என் மலர்
கோயம்புத்தூர்
- கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் தொடங்கி வைத்தார்
- காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது
கோவை,
ஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய தலித் உச்சி மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சமூக நீதி அமைப்புகள் பங்கேற்றன.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளை ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி அந்தந்த மாநிலங்களில் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் உட்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.
- ஸ்ரீதேவி, பூதேவி சமேத உலகளந்த பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம்
கவுண்டம்பாளையம்,
கோவை துடியலூர் அடுத்த பன்னீர்மடையில் கிருஷ்ணசாமி கோவில், உலகளந்த பெருமாள் மற்றும் செல்வ விநாயகர் கோவில்கள் அமைந்து உள்ளன. இந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (27-ந் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் கடந்த சில நாட்களுக்கு மராமத்து பணிகள், புதுப்பித்தல் போன்ற பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் மகா கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னர் வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 5 மணி அளவில் தர்மராசா கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல், புற்றுமண் எடுத்து பூஜை செய்தல், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக வேள்வி பூஜை, பரிவார கலசபூஜை கள் நடை பெறுகின்றன.
தொடர்ந்து நாளை காலை 6 மணியளவில் 2-ம்காலயாக வேள்வி பூஜை தொடங்குகிறது. அப்போது கலசபூஜை, தீபாராதனை, ஹோமம், சுவாமிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகி ன்றன.
27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 3-வதுகால வேள்வி பூஜைகள் நடக்கின்றன. காலை 9 மணி முதல் விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை பேரூராதீனம் சாந்தலிங்கம் மருதாசலஅடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கெளமார சிரவையாதீனம் ராமானந்த குமரகுருபரசுவாமிகள், ஆனைகட்டி லலிதாம்பிகை பீடம் சுவாமி ஜகதாதமானந்தஸ்ரஸ்அதி, பழனியாதீனம் சாதுசண்முக அடிகளார் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர். தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெறுகிறது.
மதியம் 12 மணியளவில் அலங்கார பூஜைகள் நடைபெறும். அன்று மாலை கிருஷ்ணசுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ உலகளந்த பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதில் பன்னீர் மடை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணசாமி கோயில் இறை வழிபாட்டு மன்றத்தினர், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
- செக்ஸ் ஆசை காட்டி வரவழைத்து பணம் பறித்தனர்
- போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்
கோவை,
கோவை எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 48 வயது நபர். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் செராயம்பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்கு சென்றார். அப்போது மேலாளரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனையடுத்து அவர் தனது நணபர்களிடம் மற்றொரு நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் வெள்ளானைப்பட்டியில் நிற்பதாகவும், அவருக்கு ரூ.100 பணம் கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார்.
ஆனால் அவர் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. இதனையடுத்து அவரை அவரது நண்பர்கள் தேடி சென்றனர். நீலாம்பூர் ரோட்டில் மேலாளர் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பின்னர் மேலாளரிடம் அவரது நண்பர்கள் என்ன நடந்தது என்று கேட்டனர். அதற்கு அவர் தான் நண்பரிடம் பணத்தை கொடுத்து விட்டு செராயம்பாளையம் ஆரம்ப பள்ளி அருகே வந்து கொண்டு இருந்தேன். அப்போது சிறுவன் ஒருவன் லிப்ட் கேட்டான். இதனையடுத்து நான் அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றேன். மோட்டார் சைக்கிள் நீலாம்பூர் ரோட்டில் சிறுவனை இறக்கி விட்டேன். அப்போது அங்கு மறைந்து இருந்த 4 பேர் வந்தனர். அந்த 4 பேருடன் சிறுவனும் சேர்ந்து தலையில் தாக்கி செல்போன் கூகுள் பே மூலம் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து தப்பிச் சென்றதாக கூறினார்.
இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் மேலாளரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் என்ன நடந்தது என விசாரணையில் இறங்கினார். அப்போது மேலாளர் நாடகம் ஆடியது தெரிய வந்தது.
மேலாளர் தனது செல்போனில் ஓரின சேர்க்கையாளர்கள் செயலியை பயன்படுத்தி உள்ளார். காலையில் மேலாளருக்கு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்து உள்ளது. அப்போது மேலாளர் வரமுடியாது என கூறி விட்டார். பின்னர் நண்பர்களுடன் சாப்பிட சென்ற போது மீண்டும் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் தான் செராயம்பாளையத்தில் இருப்பதாக கூறினார்.
