என் மலர்
கோயம்புத்தூர்
- இன்று கத்திபோடுதல் நடக்கிறது
- நவராத்திரி கொலுவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை வெள்ளக்கினரில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் அமைந்து உள்ளது. இங்கு தற்போது நவராத்திரி கொலு விழா நடைபெற்று வருகிறது.
இதன்ஒருபகுதியாக கடந்த 15-ந்தேதி தொடங்கிய விழாவில் சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பண்ணாரி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர்.
நேற்று மாலை தச்சந்தோட்டம் பகுதியில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனை சப்பரத்தில் ஏற்றும் முன்பாக பக்தர்களின் கத்தி போடும் நிகழ்வு நடை பெற்றது.
தொடர்ந்து ஆலங் கொம்பு அழகு வீரக்குமாரர்களின் கத்தி போடும் பரவச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
பின்னர் கோவிலில் தீர்த்தபிரசாதம், தீபாரா தனை, அன்னதானம் நடைபெற்றது. இன்று களர் தோட்டத்தில் இருந்து சாமுண்டி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் வெள்ளை தாமரை வீரகுமாரர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
நவராத்திரி கொலுவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் அறிவிப்பு
- கல்லிடைக்குறிச்சிக்கு இரவு 7.31 மணிக்கு வந்து, அங்கிருந்து இரவு 7.32 மணிக்கு புறப்பட்டு செல்லும்
கோவை,
திருநெல்வேலி-மேட்டுப் பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில்(எண்:06030) ஞாயிற்றுக்கிழமை தோறும் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
இதேபோல் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில்(எண்:06029) திங்கட்கிழமை தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.
இந்த நிலையில் சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதவாது:-
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையிலான சிறப்புரெயில் தற்போது செல்லும் வழியில் உள்ள நிறுத்தங்களுடன் கூடுதலாக கல்லிடைக்குறிச்சியில் நிலையத்துக்கு இரவு 7.31 மணிக்கு சென்றடைந்து, அங்கிருந்து இரவு 7.32 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இதேபோல் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமைகளில் காலை 5.51 மணிக்கு கல்லிடைக்குறிச்சி ரெயில்நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து 5.52 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பருப்பு, முட்டை, அரிசியை தின்று சேதப்படுத்தி விட்டு சென்றது
- யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள், மளிகை கடைகள், சத்துணவு மையங்கள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வால்பா றை அருகே கருமலை எஸ்டேட் பகுதிக்கு நேற்று இரவு வனத்தில் இருந்து வெளியேறிய 9 யானைகள் கூட்டமாக வந்தது.
ஊருக்குள் சுற்றி திரிந்த யானைகள் கூட்டம், அங்குள்ள நடுநிலைப்பள்ளியின் அருகே சென்றது. பின்னர் அங்குள்ள சத்துணவு மையத்தின் ஜன்னல் கதவை உடைத்து, உள்ளே இருந்த பருப்பு, முட்டை, அரிசி, போன்றவைகளை சாப்பிட்டு சத்துணவு மை யத்தை சேதப்படுத்தியது.
மேலும் பொருட்களையும் துதிக்கையால் தூக்கி வீசி சேதப்படுத்தி சென்றது.
தகவல் அறிந்து வந்த வால்பாறை வனத்துறையினர் யானைகளை அப்பகுதியில் இருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர். யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து வக்கிரம்
- கூலித்தொழிலாளி மீது போக்சோ வழக்கு
கோவை,
கோவையை சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவன் கடந்த 7-ந் தேதி தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு வீட்டிற்கு வெளியே சிறுவன் விளையாடி கொண்டருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ராமராஜ் என்பவர் சிறுவனிடம் வந்து நைசாக பேச்சு கொடுத்தார். அவர் சிறுவனிடம் வா நாம் விளையாட போகலாம் என அழைத்தார்.
சிறுவனும் விளையாட தானே என நினைத்து அவருடன் சென்றார். ராமராஜ் அந்த பகுதியில் உள்ள பள்ளியின் பின்புறம் ஆட்கள் நடமாட்டம் இல் லாத பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து சிறுவ னுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்தார். மேலும் இதனை வெளியில் கூறி னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.இதனால் பயந்து போன சிறுவன் யாரிடமும் இதனை கூறாாமல் இருந்து வந்தான். இந்த நிலையில் சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்படவே அவரது தாயார் விசாரித்தார்.
