என் மலர்
கோயம்புத்தூர்
- பாபு சிவேஷ், தனது நண்பர் ரமேசை வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் சேர்ந்து மது குடித்தார்.
- கொடுமை தாங்க முடியாமல் இருந்த இளம்பெண் விக்னேஷ்பாபுவிடம் இருந்து தப்பித்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வந்தார்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக, இளம்பெண் கணவரை பிரிந்து அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார்.
இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாபு சிவேஷ் ( வயது 26) இளம்பெண் தனிமையில் வசிப்பதை அறிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் கூறி தன்னுடன் வருமாறு அழைத்தார். பின்னர் இளம்பெண்ணிடம் அவர் திருமணம் செய்து கொள்கிறேன், உன்னை ராணிபோல் பார்த்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என நம்பிய இளம்பெண் பாபு சிவேஷ்சுடன் மேட்டுப்பாளையத்துக்கு சென்றார்.
மேட்டுப்பாளையத்தில் ராமசாமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து இளம்பெண்ணை பாபு சிவேஷ் தங்க வைத்தார்.
அதன் பின்னர் பாபு சிவேஷ், தனது நண்பர் ரமேசை வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் சேர்ந்து மது குடித்தார். பின்னர் அவர் இளம்பெண்ணை மிரட்டி 2 பேரும் ஒன்றாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்த இளம்பெண் நடந்த சம்பவங்களை யாரிடமும் சொல்லாமல் இருந்தார்.
மேலும் 2 பேரும் மாதக்கணக்கில் வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண்ணை அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதோடு விடாமல் அந்த இளம்பெண்ணை கோவை மற்றும் ஊட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு அழைத்து சென்று பலருடன் உடலுறவு கொள்ள வைத்து பணம் சம்பாதித்து வந்தனர்.
கொடுமை தாங்க முடியாமல் இருந்த இளம்பெண் விக்னேஷ்பாபுவிடம் இருந்து தப்பித்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வந்தார். பின்னர் நடந்த சம்பவங்களை இளம்பெண் உறவினர்களிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய ராகுல், நீலகிரி மாவட்டம் கூடலூர் சேரம்பாடி சேர்ந்த செந்தில்குமார் (36) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு சிவேசை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரமேஷ் என்பவர் உள்பட பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
- எச்சரிக்கை விடுத்தும் கேளாததால் பொதுமக்கள் ஆத்திரம்
- பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்த 31 வயது இளம்பெண். கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.
சம்பவத்தன்று சிறுமி பக்கத்து வீட்டை சேர்ந்த மற்றொரு சிறுமியுடன் சேர்ந்து வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் சிறுமிகளை நோக்கி ஆபாச சைகை காட்டினார்.
இதனால் பயந்த சிறுமிகள் இதுகுறித்து அவர்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆத்திரம் அடைந்த சிறுமிகளின் உறவினர்கள் முதியவரின் வீட்டிற்கு சென்றனர்.
முதியவரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் முதியவரை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் அவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் முதியவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுற்றுலா சென்ற இடத்தில் 5 கல்லூரி மாணவர்கள் பலி
- குளிக்கவும், செல்பி எடுக்கவும் தடை
வால்பாறை,
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா சென்ற 5 கல்லூரி மாணவர்கள் கடந்த 20-ந் தேதி அன்று ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர்.
