லப்பன், ஜூனியர் ராஜா, எம்.புல்கான், கே.பி.பாஸ்கரன், எம்.ஜெகதீசன், விவேகானந்தன், எஸ்.ஜெகதீஷ், மணல் நாராயணன், எஸ்டி.கதிரேசன், ரவி நடராஜன், கே.சுப்பிரமணியம், சி.ஜனார்த்தனன், எஸ்.சி.செல்வராஜ், ஹரி, பிரகாஷ், வினோத், கே.ஏ.காட்டுத் துரை, கேபிள் ஐ.பஷீர், என்.வேலுமயில், மு.குஞ்சாலி, கரும்புக்கடை முஜி, தங்கம் ரகூப், கேபிள் சரவணன், சி.கே.விஸ்வநாதன், பத்மநாபன், டி.கே.கண்ணையன், சி.தர்மராஜ் மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பகுதி துணை செயலாளர் கவுதம் நன்றி கூறினார்.

    • கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பங்கேற்ற தொண்டர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    கோவை,

    கோவை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இஸ்ரேல்-பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கோவை குமணன் தலைமை தாங்கினார்.

    இதில், பங்கேற்ற தொண்டர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாநகர துணை செயலாளர் கோட்டை சேது, கோவை ராசா, தளபதி சபிக், சிறுத்தை ஹக்கீம், கோவை தமிழன், கோவை சம்பத், வை.குடியரசு, துரை, இளங்கோவன், மண்ணரசன், கண்ணகி, கரிகாலன், சீலா ராஜன், மாணிக்கம், பாலகிருஷ்ணன், சந்தோஷ் மருது, ஆதிசங்கர், சூர்யா, ஆத்துப்பாலம் அந்தோணி, சாலமன், சத்யா, சித்ரா, கவிதா, ரேவதி, ரஞ்சிதா, ஜோதி, கோவை கலை, வினோத், ராஜ்கமல், பிரபாகரன், இளவேனில், நிஷாந்த், ஆட்டோ ஜமால், எச்.அப்பாஸ், சிறுத்தை சிவா, அருள்மொழி, ஷகீர், இஷாக், ஹக்கீம், முகிலன், கோகுல், ஆட்டோ மணிகண்டன், பிரபாகரன், மக்கள் அதிகாரம் ராஜன், ஆட்டோ ராகவன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×