இதனையடுத்து மேலாளர் தனது நண்பர்களிடம் பொய் செல்லி விட்டு அந்த நபர் அழைத்த இடத்துக்கு சென்றார். பின்னர் அந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்து அவர்கள் தாக்கியதில் காயம் அடைந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி தனியார் நிறுவன மேலாளரை தாக்கி ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- வெற்றி பெற்றவர்கள் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதிடம் வாழ்த்து
- தொழிலாளர் பிரதிநிதிகள், வார்டு செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
வால்பாறை,
வால்பாறை ஏ.டி.பி. தொழிற்சங்கம் சார்பில் முடீஸ் எஸ்டேட் நிர்வாகத்துக்குட்பட்ட முத்துமுடி எஸ்டேட் பகுதியில் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடந்தது.
இதில் ஏ.டி.பி.தொழிற்சங்கம் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட 9 பேரில் 7 தொழிலாளர்கள் வெற்றி பெற்று தொழிலாளர் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது வாழ்த்து கூறினார்.
அவரிடம் வெற்றி பெற்றவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். வருங்காலங்களில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைக்களை தொழிற்சங்கம் மூலம் தீர்வு காண வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியின் தொண்டர்களை ஒருங்கிணைத்து கட்சி பணியை இப்போதே தொடங்க வேண்டும் என வால்பாறை அமீது கேட்டுக்கொண்டார்.
இதில் மாவட்ட பாசறை இணைச்செயலாளர் சலாவூதின் அமீது மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளின் தொழிலாளர் பிரதிநிதிகள், தொழிலாளர்கள், வார்டு செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கார் விற்பனைக்கு இருப்பதாக வரவழைத்து மிரட்டல்
- தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை மாசானியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 23). இவர் சொந்தமாக மினிலாரி வைத்து ஓட்டி வருகிறார். அருண்குமார் கார் வாங்க திட்டமிட்டார்.
இதற்காக அவரது பேஸ்புக் பக்கத்தில் நல்ல நிலையில் உள்ள பழைய கார்கள் விற்பனைக்கு போடப்பட்டு உள்ளதா என பார்த்தார். அப்போது விஜய் ஜாஸ்மின் என்பவர் ஐ.டி.யில் 2009-ம் ஆண்டு கார் விற்பனை உள்ளதாக போடப்பட்டு இருந்தது. இதனையடுத்து அருண்கு மார் அதில் போட ப்பட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அதில் பேசிய நபர் கோட்டை பிரிவில் கார் உள்ளது எனவும் நேரில் வந்தால் பேசி முடித்துக்கொ ள்ளலாம் என கூறினார்.
இதனையடுத்து அருண்கு மார் தனது நண்பரான சபரிநாதன் என்பவருடன் அவர்கள் கூறிய கோட்டை பிரிவிற்கு வந்தார். அங்கு ஒரு நபர் காரில் வந்தார். அவர் இவர்களிடம் கார் ஒண்ணி யம்பாளையத்தில் உள்ளது. அங்கு சென்றால் காரை பார்த்து கொள்ளலாம் என கூறி 2 பேரையும் காரில் ஏற்றி சென்றார்.
கார் கோட்டை பிரிவு அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென அந்த நபர் மறைத்து வைத்து இருந்த மிளகாய் பொடியை எடுத்து அருண்குமார் அவரது நண்பர் சபரிநாதன் ஆகியோ ரின் கண்களில் வீசினார். பின்னர் சபரிநாதன் கழுத்தில் கத்தியை வைத்து பணத்தையும் செல்போனையும் கொடுக்குமாறு மிரட்டினார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் வந்த 2 வாலிபர்கள் பீர் பாட்டிலை உடைத்து அருண்குமாரின் தலை மற்றும் கழுத்தில் குத்தினர்.
பின்னர் அவர் வைத்து இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அருண்குமார் பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கார் விற்பனைக்கு இருப்பதாக கூறி வரவழைத்து மிளகாய் பொடி தூவி பீர்பாட்டிலால் தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றது பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனூரை சேர்ந்த எம்.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் ஸ்டீப ன்ராஜ் (21), தாமுநகரை சேர்ந்த எம்.எஸ்.சி. ஐ.டி இறுதியாண்டு படிக்கும் மாணவர் சக்தி பிரசாத் (22), வீரபாண்டி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த பி.எஸ்.சி. ஐ.டி. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் சாம்சன் மேத்யூ (21) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக கூறும் தி.மு.க.வால் 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியவில்லை.
- நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கோவை:
தமிழக பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை இன்று மீண்டும் தொடங்குகிறார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு இருந்து இன்று மாலை 4 மணிக்கு அவர் நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
டி.ஆர்.பாலு, கவர்னரை ஏக வசனத்தில் ஒருமையில் திட்டியுள்ளார். கவர்னரின் கருத்து எந்த வகையிலும் தவறு கிடையாது. தி.மு.க. அரசு சுதந்திர போராட்ட வீரர்கள் எத்தனை பேரின் பெயர்களை பாடப்புத்தகங்களில் சேர்த்தது என வெள்ளை அறிக்கை தர வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களை இருட்டடிப்புச் செய்து விட்டு, திராவிட தலைவர்களின் பெயர்களை வைக்கின்றனர். எந்த ஊரில் பஸ் நிலையம் திறந்தாலும், கலைஞரின் பெயரை வைக்கின்றனர்.
