என் மலர்
உள்ளூர் செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பங்கேற்ற தொண்டர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கோவை,
கோவை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இஸ்ரேல்-பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கோவை குமணன் தலைமை தாங்கினார்.
இதில், பங்கேற்ற தொண்டர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாநகர துணை செயலாளர் கோட்டை சேது, கோவை ராசா, தளபதி சபிக், சிறுத்தை ஹக்கீம், கோவை தமிழன், கோவை சம்பத், வை.குடியரசு, துரை, இளங்கோவன், மண்ணரசன், கண்ணகி, கரிகாலன், சீலா ராஜன், மாணிக்கம், பாலகிருஷ்ணன், சந்தோஷ் மருது, ஆதிசங்கர், சூர்யா, ஆத்துப்பாலம் அந்தோணி, சாலமன், சத்யா, சித்ரா, கவிதா, ரேவதி, ரஞ்சிதா, ஜோதி, கோவை கலை, வினோத், ராஜ்கமல், பிரபாகரன், இளவேனில், நிஷாந்த், ஆட்டோ ஜமால், எச்.அப்பாஸ், சிறுத்தை சிவா, அருள்மொழி, ஷகீர், இஷாக், ஹக்கீம், முகிலன், கோகுல், ஆட்டோ மணிகண்டன், பிரபாகரன், மக்கள் அதிகாரம் ராஜன், ஆட்டோ ராகவன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






