என் மலர்
சென்னை
- தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வ மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 26-ந்தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 27, 28-ந்தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வானிலை அமைப்புகள் மாறிவிட்ட காரணத்தால் பெரும்பாலான இடங்களில் மழை குறைந்து விட்டது.
- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் எனக் கருதப்பட்ட நிலையில் நிலப்பரப்புக்கு அருகே வரும்போது அது வலுவிழந்து விட்டது.
இதன் காரணமாக வானிலை அமைப்புகள் மாறிவிட்ட காரணத்தால் பெரும்பாலான இடங்களில் மழை குறைந்து விட்டது.
இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில் புதிய தாழ்வு பகுதி உருவாகிறது.
- பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
- நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகக் கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர்.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டு முறை அவர்களது பிரதிநிதியாகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றிய அவரது மறைவு அத்தொகுதி மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.
கழகத்தின் மீது தீவிரப்பற்றும், முத்தமிழறிஞர் கலைஞர் மீதும்-என் மீதும் பேரன்பும் கொண்டு செயலாற்றி வந்த அவர், நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகக் கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர்.
அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுவாழ்வில் அவருக்குத் துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
- வரும் 28, 29-ந்தேதிகளில் தென்காசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இதில் முதல் நாள் தேவரின் ஆன்மீக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குரு பூஜை விழாவாகவும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்ல இருக்கிறார். பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
பசும்பொன் செல்வதற்கு முன்னதாக 28, 29-ந்தேதிகளில் தென்காசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
- சாயும் நிலையில் உள்ள கட்சிக்கு தான் முட்டுக்கொடுக்க வேண்டும்.
- தி.மு.க. அசுர பலத்துடன் 6-வது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற கட்சி.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.மு.க.விற்கு முட்டு கொடுப்பதாக கூறப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக அரசியல் தி.மு.க. vs அ.தி.மு.க. என இருப்பதே தமிழகத்திற்கு தேவை. தமிழக அரசியலை தி.மு.க. vs பா.ஜ.க. என மாற்றி விடாதீர்கள். 2026 தேர்தலில் தமிழகத்தில் 2-வது பெரிய கட்சியாக வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் அஜெண்டா. அது தெரியாமல் பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. உறவாடிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் சாதி ஒழிப்பை ஏற்காதவர்கள், சமத்துவத்தை ஏற்காதவர்கள், பெண் உரிமையை விரும்பாதவர்கள் இந்த மண்ணில் வலுப்பெற வேண்டும் என்று விரும்புவதை அதற்கு முயற்சிப்பதை, அதற்கான அரசியல் நகர்வுகள் செய்வதை எப்படி நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியும்.
இதனால் நாம் தலையிட்டு பேசினால் நாம் தி.மு.க.விற்காகத்தான் பேசுவதாக சில அற்பர்கள் தி.மு.க.விற்கு முட்டு கொடுப்பதாக பேசுகிறார்கள்.
தி.மு.க. கோலாச்சுகின்ற கட்சி. அதற்கு ஏன் முட்டுக்கொடுக்க வேண்டும். சாயும் நிலையில் உள்ள கட்சிக்கு தான் முட்டுக்கொடுக்க வேண்டும்.
தி.மு.க. அசுர பலத்துடன் 6-வது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற கட்சி. அந்த கட்சியை எதிர்த்தவர்கள் காணாமலும், கரைந்தும் போனார்கள். அந்த கட்சி அவர்களை எதிர்கொள்வதற்கு வலிமை உள்ள கட்சி. அதற்கு ஏன் முட்டுக்கொடுக்க வேண்டும்.
நாங்கள் ஏன் தலையிடுகிறோம் என்றால் நாங்கள் பேசும் அரசியலுக்கு நீங்கள் வேட்டு வைக்கிறீர்கள். நாங்கள் பேசுவது சமூக நீதி அரசியல். பெரியாரிய அரசியல், அம்பேத்கரிய அரசியல்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆளும்கட்சியாக இருந்துபோது எடப்பாடி பழனிசாமி கால் கூட தரையில் படாமல்தான் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.
- கொரோனா தாக்கத்தின்போது உயிருக்கு பயந்து அனைவரும் பூட்டிய வீட்டிற்குள் இருந்தார்கள்.
