என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.7.40 லட்சம் மோசடி - ஒர்க் ஷாப் உரிமையாளர் கைது
    X

    ரூ.7.40 லட்சம் மோசடி - ஒர்க் ஷாப் உரிமையாளர் கைது

    • சொகுசு காரில் மாற்றம் செய்து தருமாறு முன்பணம் கொடுத்தார்
    • அருண்மணி பணத்ைத திருப்பி கேட்ட போது, அவரை தகாத வார்த்தைகளால் பேசிய கோபால், கொலை மிரட்டல் விடுத்தார்.

    கோவை,

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் அருண்மணி (வயது 45). இவரது நண்பர் ஒருவர் சொகுசு கார் ஒன்றை கொடுத்து தேர்தல் பிரசாரத்துக்காக அதில் சில மாற்றங்கள் செய்து தருமாறு கூறினார் .

    இதனையடுத்து அருண்மணி ஆன்லைன் மூலமாக கோவை பீளமேடு பி.ஆர்.புரத்தில் உள்ள ஒர்க்ஷாப் இருப்பதை பார்த்தார்.

    இதையடுத்து ஒர்க் ஷாப் உரிமையாளர் கோபால் (43) என்பவரை தொடர்பு கொண்டு, சொகுசு காரில் மாற்றம் செய்து தருமாறு, கார் மற்றும் ரூ.2.50 லட்சத்தை முன்பணமாக கொடுத்தார்.

    தொடர்ந்து மேலும் பல்வேறு தவணைகளாக ரூ.4.90 லட்சம் என, மொத்தம், ரூ.7.40 லட்சம் பணத்தை கோபாலிடம் கொடுத்தார்.

    ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட அவர் குறித்த காலத்தில், காரில் எவ்வித மாற்றமும் செய்து கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுத்து விட்டார்.

    இதுகுறித்து அருண்மணி கேட்ட போது, அவரை தகாத வார்த்தைகளால் பேசிய கோபால், கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து அவர் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கோபாலை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×