என் மலர்
நீங்கள் தேடியது "Navratri Kolu"
- முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.
- ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவில் சக்தி வழிபாட்டால் நலம் யாவும் வந்து சேரும். நல்வாழ்வு தரும் நவராத்திரியில் கொலு படிகள் அமைக்கும் முறை குறித்து குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.
முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.
இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும்.
நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள் இருக்க வேண்டும்.
ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.

எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடு நாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.
- இன்று கத்திபோடுதல் நடக்கிறது
- நவராத்திரி கொலுவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை வெள்ளக்கினரில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் அமைந்து உள்ளது. இங்கு தற்போது நவராத்திரி கொலு விழா நடைபெற்று வருகிறது.
இதன்ஒருபகுதியாக கடந்த 15-ந்தேதி தொடங்கிய விழாவில் சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பண்ணாரி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர்.
நேற்று மாலை தச்சந்தோட்டம் பகுதியில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனை சப்பரத்தில் ஏற்றும் முன்பாக பக்தர்களின் கத்தி போடும் நிகழ்வு நடை பெற்றது.
தொடர்ந்து ஆலங் கொம்பு அழகு வீரக்குமாரர்களின் கத்தி போடும் பரவச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
பின்னர் கோவிலில் தீர்த்தபிரசாதம், தீபாரா தனை, அன்னதானம் நடைபெற்றது. இன்று களர் தோட்டத்தில் இருந்து சாமுண்டி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் வெள்ளை தாமரை வீரகுமாரர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
நவராத்திரி கொலுவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.






