என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லும்
- சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் அறிவிப்பு
- கல்லிடைக்குறிச்சிக்கு இரவு 7.31 மணிக்கு வந்து, அங்கிருந்து இரவு 7.32 மணிக்கு புறப்பட்டு செல்லும்
கோவை,
திருநெல்வேலி-மேட்டுப் பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில்(எண்:06030) ஞாயிற்றுக்கிழமை தோறும் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
இதேபோல் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில்(எண்:06029) திங்கட்கிழமை தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.
இந்த நிலையில் சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதவாது:-
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையிலான சிறப்புரெயில் தற்போது செல்லும் வழியில் உள்ள நிறுத்தங்களுடன் கூடுதலாக கல்லிடைக்குறிச்சியில் நிலையத்துக்கு இரவு 7.31 மணிக்கு சென்றடைந்து, அங்கிருந்து இரவு 7.32 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இதேபோல் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமைகளில் காலை 5.51 மணிக்கு கல்லிடைக்குறிச்சி ரெயில்நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து 5.52 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






