என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stole Rs. 20 thousand"

    • செக்ஸ் ஆசை காட்டி வரவழைத்து பணம் பறித்தனர்
    • போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்

    கோவை,

    கோவை எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 48 வயது நபர். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் செராயம்பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்கு சென்றார். அப்போது மேலாளரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனையடுத்து அவர் தனது நணபர்களிடம் மற்றொரு நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் வெள்ளானைப்பட்டியில் நிற்பதாகவும், அவருக்கு ரூ.100 பணம் கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் அவர் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. இதனையடுத்து அவரை அவரது நண்பர்கள் தேடி சென்றனர். நீலாம்பூர் ரோட்டில் மேலாளர் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    பின்னர் மேலாளரிடம் அவரது நண்பர்கள் என்ன நடந்தது என்று கேட்டனர். அதற்கு அவர் தான் நண்பரிடம் பணத்தை கொடுத்து விட்டு செராயம்பாளையம் ஆரம்ப பள்ளி அருகே வந்து கொண்டு இருந்தேன். அப்போது சிறுவன் ஒருவன் லிப்ட் கேட்டான். இதனையடுத்து நான் அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றேன். மோட்டார் சைக்கிள் நீலாம்பூர் ரோட்டில் சிறுவனை இறக்கி விட்டேன். அப்போது அங்கு மறைந்து இருந்த 4 பேர் வந்தனர். அந்த 4 பேருடன் சிறுவனும் சேர்ந்து தலையில் தாக்கி செல்போன் கூகுள் பே மூலம் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து தப்பிச் சென்றதாக கூறினார்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் மேலாளரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் என்ன நடந்தது என விசாரணையில் இறங்கினார். அப்போது மேலாளர் நாடகம் ஆடியது தெரிய வந்தது.

    மேலாளர் தனது செல்போனில் ஓரின சேர்க்கையாளர்கள் செயலியை பயன்படுத்தி உள்ளார். காலையில் மேலாளருக்கு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்து உள்ளது. அப்போது மேலாளர் வரமுடியாது என கூறி விட்டார். பின்னர் நண்பர்களுடன் சாப்பிட சென்ற போது மீண்டும் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் தான் செராயம்பாளையத்தில் இருப்பதாக கூறினார்.

    இதனையடுத்து மேலாளர் தனது நண்பர்களிடம் பொய் செல்லி விட்டு அந்த நபர் அழைத்த இடத்துக்கு சென்றார். பின்னர் அந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்து அவர்கள் தாக்கியதில் காயம் அடைந்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி தனியார் நிறுவன மேலாளரை தாக்கி ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    ×