மக்கள் வரிப்பணத்தில் நினைவு மண்டபங்கள் கட்டுவது பெரிய விஷயம் அல்ல. இது சாதனை அல்ல. எனவே கவர்னரை டி.ஆர். பாலு ஒருமையில் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். கவர்னர் தனது வேலையை செய்கிறார். அவரை ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி என டி.ஆர். பாலு கொச்சைப்படுத்த முயற்சிக்கிறார். டி.ஆர். பாலு எம்.பி. சீட் கிடைக்க வேண்டும் என்ற நப்பாசையில் அவ்வாறு பேசுகிறார். கவர்னரை வம்பிற்கு இழுக்கும் போக்கை தி.மு.க.வினர் கைவிட வேண்டும்.
பாரதியார் பற்றி பேச தி.மு.க. தலைவர்களுக்கு அருகதை இல்லை. பாரதியாரை தி.மு.க.வினர் பலகாலம் ஏற்று கொள்ளவில்லை. பாரதியாரை சாதி வட்டத்திற்குள் அடைக்க முயற்சி செய்தனர். பாரதியாரை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியவில்லை என அவரது வீட்டை அரசுடமை ஆக்கினார்கள். வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த வீடு பெட்டி கடை மாதிரி இருக்கிறது. பாரதியார் பற்றி நாடகம் போடுவதை முதலமைச்சர், நிறுத்தி கொள்ள வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். 50 லட்சம் கையெழுத்து வாங்கி என்ன நடக்க போகிறது?
ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக கூறும் தி.மு.க.வால் 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியவில்லை.
நீட் தேர்வை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சங்கரய்யா முக்கியமான மனிதர். மாற்று சித்தாந்தம் இருந்தாலும், தமிழகத்தின் மூத்த தலைவர். அவருக்கு டாக்டர் பட்டம் தர கவர்னர் மறுக்க வாய்ப்பில்லை.
எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா? பெருஞ்சிரிப்பு தான் எனது பதில். பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிசாமிக்கும் பிரதமர் கனவு இருக்கலாம்.
தமிழர் ஒருவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால், அதற்கு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி வர வேண்டும்.
பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் வளர தடையில்லை. ஆனால் ஒரே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான். பிரதமர் தமிழர்களை உயர்த்தி அழகு பார்க்கிறார்.
திராவிடம் என்பது என்ன என தி.மு.க.வினருக்கே தெரியாது. அது முட்டாள்தனமான பொய் வாதம்.
நடிகை கவுதமியை நேற்று சந்தித்தேன். அவர் எனக்கு நண்பர். பிரச்சனை எதுவும் இல்லை. கட்சி சார்பில் அவரது மனக்குமுறலை கேட்டேன். அவருக்கு உதவி செய்ய முடியும் என்றால் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீட்டிற்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
- சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொங்குநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லஷிகா (வயது 23). இவர்களுக்கு கேசின்யா என்ற 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று லஷிகா தனது கணவரிடம் குழந்தையை சலூன் கடைக்கு அழைத்து சென்று முடிவெட்டி விட்டு வரும்படி கூறினார். அதற்கு கார்த்திகேயன் குழந்தைக்கு 3-வது மொட்டை பழனி முருகன் கோவிலில் எடுக்க வேண்டியது உள்ளது. எனவே முடி வெட்ட வேண்டாம் என கூறினார்.
இதனையடுத்து லஷிகா தனது குழந்தைக்கு அவரே முடி வெட்டினார். இதனை பார்த்த கார்த்திக்கேயன் தனது மனைவியை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கார்த்திகேயன் வெளியே சென்றார்.
இதில் மனவேதனை அடைந்த லஷிகா தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி பெண் குழந்தை கேசின்யாவுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்தார். சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுத்தனர். இதுகுறித்து லஷிகா, தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு கார்த்திகேயன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் வீட்டிற்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் லஷிகா, கேசின்யா ஆகியோரை மேல் சிகிச்சைக்காக விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோவையில் இரவில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது.
- பருவமழை தொடங்கிய பிறகுதான் பனிமூட்டம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
கோவை:
கோவையில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. எனவே மாவட்ட அளவில் வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது. ஒருசில இடங்களில் திடீர் மழையும் பெய்து வருகிறது. மேலும் வானம் எப்போதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதுதவிர இரவு நேரங்களில் அதிகப்படியான குளிரும் நிலவி வருகிறது.