அப்போது சிறுவன் தனக்கு நடந்த சம்பவத்தை தாயாரிடம் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் ராமராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசை வார்த்தைகளை தெரிவித்து பலாத்காரம் செய்தது அம்பலம்
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(20). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஜெகதீசுக்கு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி சிறுமி தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஜெகதீஷ், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு யாரும் இல்லாத போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை தெரிவித்து, அவரை பலாத்காரம் செய்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவரை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டதும் பெற்றோர் அதிர்ச்சியாகினர். சம்பவம் குறித்து தங்களது மகளிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் ஜெகதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாதாள சாக்கடை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
- மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் சாமன்னா தலைமை நீரூற்று நிலையம் செயல்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்தார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ.100.7 கோடி மதிப்பில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
அப்போது பாதாள சாக்கடை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் 4ஆம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.1,100 கோடி திட்ட மதிப்பில் மேட்டுப்பாளையம் நகராட்சி நீரேற்று நிலையம் அருகே பவானி ஆற்றங்கரையில் இத்திட்டம் நடைபெற்று வருகிறது.
அதேபோல் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் சாமன்னா தலைமை நீரூற்று நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து திருப்பூர் குடிநீர் திட்டம் கோவை தொண்டாமுத்தூர் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட பணிகளையும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அங்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மண்டல இயக்குநர் இளங்கோவன், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நகராட்சி ஆணையாளர் அமுதா, மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி, துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
- ஆற்றுப்பகுதியில் குளித்து விளையாடுவதற்கு நன்றாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்து வருகிறார்கள்.
- வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையானது மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இங்கு தேயிலை தோட்டங்கள், நீர்நிலைகள், காண்போரை கவரும் வகையில் உள்ளன. இவற்றை கண்டு ரசிக்க தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் கிணத்துக்கடவு அருகே உள்ள மணிகண்டபுரத்தை சேர்ந்த வினித்(வயது20), தனுஷ்(20), அஜய்குமார்(20), பெரியகளந்தையை சேர்ந்த சரத்(20), உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த நபில்(20) ஆகியோர் தனது நண்பர்கள் 10 பேருடன் வால்பாறைக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்தனர்.
அவர்கள் தேயிலை தோட்டங்களை சுற்றி பார்த்து விட்டு, சோலையாறு சுங்கம் நல்லகாத்து ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 5 பேரும் ஆற்று சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நல்ல காத்து ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை பகுதியில் வனப்பகுதியில் இருந்து வரும் ஆறு கூலாங்கள் பகுதிக்கு சென்று சோலையார் எஸ்டேட் பகுதி வழியாக சென்று மீண்டும் நல்லகாத்துப் பகுதி வழியாக வனப்பகுதிக்கு செல்கிறது.
இந்த ஆற்றுப்பகுதியில் குளித்து விளையாடுவதற்கு நன்றாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்து வருகிறார்கள்.
தற்போது மாணவர்கள் பலியானதை அடுத்து நேற்று முதல் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- குறுந்தகவல் அனுப்பிய 33 ஆயிரம் பேரிடம் நேரடி களஆய்வு
- துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவு
கோவை,
தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை திட்டம் செப்.15-ல் தொடங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 கார்டுதாரர்கள் இதற்கு விண்ணப்பித்து இருந்தனர். விதிமுறைக்கு உட்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்து வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. தகுதி இருந்தும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக ஏராளமான பெண்கள் நினைத்ததால், அந்த பெண்கள் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இதுதவிர விண்ணப்பம் பெற்றவர்களில், பலரும் பூர்த்தி செய்து விட்டு கொடுக்காமல் இருந்தனர். அவர்களுக்கும் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவ லகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் அமைத்த உதவி மையங்களுக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து நிராகரிப்பு செய்ததற்கான காரணங்களை கேட்டறிந்து, மேல்முறையீடு செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 64 ஆயிரம் பெண்கள் இதுவரை மேல்முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே பெறப்பட்டவற்றில் பரிசீலனையில் உள்ளது என குறுந்தகவல் அனுப்பப் பட்ட 33 ஆயிரம் விண்ணப்பதாரர்களின் தகுதியை கள ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.
மேலும் மாநகராட்சி பகுதியில் அதிகமானோர் விண்ணப்பித்து இருப்பதால் உதவி கமிஷனர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, களப்பணிக்கு பில் கலெக்டர்களை அனுப்ப அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.
இந்த பணிக்கு மாவட்ட அளவில் 438 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறையினர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உரிமை தொகை கேட்டு 64 ஆயிரம் பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே 33 ஆயிரம் விண்ணப்பங்கள் என மொத்தம் 97 ஆயிரம் பேரின் விவரங்கள் குறித்து கள ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
கள ஆய்வுக்கு செல்லும் ஊழியர்களுக்கு சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மேல்முறையீடு செய்தவர்களின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு சொந்தவீடு இருக்கிறதா? வருமான வரி செலுத்துபவர் வீட்டில் இருக்கிறாரா? கார் வைத்துள்ளனரா? போன்ற கேள்விகளை கேட்டு பதிவு செய்வார்கள்.