கோயம்பேட்டில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிம் கூறியதாவது:
* எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆளும்கட்சியாக இருந்தபோது அவருடைய செயல்பாடு எப்படி இருந்தது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.
* ஆளும்கட்சியாக இருந்துபோது அவருடைய கால் கூட தரையில் படாமல்தான் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.
* எதிர்க்கட்சியாக இருந்தபோதும்கூட கொரோனா தாக்கத்தின்போது உயிருக்கு பயந்து அனைவரும் பூட்டிய வீட்டிற்குள் இருந்தார்கள்.
* அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர்தான் உயிரை துச்சமென மதித்து மக்கள் களத்தில் நின்று கொரோனாவை வென்று காட்டியவர்.
* நிவாரண பணிகள் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
- அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
- விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் திமுக அரசு நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும்.
- அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடியில் அறுவடை செய்த சுமார் 8,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மன வேதனையளிக்கிறது. அறுவடை செய்து 10 நாட்கள் கழிந்தும் நெல்மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் பல மாத உழைப்பை உதாசீனப்படுத்தியுள்ள @arivalayam அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.
விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் திமுக அரசு நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும், அலட்சியப்போக்குடன் செயல்பட்டு, நெல்மூட்டைகளை சேதப்படுத்தியது மட்டுமன்றி அறுவடைக்குத் தயாராக இருந்த 1,00,000-ற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்களையும் தண்ணீரில் மிதக்கவிட்டு விவசாயப் பெருமக்களைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது திமுக அரசு.
எனவே, "நானும் டெல்டாக்காரன் தான்" என விளம்பர வசனம் பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகக் கொள்முதல் செய்திடவும், பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களுக்கு ஏக்கர் ரூ.50,000 வீதம் நிவாரணம் வழங்கிடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 அதிரடியாக சரிந்து, ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
- பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்பட்டது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை நேற்று குறைந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 அதிரடியாக சரிந்து, ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதனால் தங்கம் வாங்க நினைப்போர் இன்னும் குறைந்தால் நன்றாக இருக்கும் என்ற மன ரீதியில் உள்ளனர்.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,500-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 174 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
22-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,320
21-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
20-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,360
19-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
18-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
22-10-2025- ஒரு கிராம் ரூ.175
21-10-2025- ஒரு கிராம் ரூ.182
20-10-2025- ஒரு கிராம் ரூ.190
19-10-2025- ஒரு கிராம் ரூ.190
18-10-2025- ஒரு கிராம் ரூ.190
- அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கடிஅடியில் நீர் இருப்பு 2,926 மில்லியன் கன அடியாக உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மொத்தம் 24 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்மட்டம் 21.27 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் நீர் இருப்பு 2,926 மில்லியன் கன அடியாக உள்ளது.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி இடையே கரையை கடக்கும்.
- தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியது.
சென்னை:
வங்கக்கடலில் நிலைக்கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி இடையே கரையை கடக்கும். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சில தினங்களாக வெளுத்து வாங்கிய கனமழைக்கு காரணமான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றைக்குள் வலுவிழக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆய்வு மையம் கணித்தபடி வட மாவட்டங்களில் காலை வரை மழை பெய்தது.
- விழுப்புரம், கடலூரில் பல இடங்களில் மழை பொழிந்தது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக பகுதிகளில் மழையை கொடுக்கும் என ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டதோடு, நிர்வாக ரீதியாக இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
ஆய்வு மையம் கணித்தபடி வட மாவட்டங்களில் காலை வரை மழை பெய்தது. அதிலும் குறிப்பாக விழுப்புரம், கடலூரில் பல இடங்களில் மழை பொழிந்தது. ஆனால் சென்னையை பொறுத்தவரையில் காலை வரை 4 இடங்களில் கனமழையும், 41 இடங்களில் மிதமான மழையும், 9 இடங்களில் லேசான மழையும் பதிவானது. ஆனால் அதன் பிறகு வெயில் அடித்தது.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக விடுமுறை விடப்படுமா? என எதிர்பார்த்த நிலையில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என்றும் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






