search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Vijayalakshmi"

    டிஜிட்டல் முறைக்கு மாறாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    அரியலூர்:

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், மத்திய அரசின் டிராய் விதிமுறைகளின்படி கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் விரும்பிய சேனலை தேர்வு செய்து பார்க்கும் முறையை நடைமுறைப் படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை அணுகி அதற்கான படிவங்களை பெற்று தங்களுக்கு தேவையான சேனலை பூர்த்தி செய்து கொடுத்து பயனடையலாம். மேலும், அனலாக் சிஸ்டம் நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் கேபிள் டி.வி.ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கேபிள் டி.வி. ஒழுங்கு முறைச்சட்டத்தின்படி உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அனலாக் சிஸ்டத்தை முற்றிலும் தவிர்த்து டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

    அவ்வாறு டிஜிட்டல் முறைக்கு மாறாமல் அனலாக் முறையில் வழங்கும் கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறி செயல்படும் கேபிள் டி.வி.ஆபரேட்டர் களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கேபிள் டி.வி.உபகரணங் களும் பறிமுதல் செய் யப்படும்.

    எனவே, கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் அனைவரும் டிஜிட்டல் முறையில் மட்டுமே கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    ரூ.41 லட்சத்தில் 137 பேருக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. விழாவிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 40 பேருக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், 2 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்களையும், 2 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலிகளையும், 2 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளையும், 5 பேருக்கு கைக்கடிகாரம் மற்றும் கருப்பு கண்ணாடிகளையும், 22 பேருக்கு காதுக்கு பின்புறம் அணியும் காதொலிக்கருவிகளையும், 29 பேருக்கு திருமண உதவித்தொகைக்கான காசோலைகளையும் என மொத்தம் 137 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

    முன்னதாக சிறப்பாக பணியாற்றிய அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை முட நீக்கியியல் டாக்டர்கள் கொளஞ்சிநாதன், மணிகண்டன், பிரவீன் ஆகியோரை பாராட்டி, நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் ஹெலன் ஹெல்லர் காது கேளாதவர் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி (பொறுப்பு) காமாட்சி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) (பொறுப்பு) லலிதா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை, மாவட்ட தொழில் மைய அலுவலர் சகுந்தலா, முடநீக்கு வல்லுனர் ராமன், கொல்லாபுரம் ஹெலன்ஹெல்லர் காதுகேளாதோர்க்கான சிறப்பு பள்ளி சகோதரி லில்லிகேத்ரின் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    அரியலூர் மாவட்டத்தில் உடையார் பாளையம், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஆறாவது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நாளை 09.11.2018 அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

    அரியலூர் வட்டத்தில் பெரிய திருக்கோணம், மேலப்பழூர் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் கோடங்குடி (தெ), காட்டகரம்(தெ) ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் செந்துறையிலும், ஆண்டிமடம் வட்டத்தில் இடையக்குறிச்சி கிராமத்திலும் நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே   பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  கொள்ளுமாறு  மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு சாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் இ-சேவை மையங்களில் மட்டுமில்லாமல் பொதுமக்கள் தாமாகவே ஸ்மார்ட் போன் மற்றும் இணையதளம் வழியாக சான்றிதழ்களை எந்த இடத்திலிருந்தும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்களையும் www.tnes-ev-ai.tn.gov.in என்ற இணைய தளத்தில் சென்று தாமாகவே விண்ணப்பிக்கலாம். இதற்கான வழிமுறைகளை tnes-ev-ai.tn.gov.in/user-m-a-nu-al.html என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். 

    மேலும், மத்திய அரசின் UM-A-NG என்ற செயலியை ஆண்டிராய்டு போனில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் சாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ் ஆகிய 3 சான்றிதழ்களை பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். சேவை கட்டணமாக ரூ.60-ஐ இணையதள வங்கி அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் மூலமாக செலுத்தி பொது மக்கள் அனைவரும் பயன் பெறலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    ×