எனவே ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப்பகுதிகளல் குளிப்பது, புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுப்பதை குழந்தைகள், சுற்றுலாபயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருப்பதினால் பல நேரங்களில் நீர்நிலைகளில் அடித்து சென்று உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு வனத்துறை மற்றும் வால்பாறை நகராட்சி மூலம் வால்பாறை, அதனை சுற்றியுள்ள ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைகளான நீர்வீழ்ச்சி எஸ்டேட் நதி, கருமலை எரச்சை பாறை, கூலங்கல் ஆறு, சோலையார் வளைவு, ஸ்டான்மோர் நதி, கெஜமுடியில் கூடுதோரை, வெள்ளைமலை சுரங்கப்பாதை, கெஜமுடி சுரங்கப்பாதை, சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தாளனார் நீர்வீழ்ச்சி, காதம்பரை அணை, மேல் ஆழியாறு அணை, காதம்பரை 501 சுரங்கப்பாதை, சந்தன அணை, சோலையார் அணை முன்பக்க ஆறு, சின்னக்கல்லார், நல்ல முடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு, வாட்டர்பால்ஸ் எஸ்டேட்டில் புலி பள்ளத்தாக்கு, அனலி நீர்வீழ்ச்சி, மனோம்பள்ளியில் தங்கவேல் ஆறு ஆகிய 20 இடங்களில் அபாய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.
எனவே இந்த இடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், இந்த ஆற்றுப்பகுதி மிகவும் ஆழமானதாகவும், ஆபத்தானதாகவும் மற்றும் சுழல்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இப்பகுதியில் சென்று குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி இல்லை. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவவாறு அவர் கூறி உள்ளார்.
- வீட்டுக்கு விளையாட அழைத்து சென்று அத்துமீறல்
- போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்
கோவை,
கோவை அருகே உள்ள செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து இளம்பெண் அவரது 14 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
சிறுவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி ஆசிரியை தனது மகனுடன் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று மாணவன் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஆசிரியையின் உறவினராக கட்டிட தொழிலாளி ராம்ராஜ் (வயது 48) என்பவர் மாணவரை விளையாடலாம் வா என அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து ராம்ராஜ், மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி மாணவரை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனால் பயந்த மாணவன் நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறாமல் இருந்தார்.
அதன் பின்னர் மாணவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது தாய் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அப்போது மாணவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவருக்கு பாலியல் தொல்லை நடந்து இருப்பது தெரிய வந்தது. இதனால் மாணவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து டாக்டர்கள் ஆசிரியையிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர் அதிர்ச்சி யடைந்தார். பின்னர் ஆசிரியை பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 14 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி ராம்ராஜை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ராம்ராஜூவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
- தி.மு.க. முன்னாள் நகரமன்ற தலைவர் கோழி கடை கணேஷ் ஏற்பாடு
- ஆற்றில் உயிர்பலியை தடுக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களுக்கு முன்பு கோவை பகுதியில் இருந்து வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த 10 கல்லூரி மாணவர்களின் 5 மாணவர்கள் ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி இறந்தனர்.
இதையடுத்து கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி அப்பகுதியை பார்வையிட்டார்.
ஆற்றில் உயிர் பலியை தடுக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வால்பாறை முன்னாள் நகரமன்ற தலைவர் கோழி கடை கணேசன் அப்பகுதியில் தடுப்பு வேலி அமைத்து தருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தல் படியும், மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆலோசனை படியும் நகர செயலாளர் சுதாகர் முன்னிலையில் அப்பகுதியில் தடுப்பு வேலி அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
எஸ்டேட் மேலாளர், மற்றும் தி.மு.க. முன்னாள் நகரமன்ற தலைவர் கோழி கடை கணேஷ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
- தினமும் மது குடித்து விட்டு வந்தது தனலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்.
- 4 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்வதற்காக வந்த தனலட்சுமியை மீட்டு இல்லத்துக்கு அழைத்து சென்றார்.
கோவை:
திண்டுக்கல் மாவட்டம் காம்பிளியாம்பட்டி அருகே உள்ள சின்னகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 29). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு வேணிஸ்ரீ (10), சுபஸ்ரீ (8), மதுமிதா (6), யோக ஸ்ரீ (4) ஆகிய 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் 4 பெண் குழந்தைகள் உள்ளதால் செல்வம் அவரது 4 வயது மகள் யோகஸ்ரீயை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதனை அறிந்த தனலட்சுமி மிகுந்த மனவேதனை அடைந்தார்.