அதிலும் குறிப்பாக கோவையில் உக்கடம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், பீளமேடு, வாலாங்குளம், குறிச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் ரோட்டில் எதிரே வருபவர் கூட சரியாக தெரியாத அளவுக்கு மூடுபனி கொட்டுகிறது. எனவே அந்த பகுதிகளில் செல்லும் வாகனங்கள் அதிகாலை நேரத்திலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு செல்கின்றன.
கோவையில் இரவில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. பருவமழை தொடங்கிய பிறகுதான் பனிமூட்டம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் எப்போதும் பனியின் தாக்கம் இருக்கும். தற்போது குன்னூர், ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு நீர்த்திவலைகளுடன் கூடிய மூடுபனி காணப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக குவிந்துள்ள சுற்றுலாபயணிகள் நீலகிரி மாவட்டத்தின் குளுகுளு சீதோஷ்ண நிலையை அனுபவித்து செல்கிறார்கள்.
எதிரில் வருபவர் கூட தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் உள்ளதால் சுற்றுலா வாகன டிரைவர்கள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
- பாதிக்கப்பட்ட பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர்.
- பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை:
கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் கோவில்பாளையம் போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு எங்களது கல்லூரியில் சிங்காநல்லூரை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பணியில் சேர்ந்தார். அவர் தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் தவறான கண்ணோட்டத்தில் நடந்து வருகிறார். மேலும் அவர் கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியைகளின் செல்போன் எண்களை அவர்களுக்கு தெரியாமல் பெற்று இரவு நேரங்களில் ஆபாச குறுந்தகவல் மற்றும் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார்.
இதேபோல பேராசிரியர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்களையும் வாங்கி அவர்களுக்கு இரவு நேரங்களில் ஆபாச தகவல் மற்றும் வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் என்னிடம் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். நான் அவரை நேரில் அழைத்து கண்டித்தும் அவர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். எனவே பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் என்ஜினீயரிங் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு இரவு நேரங்களில் ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வரும் பேராசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சொகுசு காரில் மாற்றம் செய்து தருமாறு முன்பணம் கொடுத்தார்
- அருண்மணி பணத்ைத திருப்பி கேட்ட போது, அவரை தகாத வார்த்தைகளால் பேசிய கோபால், கொலை மிரட்டல் விடுத்தார்.
கோவை,
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் அருண்மணி (வயது 45). இவரது நண்பர் ஒருவர் சொகுசு கார் ஒன்றை கொடுத்து தேர்தல் பிரசாரத்துக்காக அதில் சில மாற்றங்கள் செய்து தருமாறு கூறினார் .
இதனையடுத்து அருண்மணி ஆன்லைன் மூலமாக கோவை பீளமேடு பி.ஆர்.புரத்தில் உள்ள ஒர்க்ஷாப் இருப்பதை பார்த்தார்.
இதையடுத்து ஒர்க் ஷாப் உரிமையாளர் கோபால் (43) என்பவரை தொடர்பு கொண்டு, சொகுசு காரில் மாற்றம் செய்து தருமாறு, கார் மற்றும் ரூ.2.50 லட்சத்தை முன்பணமாக கொடுத்தார்.
தொடர்ந்து மேலும் பல்வேறு தவணைகளாக ரூ.4.90 லட்சம் என, மொத்தம், ரூ.7.40 லட்சம் பணத்தை கோபாலிடம் கொடுத்தார்.
ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட அவர் குறித்த காலத்தில், காரில் எவ்வித மாற்றமும் செய்து கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுத்து விட்டார்.
இதுகுறித்து அருண்மணி கேட்ட போது, அவரை தகாத வார்த்தைகளால் பேசிய கோபால், கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து அவர் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கோபாலை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- மூதாட்டி மகன் மற்றும் மருமகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
- போலீசார் புகாரின் பேரில் மூதாட்டி மீது பாய்ந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி.
இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனையடுத்து மூதாட்டி அவரது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மூதாட்டிக்கு அவரது மருமகளுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மூதாட்டி மகன் மற்றும் மருமகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு மூதாட்டி வீட்டின் கதவை பூட்டி விட்டு படுத்து தூங்கினார். நள்ளிரவு 1.40 மணியளவில் வாலிபர் ஒருவர் மது போதையில் மூதாட்டி வீட்டின் கதவை திறந்து அத்துமீறி நுழைந்தார்.
பின்னர் அவர் மூதாட்டியின் மீது பாய்ந்தார். இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் வாலிபர் தப்பி ஓடி இருட்டில் மறைந்து விட்டார்.
இதுகுறித்து மூதாட்டி கோட்டூர் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் வீட்டில் படுத்து தூங்கிய மூதாட்டி மீது பாய்ந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வ.உ.சி மைதானத்தில் 20-ந்தேதி தொடங்கியது
- 100-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
கோவை,
கோவை மாநகராட்சியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த 20-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
அவர்களின் போராட்டம் தற்போது 5-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வ.உ.சி மைதானத்தில் இன்று காலை திரண்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.






