குழந்தைகளுடன் ஆழியார் அணையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்- 5 பேரையும் மீட்ட மூதாட்டி

தினமும் மது குடித்து விட்டு வந்தது தனலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்.4 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்வதற்காக வந்த தனலட்சுமியை மீட்டு இல்லத்துக்கு அழைத்து சென்றார்.
குழந்தைகளுடன் ஆழியார் அணையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்- 5 பேரையும் மீட்ட மூதாட்டி
Published on

கோவை:

திண்டுக்கல் மாவட்டம் காம்பிளியாம்பட்டி அருகே உள்ள சின்னகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 29). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு வேணிஸ்ரீ (10), சுபஸ்ரீ (8), மதுமிதா (6), யோக ஸ்ரீ (4) ஆகிய 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் 4 பெண் குழந்தைகள் உள்ளதால் செல்வம் அவரது 4 வயது மகள் யோகஸ்ரீயை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதனை அறிந்த தனலட்சுமி மிகுந்த மனவேதனை அடைந்தார்.

பின்னர் அவர் தனது கணவர், குழந்தையை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வத்தை அழைத்து அவரை கண்டித்து அனுப்பினர்.

போலீசில் புகார் செய்ததால் ஆத்திரம் அடைந்த அவர் தினமும் மது குடித்து விட்டு வந்தது தனலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டடார்.

கணவரின் கொடுமையால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனலட்சுமி குழந்தைகளுடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி அவர் சம்பவத்தன்று அவரது 4 பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு தற்கொலை செய்வதற்காக வந்தார். அங்கு அவர் குழந்தைகளுடன் அழுது கொண்டு இருந்தார்.

இதனை அந்த வழியாக சென்ற பருத்தியூரை சேர்ந்த சின்னாள் (65) என்பவர் பார்த்தார். பின்னர் அவர் தனலட்சுமியின் அருகே சென்று என்ன பிரச்சினை என கேட்டார். அதற்கு அவர் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய வந்து இருப்பதாக கூறினார். இதனை கேட்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் இது குறித்து தனது ஆலய பாதிரியாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் அந்த பகுதியில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வரும் நிர்வாகிக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்வதற்காக வந்த தனலட்சுமியை மீட்டு இல்லத்துக்கு அழைத்து சென்றார்.

பின்னர் இல்ல நிர்வாகி இது குறித்து ஆழியாறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com