கோவையில் தொடங்கிய ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் தொடங்கி வைத்தார் காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது
கோவையில் தொடங்கிய ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
Published on

கோவை,

ஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய தலித் உச்சி மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சமூக நீதி அமைப்புகள் பங்கேற்றன.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளை ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி அந்தந்த மாநிலங்களில் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் உட்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com