பின்னர் அவர் தனது கணவர், குழந்தையை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வத்தை அழைத்து அவரை கண்டித்து அனுப்பினர்.
போலீசில் புகார் செய்ததால் ஆத்திரம் அடைந்த அவர் தினமும் மது குடித்து விட்டு வந்தது தனலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டடார்.
கணவரின் கொடுமையால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனலட்சுமி குழந்தைகளுடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி அவர் சம்பவத்தன்று அவரது 4 பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு தற்கொலை செய்வதற்காக வந்தார். அங்கு அவர் குழந்தைகளுடன் அழுது கொண்டு இருந்தார்.
இதனை அந்த வழியாக சென்ற பருத்தியூரை சேர்ந்த சின்னாள் (65) என்பவர் பார்த்தார். பின்னர் அவர் தனலட்சுமியின் அருகே சென்று என்ன பிரச்சினை என கேட்டார். அதற்கு அவர் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய வந்து இருப்பதாக கூறினார். இதனை கேட்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து தனது ஆலய பாதிரியாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் அந்த பகுதியில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வரும் நிர்வாகிக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்வதற்காக வந்த தனலட்சுமியை மீட்டு இல்லத்துக்கு அழைத்து சென்றார்.
பின்னர் இல்ல நிர்வாகி இது குறித்து ஆழியாறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நடிகை கவுதமி மீது எனக்கு எப்போதுமே அன்பு, பாசம், மரியாதை உண்டு.
- பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமியின் அறிக்கை மனவேதனை தருகிறது.
கோவை:
பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நடிகை கவுதமி மீது எனக்கு எப்போதுமே அன்பு, பாசம், மரியாதை உண்டு. கட்சிக்காக தீவிரமாக உழைத்தவர். பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமி அளித்துள்ள கடிதம் மனவேதனை தருகிறது.
அவருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பேசினேன். அப்போது பா.ஜனதாவுக்காக தேசிய அளவில் பணியாற்ற வாருங்கள். உங்களுக்கு பொறுப்பு வழங்குகிறோம் என்று அழைத்தேன். அப்போது கவுதமி பரவாயில்லை மாநில அளவில் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். மேலும் அவருடன் எண்ணற்ற கட்சி நிர்வாகிகள் தொடர்பில் உள்ளனர். மாநில அளவிலான கட்சி நிகழ்ச்சிகளில் கவுதமி தீவிரமாக பங்கெடுத்து வந்தார்.
எந்த நேரத்திலும் சோர்வு பாராமல் பணியாற்றக்கூடியவர். தைரியம்-தன்னம்பிக்கை மிகுந்த பெண்மணி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கவுதமியின் உதவியாளர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக உதவி கேட்டு இருந்தார்.
அப்போது நான் அவரிடம் அந்த நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முழு விவரங்களையும் அனுப்பி வையுங்கள், நிச்சயமாக உதவி செய்கிறோம் என்று சொல்லி இருந்தேன்.
இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமியின் அறிக்கை மனவேதனை தருகிறது. நாங்கள் சட்டத்துக்கு புறம்பாக யாரையும் காப்பாற்றவோ, பாதுகாக்கவோ முற்படுவது இல்லை. கவுதமிக்கு உண்மையிலேயே என்ன பிரச்சினை என தெரியவில்லை.
அதுபற்றி முழுமையாக தெரிந்தால்தான் நாங்கள் விளக்கம் சொல்ல முடியும்.
பா.ஜனதா கட்சியில் நடிகை கவுதமி இருந்தது வரை அவர் கொடுத்த புகார் மீது ஆளுங்கட்சியினர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எங்களின் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததும் அவரது புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்படியென்றால் நடிகை கவுதமிக்கு ஆளுங்கட்சியினர் நெருக்கடி கொடுத்து உள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.
