என் மலர்
அரியலூர்
அரியலூரில் அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை போனது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர்:
அரியலூர் பூக்கார தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50). இவரது மனைவி ஷோபனா. பன்னீர் செல்வம் சேலத்தில் பொது பணித்துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னீர் செல்வம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் விழுப்புரத்தில் நடக்கும் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார். வீடு பூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 14 பவுன் நகை, ரூ. 1000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
தகவல் அறிந்ததும் அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்துஇன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சமாகும்.
ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண் தீயில் கருகி பலியானார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூரை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகள் மீனா (வயது23). இவர் அருகில் உள்ள மேலூர் கிராமத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த 8-ம் தேதி அன்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அன்று அதிகாலையில் எழுந்து அடுப்பு அருகே குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அசதியில் தன்னையறியாமல் அப்படியே தூங்கி விட்டார். இதனால் அடுப்பு தீ அவரது சேலையில் பிடித்து எரிந்தது. உடனே தீயின் வெப்பம் தாங்க முடியாமல் மீனா அலறினார்.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீனா மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் சிகிச் சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
அரியலூர் அருகே மணல் கடத்தியது தொடர்பாக லாரியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் மாங்காய்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு லாரியை பறிமுதல் செய்தனர்.
பின்னர் லாரி டிரைவரான பெரம்பலூரை சேர்ந்த சிவபாலன்(வயது 34), கிளனர் கண்ணன்(44) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து லாரி உரிமையாளரான சுரேஷ்(32) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றங்களை தடுக்க அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்று போலீசாருக்கு அரியலூர் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் ,ஜெயங் கொண்டம், ஆண்டிமடம் தா.பழூர், மீன்சுருட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையங்களில் கோப்புகளை ஆய்வு செய்து போலீசாரிடம் காவல் நிலையங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் ஜெயங்கொண்டம் நான்குரோடு, கடைவீதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், போக்கு வரத்தினை சீர் செய்ய நடை மேடை அமைக்க வேண்டும், போக்குவரத்தின் போது வாகனங்களை நிறுத்தி செல்ல வெள்ளை கோடுகளை புதிதாக பெயிண்டிங் செய்ய வேண்டும், குற்றங்களை குறைக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் அதிகப்படியான சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும், மேலும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
நான்கு ரோடு பகுதியில் நான்கு புறமும் வாகனங்கள் நிறுத்துவதற்கான வெள்ளை நிற எல்லைக்கோடுகளை புதுப்பிக்கவும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு கோடிட்டு காண்பிக்கவும் வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜ் மோகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
பணமதிப்பு இழப்பீட்டை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் அரியலூரில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட இ.காங்கிரஸ் சார்பில் பணமதிப்பு இழப்பீட்டை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி தர மறுத்ததால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட தலைவர் ஜி.ராஜேந்திரன், நகரதலைவர் சந்திரசேகர், வட்டார தலைவர் தியாகராஜன், கர்ணன், திருமானூர் பாண்டியராஜன், சீமான் மூப்பனார், தா.பழுர் சக்ரவர்த்தி, மாரிமுத்து, ஜெயங்கொண்டம் செங்குட்டுவன், நகரதலைவர் ஜாக்சன், ஆண்டிமடம் கொடியரசு, மாசிலாமணி, செந்துறை கொளஞ்சிநாதன், உடையார்பாளையம் ஜெயராமன், மாவட்ட பொருளாளர் மனோகரன், தொழிற்சங்கம் சிவக்குமார், சேவாதளம் சிவா, மகிளா காங்கிரஸ் சின்ன பொண்ணு, மாரியம்மாள், தமிழரசி, தொகுதி தலைவர் திருநாவுக்கரசு உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.
அனுமதியை மீறி மறியலில் ஈடுபட்டதால் 50 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் அருகே வேத மந்திரங்களின்றி திருக்குறள் வாசித்து மத்திய அரசு ஊழியரின் திருமணம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழுரை சேர்ந்தவர் சக்திவேல். மத்திய அரசு ஊழியரான இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சத்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தமிழ்மொழி மேல் உள்ள பற்றுதல் காரணமாக தனது திருமணத்தை திருக்குறள்படி நடத்த சக்திவேல் முடிவு செய்தார். அது பற்றி மணமகள் வீட்டில் தெரிவித்த போது, முதலில் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் சக்திவேல் தனது நிலையில் உறுதியாக இருந்ததால், அவரது விருப்பத்திற்கு அனைவரும் சம்மதித்தனர். இதையடுத்து தா.பழுரில் உள்ள திருமண மண்டபத்தில் வேத மந்திரங்களின்றி சக்திவேல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது திருவள்ளுவர் உருவச்சிலை வைத்து, புலவர் மோகன் திருக்குறள் வாசித்து அதன் பொருள் கூறினார்.
அதனைத்தொடர்ந்து மணமக்கள் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து மணமகன் சக்திவேல், மணமகள் சத்யாவுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து மணமக்கள் அரசு மற்றும் வேப்ப மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற, உறவினர்கள் ஆசீர்வாதம் செய்தனர். இந்த திருக்குறள் திருமணத்தை உறவினர்கள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர். திருமணத்தையொட்டி மண்டபம் முழுக்க இல்வாழ்க்கை, வாழ்க்கை துணை நலம்,மக்கட்பேறு, அன்புடமை ஆகிய 4 அதிகாரங்களில் உள்ள திருக்குறள் வரிகள் ஆங்காங்கே எழுதப்பட்டிருந்தன.