அவர்களது பதிலில் திருப்தி இல்லை என்றால், வி.ஏ.ஓ., அல்லது பில் கலெக்டர்கள் நேரில் சென்று கள ஆய்வு செய்து இதற்கென உருவாக்கியுள்ள பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்வார்கள்.
துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். விண்ணப்பங்கள் அதிகமாக இருப்பதால் 45 நாட்கள் ஆக வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- யாரோ சிலர் விலை போயிருக்கலாம். நம் லட்சியத்தை நிறைவேற்றும் வரை ஓயமாட்டோம் .
- டிசம்பர் 31-ந் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்கப்படும் என நிர்வாகிகள் சொல்லி இருக்கின்றனர்.
கோவை,
கோவை ஒருங்கிணைந்த மாவட்ட அ.மு.மு.க செயல் வீரர்கள் கூட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-
2017-ம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழி நடத்துகின்றனர். யாரோ சிலர் விலை போயிருக்கலாம். நம் லட்சியத்தை நிறைவேற்றும் வரை ஓயமாட்டோம் . பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அ.ம.மு.க இருக்காது என சிலர் சொல்கின்றனர்.
இது டெண்டர் பார்டிகளால் உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. தொண்டர்களால் உருவாக்க இயக்கம்.பழனிச்சாமி ஆட்சியை இது அடிமைகளின் ஆட்சி என தூக்கி எறிந்து விட்டு வந்தவர்கள் நீங்கள். இந்த இயக்கம் உயிரோட்டமாக இருக்க காரணம் ஓரே லட்சியம். ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம்.
டிசம்பர் 31-ந் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்கப்படும் என நிர்வாகிகள் சொல்லி இருக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரகணக்கானோர் பங்கேற்றனர்.
- சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கோரி தர்ணா
- கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடருமென அறிவிப்பு
கோவை,
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரமா கும் குப்பைகளை அகற்று வது உள்ளிட்ட பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மட்டுமின்றி, ஒப்பந்த தூய்மை பணியா ளர்களும் பணியாற்றி வருகின்றனர். அதன்படி ஒப்பந்த தூய்மை பணியா ளர்கள் 2,500க்கும் மேற் பட்டோர் உள்ளனர்.
அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும், கலெக்டர் அறிவித்த ரூ.721 சம்பள உயர்வை வழங்க கோரியும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று காலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கோவை அவினாசி சாலை யில் உள்ள வ.உ.சி மைதா னத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை அடுத்து, அவர்களுடன் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரவில் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது.
ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைய டுத்து இன்று 2-வது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்திற்கு கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்க தலைவர் தமிழ்நாடு செல்வம், தூய்மை பணியாளர்கள் வாழ்வுரிமையை மீட்டெ டுக்கும் சங்கங்களின் கூட்ட மைப்பின் தலைவர் வினோத் தலைமை தாங்கி னர்.
போராட்டத்தில் ஈடு பட்ட தூய்மை பணியா ளர்கள் தங்களது கோரிக் கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறியதா வது:-
பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை நிரந்தர தூய்மை பணியாளர்களாக மாற்ற கோரிக்கை விடுத் தோம்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சம்பள உயர்வு கேட்டோம். கலெக்டர் ரூ.721 சம்பளம் நிர்ண யித்தார். அதை கூட இது வரை எங்களுக்கு வழங்க வில்லை.
எனவே நேற்றுமுதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.
நேற்று அதிகாரிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இன்று 2-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொட ரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக வ.உ.சி.மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒப்பந்த தூய்மை பணி யாளர்கள் போராட்டத்தால் மாநகரில் குப்பைகள் தேங்கும் நிலை உருவாகி யுள்ளது. இருந்தபோதிலும் மாநகராட்சி நிர்வாகத்தினர், நிரந்தர தூய்மை பணியா ளர்களை கொண்டு மாந கரில் குப்பைகள் தேங்கா தவாறு பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.
- கோவையில் ஆயுதபூஜை கோலாகலம்
- மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதுகிறது
கோவை,
கோவை மாவட்டத்தில் நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபடுகின்றனர்.
அம்மன் கோவில்களிலும் தினமும் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. இந்த நிலையில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை ஆகியவை வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
ஆயுதபூஜையை முன்னிட்டு பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள், கடைகள் என அனைத்தும் மலர்கள், வண்ண காகிதங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு வாழை தோரணங்கள் அமைத்து வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபடுவர்.
வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை வருவதால் இன்றே பல நிறுவனங்கள், கம்பெனிகளில் இன்றே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஆயுத பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொரி, பொரிகடலை, அவல், வாசலில் கட்டப்படும் வாழை இலை, அலங்காரம் செய்வதற்கு தேவையான தென்னங்குருத்து, மாவிலை தோரணங்கள் போன்றவை விற்பனைக்கு வந்துள்ளன.
இதுதவிர பழங்கள், பூக்கள் விற்பனையும் மார்ககெட்டில் சூடுபிடித்துள்ளது. மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.
பொதுமக்கள் அங்கு பூஜைக்கு தேவையான பொரி, பொரிகடலை, அவல், வெத்தலை, பாக்கு, ஆப்பிள், மாதுளை, அன்னாசி பழங்கள், வாழைப்பழங்கள், மல்லிகை, செவ்வந்தி, ஜாதிப்பூ உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர். இதேபோல் பேக்கரிகளிலும் இனிப்பு பலகாரங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
கோவை பூ மார்க்கெட்டில் ஆயுதபூஜை காரணமாக பூக்கள், பழங்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.
கோவை பூ மார்க்கெட்டில் விற்பனை யாகும் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-
செவ்வந்தி-ரூ..320, சம்பங்கி-ரூ.300, அரளி-ரூ.480, ரோஜா-ரூ.320, தாமரை 1-ரூ.50, செண்டுமல்லி-ரூ.100, முல்லை-ரூ.600, கோழிகெண்டை-ரூ.100, மஞ்சை அரளி-ரூ.450, மரிகொழுந்து 1 கட்-ரூ.40க்கு விற்பனையாகிறது.
இதுதவிர வாழைகன்று 1-ரூ.30, வெள்ளை பூசணி 1 கிலோ ரூ.35, பொரி 1 பக்கா-ரூ.30. பொரிகடலை- 1 கிலோ ரூ.200,மாவிலை- 1 கட்டு ரூ.20, தென்னங்குருத்து- 4 எண்ணம் ரூ.20, எலுமிச்சை- 1 கிலோ ரூ.120
மாதுளை-1 கிலோ ரூ.220, ஆப்பிள்-1 கிலோ ரூ.180, சாத்துக்குடி-1 கிலோ ரூ.100, திராட்சை-1 கிலோ ரூ.200, கொய்யா-1 கிலோ ரூ.200, தேங்காய்-1 கிலோ ரூ.50க்கு விற்பனையாகி வருகிறது.
- திருமணம் செய்வதாக லண்டன் வாலிபர் ஏமாற்றினார்
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கோவை,
கோவை வடவ்ளி அருகே உள்ள பிரபாநகரை சேர்ந்தவர் 32 வயது இளம் பெண். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். தனியாக வசித்த எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக லண்டனை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நாங்கள் நட்பாக பழகி வந்தோம்.
அப்போது அவர் என்னி டம் விமான ஓட்டியாக உள்ளதாக கூறினார். மேலும இந்திய பெண்ணை திருமணம் செய்ய விரும்பு வதாகவும் என்னிடம் கூறினார். இதனையடுத்து நான் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடன் பழகி வந்தேன். இந்தநிலையில் அவர் லண்டனின் இருந்து பரிசு பொருட்கள் மற்றும் தங்கத்தை அனுப்புவதாக கூறினார்.
மேலும் என்னை நேரில் வந்து பார்க்க வருவதாகவும் கூறினார். கடந்த 13-ந் தேதி அவர் என்னை தொடர்பு கொண்டு மும்பைக்கு வந்து விட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் இருந்து சுங்க இலாக்கா அதிகாரி என ஒருவர் என்னை தொடர்பு கொண்டனர்.
அப்போது அவர்கள் உங்களது பெயரை கூறி லண்டனில் இருந்து ஒருவர் வந்து உள்ளார். அவர் சில பரிசு பொருட்கள் மற்றும் தங்கம் உள்பட ரூ.68 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொண்டு வந்துள்ளார். அதற்கு வரியாக ரூ.16 லட்சத்து 43 ஆயிரத்து 600 செலுத்த வேண்டும் என்றார். இதனையடுத்து நான் வாலிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது என்னிடம் தற்போது பணம் இல்லை. உடனடியாக நீ பணத்தை அனுப்புமாறு கூறினார்.
இதனை உண்மை என நம்பிய நான் பணத்தை அவர்கள் கூறி வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் அந்த வாலிபரின் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எந்த பரிசு பொருட்களும் எனக்கு வந்து சேரவில்லை. என்னை நம்ப வைத்து அவர் மோசடி செய்து விட்டார். எனவே என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் ரூ.16 லட்சத்து 43 ஆயிரத்து 400 பணத்தை மோசடி செய்த லண்டன் வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.இளம்பெண் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