நடிகர் விஜய்யின் லியோ படத்தை இன்னும் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும்போதுதான் பார்க்க வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை அரசியல், சினிமா ஆகிய இரண்டும் ஒன்றாக கலந்தது. திரைப்படங்களில் நல்ல கருத்துகள், பொழுதுபோக்கும் அம்சங்கள் இருந்தால் அது யார் நடித்த சினிமாவாக இருந்தாலும் பார்ப்பது தவறே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல நிறுவனங்கள், கம்பெனிகளில் இன்றே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
- பழங்கள், பூக்கள், மாவிலைகளை வாங்கி சென்றனர்
கோவை,
கோவை மாவட்டத்தில் நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபடுகின்றனர்.
அம்மன் கோவில்களிலும் தினமும் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. இந்த நிலையில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை ஆகியவை வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
ஆயுதபூஜையை முன்னிட்டு பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள், கடைகள் என அனைத்தும் மலர்கள், வண்ண காகிதங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு வாழை தோரணங்கள் அமைத்து வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபடுவர்.
வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை வருவதால் இன்றே பல நிறுவனங்கள், கம்பெனிகளில் இன்றே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஆயுத பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொரி, பொரிகடலை, அவல், வாசலில் கட்டப்படும் வாழை இலை, அலங்காரம் செய்வதற்கு தேவையான தென்னங்குருத்து, மாவிலை தோரணங்கள் போன்றவை விற்பனைக்கு வந்துள்ளன.
இதுதவிர பழங்கள், பூக்கள் விற்பனையும் மார்க்கெட்டில் சூடுபிடி த்துள்ளது. மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.
பொதுமக்கள் அங்கு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.
கோவை பூ மார்க்கெ ட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை கிலோவில் வரு மாறு:-
செவ்வந்தி-ரூ.240, முல்லை-ரூ.800, சம்பங்கி-ரூ.240, அரளி-400, ரோஜா-ரூ.240, மரிக்கொழுந்து ஒரு கட்டு-ரூ.30, கோழிக்கொண்டை-ரூ.100, செண்டுமல்லி-ரூ.70, மருகு ஒரு கட்டு-ரூ.20, தாமரை ஒரு பூ-ரூ.40க்கு விற்பனையாகி வருகிறது. இதுதவிர 5 தென்னங்குருத்து- ரூ.100, தேங்காய்-ரூ.36, ஆரஞ்சுப்பழம்-ரூ.160, ஆப்பிள்-ரூ.100, சாத்துக்குடி-ரூ.80, மாதுளை-ரூ.80, கொய்யா-ரூ.240, வாழைக்கன்று-ரூ.40, மாவிலை ஒரு கட்டு-ரூ.20, வெள்ளைப்பூசணி-ரூ.40, பொரி 1 பக்கா-ரூ.30, பொரிகடலை-ரூ.220, வேர்க்கடலை-ரூ.200, எலுமிச்சை-ரூ.160, திராட்சை-ரூ.200க்கும் விற்பனையாகிறது.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
- 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை அ.தி.முக.வில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோவை.
கோவை இதய தெய்வம் மாளிகையில் கோவை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக எதிர்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பிவேலுமணி, கோவை மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பியுமான ஜெயவர்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதா வது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் 5 ஆண்டுகளில் கொண்டு வந்த 50 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
தற்போது இருக்கின்ற தி.மு.க அரசு எந்த விதமான மக்கள் நல திட்டதங்களையும் கொண்டு வரவில்லை. நாம் ஏற்கனவே உருவாக்கிய திட்டங்களை தங்களுடைய திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மிக துரிதமாக வேலை செய்து, 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை அ.தி.முக.வில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.க செய்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்து கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பொறுப்பாளர் ஜெயவர்த்தனன் பேசும்போது, கோவை மாவ ட்டத்தில் இருக்கக்கூடிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் எளிய மக்களின் துயர் துடைப்பவர்களாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வின் நலத்திட்ட ங்களை மக்களி டம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக பெருவாரியான வெற்றிகளை பெற வேண்டும் அதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர் ஜெயராம், முன்னாள் அமைச்சர் செம.வேலுசாமி, பீளமேடு துரைசாமி, பிரபாகரன், புரட்சி தம்பி, லாலி ரோடு ராதா, செல்வகுமார், சிவகுமார், சாரமேடு சந்திரசேகரன், இலக்கடை ஜெயபால், காலணி கருப்பையா, ராஜ்குமார், மனோகரன், பப்பையா ராஜேஷ், கமலக்கண்ணன், மெட்டல் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி- கல்லூரிகளை சேர்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேரில் கண்டு களித்தனர்.