திருக்குறள் திருமணம் செய்த சக்திவேலின் தந்தை நீலகண்டன் டீக்கடை வைத்துள்ளார். இவர் தனது பேச்சின் போது அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவார். இதனால் சக்திவேலுக்கு சிறுவயது முதலே திருக்குறள் மீதும், தமிழ்மொழி மீதும் தீராத பற்று ஏற்பட்டுள்ளது. அதன் விளைவால் திருக்குறள்படி தனது திருமணத்தை நடத்தியுள்ளார்.
அரியலூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அரியலூர்:
அரியலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 10.11.2018 (சனிகிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மேற்படி துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அரியலூர் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினா புரம், குறிச்சி நத்தம், புதுப் பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், இரசுலா பாத், பாளம்பாடி, பார்ப் பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி இராஜீவ்நகர் மற்றும் கொளப்பாடி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன் குடிக்காடு, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், ஒட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மேலும், பராமரிப்பு பணிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிறைவுற்றால் உடனடியாக மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அரியலூர் உதவி செயற்பொறியாளர் பி.சாமிதுரை தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உடையார் பாளையம், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஆறாவது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நாளை 09.11.2018 அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
அரியலூர் வட்டத்தில் பெரிய திருக்கோணம், மேலப்பழூர் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் கோடங்குடி (தெ), காட்டகரம்(தெ) ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் செந்துறையிலும், ஆண்டிமடம் வட்டத்தில் இடையக்குறிச்சி கிராமத்திலும் நடைபெறுகிறது.
இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தாய் கண்முன்னே சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். லாரி டிரைவர். இவரது மனைவி சரோஜினி. மகன் பார்க்கவன் (வயது 4). சரோஜினி தனது மகனுடன் பெரியநாகலூர் கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். பெரியநாகலூர் அருகே வந்த போது அப்பகுதியில் வசித்து வரும் பார்க்கவனின் பெரியம்மா இங்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார். இதைபார்த்த பார்க்கவன் தனது தாயின் கையை உதறிவிட்டு அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையை கடக்க முயன்றான். அப்போது அந்த வழியாக அரியலூரிலிருந்து சுண்ணாம்புக்கல் ஏற்றுவதற்காக சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக பார்க்கவன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தாயின் கண்முன்னே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதைப்பார்த்த சரோஜினி மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
இதையடுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் தனியாருக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் அதிக அளவில் உள்ளதால் நூற்றுக் கணக்கான லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அதிகவேகத்துடன் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை தனியார் மற்றும் அரசு சிமெண்டு ஆலைகளால் இயக்கப்படும் கனரக வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
இதே சாலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு டிப்பர் லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார். அப்போதும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது சிறுவன் டிப்பர் லாரி மோதி உயிரிழந்துள்ளார். மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தனியார் மற்றும் அரசு சிமெண்டு ஆலைகளால் இயக்கப்படும் லாரிகள் அதிகவேகத்துடன் செல்வதை தடை செய்ய வேண்டும். மாற்றுப்பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இவ்விதமான உயிரிழப்புகள் அவ்வப்போது நடைபெறுவதை தடுக்க முடியாது என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம், கயர்லாபாத், உடையார்பாளையம் போலீசார் மற்றும் தாசில்தார் முத்துலட்சுமி, அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே போலீசார் பார்க்கவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விக்கிரமங்கலம் அருகே பூச்சி மருந்தை குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
விக்கிரமங்கலம்:
விக்கிரமங்கலம் அருகே கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது 40). விவசாயி. இவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட தனபால் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதைபார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனபால் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் அருகே சிமெண்ட் ஆலை விபத்தில் ஊழியர் மரணம் அடைந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூரில் தனியார் சிமெண்ட் ஆலை உள்ளது. இங்கு இருங்கலாக்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 40) என்பவர் சாம்பல் கிரசர் பெல்ட் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு பணியில் ஈடுபட்டிருந்த அவர், கிரசர் பெல்ட் உரசியதில் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவரை ஆலை பணியாளர்கள் மீட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் இறந்தார். இதனிடையே சுப்பிரமணியனின் சாவில் மர்மம் உள்ளது என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, ஆலத்தியூர் சிமெண்ட் ஆலை முன்பு, சுப்பிரமணியனின் உறவினர்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தளவாய் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தன்னிச்சையாக மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் சுகாதாரப்பகுதி மாவட்டத்தில் 6 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் குறித்து எவ்வித பீதி அடைய வேண்டாம் எனவும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உடன் சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்கள் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை முகாம்களை வட்டார அளவில் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் 24/ 7 என்ற சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சுகாதார நடமாடும் மருத்துவக் குழுவினர் அனைத்து பள்ளிகளிலும் மற்றும் நடமாடும் மருத்துவ குழுவினர் அனைத்து கிராமங்களிலும் மற்றும் காய்ச்சல் கண்டுள்ள பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்து பகுதிகளில் பொது சுகாதாரதுறை மற்றும் ஊரக வளர்ச்சிதுறை மூலமாக தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்ட தற்காலிக மஸ்தூர்களை கொண்டு வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றும் நீர் தேங்க கூடிய தேவையற்ற பொருட்களினை அழிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொசு ஒழிப்பு புகை மருந்து அனைத்து பகுதிகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உப்பு கரைசல். நில வேம்பு கசாயம் மற்றும் சோற்றுக் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளில் உள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குடிநீரில் குளோரினேசன் உள்ளதை உறுதி செய்த பின் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மூலமாக அனைத்து அங்கன்வாடிகளில் வரும் குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கும் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் நிலவேம்பு கசாயம், உப்பு கரைசல் வழங்க அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக எவ்வித மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சைப்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். #tamilnews