search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ஆயுத பூஜை பொருட்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்
    X

    கோவையில் ஆயுத பூஜை பொருட்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்

    • பல நிறுவனங்கள், கம்பெனிகளில் இன்றே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
    • பழங்கள், பூக்கள், மாவிலைகளை வாங்கி சென்றனர்

    கோவை,

    கோவை மாவட்டத்தில் நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபடுகின்றனர்.

    அம்மன் கோவில்களிலும் தினமும் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. இந்த நிலையில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை ஆகியவை வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

    ஆயுதபூஜையை முன்னிட்டு பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள், கடைகள் என அனைத்தும் மலர்கள், வண்ண காகிதங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு வாழை தோரணங்கள் அமைத்து வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபடுவர்.

    வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை வருவதால் இன்றே பல நிறுவனங்கள், கம்பெனிகளில் இன்றே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

    ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஆயுத பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொரி, பொரிகடலை, அவல், வாசலில் கட்டப்படும் வாழை இலை, அலங்காரம் செய்வதற்கு தேவையான தென்னங்குருத்து, மாவிலை தோரணங்கள் போன்றவை விற்பனைக்கு வந்துள்ளன.

    இதுதவிர பழங்கள், பூக்கள் விற்பனையும் மார்க்கெட்டில் சூடுபிடி த்துள்ளது. மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    பொதுமக்கள் அங்கு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

    கோவை பூ மார்க்கெ ட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை கிலோவில் வரு மாறு:-

    செவ்வந்தி-ரூ.240, முல்லை-ரூ.800, சம்பங்கி-ரூ.240, அரளி-400, ரோஜா-ரூ.240, மரிக்கொழுந்து ஒரு கட்டு-ரூ.30, கோழிக்கொண்டை-ரூ.100, செண்டுமல்லி-ரூ.70, மருகு ஒரு கட்டு-ரூ.20, தாமரை ஒரு பூ-ரூ.40க்கு விற்பனையாகி வருகிறது. இதுதவிர 5 தென்னங்குருத்து- ரூ.100, தேங்காய்-ரூ.36, ஆரஞ்சுப்பழம்-ரூ.160, ஆப்பிள்-ரூ.100, சாத்துக்குடி-ரூ.80, மாதுளை-ரூ.80, கொய்யா-ரூ.240, வாழைக்கன்று-ரூ.40, மாவிலை ஒரு கட்டு-ரூ.20, வெள்ளைப்பூசணி-ரூ.40, பொரி 1 பக்கா-ரூ.30, பொரிகடலை-ரூ.220, வேர்க்கடலை-ரூ.200, எலுமிச்சை-ரூ.160, திராட்சை-ரூ.200க்கும் விற்பனையாகிறது.

    Next Story
    ×