- இதில் பங்கேற்ற வீரர்கள் அவற்றின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்
சூலூர்,
கோவை சூலூர் விமான படைத்தளத்தில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி- கல்லூரிகளை சேர்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேரில் கண்டு களித்தனர்.குறிப்பாக தேஜஸ், எம்.ஐ-17, சாரங் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களின் சாகச நிகழ்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் விமானப்படையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதில் பங்கேற்ற வீரர்கள் அவற்றின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.சூலூர் விமானப்படை தளத்தில் போர் விமான சாகச நிகழ்வை நேரில் கண்டு களித்த மாணவ மாணவிகள் கூறுகையில், விமானங்களை அருகில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது புதிய அனுபவமாக இருந்தது. போர் விமானங்களில் வீரர்கள் நிகழ்த்திய சாகசங்களை வியப்புடன் பார்த்து மகிழ்ந்தோம்.
இந்திய விமானப்படையின் செயல்பாடுகளை அறிய இது நல்ல வாய்ப்பாக அமைந்தது. இது விமானப்படையில் சேர எங்களுக்கு உத்வேகம் அளித்தது என தெரிவித்தனர்.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்தனர்.
- கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முடிவு.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை பூதப்பள்ளம் அடர்ந்த வனப்பகுதியொட்டி அமைந்துள்ளது.
இந்நிலையில் வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி சிறுத்தை, காட்டுப்பன்றி, புள்ளிமான், காட்டுயானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.
மேட்டுப்பாளையம் வனத்துறைக்குட்பட்ட நெல்லித்துறை பூதப்பள்ளம் சுப்பிரமணியன் என்பவர் தோட்டத்தில் நேற்று 5 ஆடுகள் கட்டப்பட்டிருந்தது.
அதில் ஒரு ஆட்டை சிறுத்தை கழுத்தை கடித்து கொன்றுள்ளது. அப்போது அங்கு நின்ற மற்றொரு ஆண்டின் கழுத்தையும் கடித்துள்ளது. இதனிடையே ஆட்டின் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த போது சிறுத்தை ஆட்டை கடித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவர சிறுத்தை அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்தனர்.
தொடர்ந்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட உள்ளன. இதோடு கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
- அந்த பகுதியில் இறந்த மாணவர்களின் புகைப்படங்களை போட்டு எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.
வால்பாறை,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் இருந்து 10 கல்லூரி மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்திருந்தனர்.
இவர்கள் வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்தனர். அப்போது 5 மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.
அவர்கள் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று காலை மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இடத்தை, அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அங்கு, இனி இதுபோன்ற விபத்துக்கள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அதிகாரிகள், அங்கு பொதுமக்கள் செல்லாதவாறு வேலி அமைத்து தடை விதிக்கலாம் என தெரிவித்தனர். அதுகுறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அந்த பகுதியில் இறந்த மாணவர்களின் புகைப்படங்களை போட்டு எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, மாவட்ட செயல்லார் தளபதி முருகேசன், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, நகரமன்ற துணை தலைவர் செந்தில்குமார், தாசில்தார் அருள்முருகன், நகராட்சி ஆணையாளர் பேற்பெட்டி லியோ, நகர செயல்லார் சுதாகர், முன்னாள் நகர மன்ற தலைவர் கோழி கடை கணேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், உள்பட பலர் இருந்தனர்.






