என் மலர்
மேற்கு வங்காளம்
- நான் என் தந்தை மற்றும் தாத்தாவுடன் இங்கு வசிக்கிறேன்.
- நான் எனது தாயை மிகவும் நேசிக்கிறேன்.
மேற்கு வங்க மாநிலம் அசன்சோலியை சேர்ந்தவர் ஸ்வாகதா பெயின். ஆசிரியையான இவருக்கு 5 வயதில் ஐதிஜ்யா என்ற மகன் உள்ளார். 2021 -ம் ஆண்டில் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்ட ஸ்வாகதா பெயின் தனது ஊரில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தொலைவில் உள்ள உத்தர் தினாஜ்பூரில் பணியமர்த்தப்பட்டார்.
அவர் குடும்பத்தை பிரிந்து உத்தர் தினாஜ்பூரில் வேலை செய்து வந்தார். தொடர் விடுமுறை வந்தால் மட்டும்தான் தனது சொந்த ஊருக்கு வந்து கணவன்- மகனை பார்த்து செல்வார்.
இந்த நிலையில் அவரது 5 வயது மகன் ஐதிஜ்யா மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு தனது தாய்க்கு இடமாற்றம் செய்து தரக்கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அவர் முதல்-மந்திரியை "அன்புள்ள மம்தா திதுன்" என்று அழைத்து, எனது வீடு அசன்சோலில் உள்ளது. என் அம்மா உத்தர் தினாஜ்பூரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
எங்களிடமிருந்து விலகி அங்கு வசிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் வீட்டிற்கு வருகிறார். நான் என் தந்தை மற்றும் தாத்தாவுடன் இங்கு வசிக்கிறேன்.
அவர் இல்லாமல் வாழ்வது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் எனது தாயை மிகவும் நேசிக்கிறேன். தயவு செய்து என் அம்மாவை விரைவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கவும், அவர் இனி எங்களிடமிருந்து பிரிந்து வாழ வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தவும்."
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
ஸ்வாகதா இடமாற்றத்திற்காக முயற்சித்து வருவதாகவும், ஆனால் பல அலுவலகங்களுக்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். 2021-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சுமார் 16,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் இவரும் ஒருவர், அவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மாநில அரசிடம் பணியிட மாற்றம் நிவாரணம் கோரி வருகின்றனர்.
இதுகுறித்து ஐதிஜ்யா கூறுகையில்:-
முதல்-மந்திரி தனது கோரிக்கையின் பேரில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாகக் கூறினார். மம்தா திதுன் எனது வேண்டுகோளை நிறைவேற்றினால் மீண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்க ஒரு கடிதம் எழுதுவேன் என்றார்.
- வங்காளத்திலிருந்து புலம்பெயர்ந்த 30 லட்சம் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று வெட்கமின்றி அழைப்பவர்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.
- இது மேற்கு வங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
வங்காளிகளை வெளிநாட்டினராக சித்தரித்தால் பாஜக எம்எல்ஏவின் வாயில் ஆசிட் வீசுவேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்ட டிஎம்சி தலைவர் அப்துர் ரஹீம் பக்ஷி இந்த சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.
வங்காளத்திலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று கோஷ் முன்னர் சட்டமன்றத்தில் பேசியதை மேற்கோள் காட்டி அவரின் பெயரை குறிப்பிடாமல் அப்துர் ரஹீம் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வங்காள மொழி பேசுபவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அட்டூழியங்களுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் நேற்று அப்துர் ரஹீம் பக்ஷி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, "வேறு மாநிலங்களில் பணிபுரியும் வங்காளத்திலிருந்து புலம்பெயர்ந்த 30 லட்சம் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று வெட்கமின்றி அழைப்பவர்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.
எந்த பாஜக எம்எல்ஏவாவது மீண்டும் அதே வார்த்தைகளைக் உதிர்த்தால், நான் உங்கள் வாயில் ஆசிட் ஊற்றி எரிப்பேன். இது மேற்கு வங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்கள் வங்காளிகள் உங்களை சும்மா விடமாட்டோம். உங்கள் முகத்தில் ஆசிட் ஊற்றி எரிப்போம்" என்று தெரிவித்தார்.
இந்த மிரட்டலுக்கு பாஜக தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- மம்தா பானர்ஜி பேசுகையில், பா.ஜ.க. ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி என தெரிவித்தார்.
- எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கொல்கத்தா:
மகாராஷ்டிரா, அசாம், ஒடிசா, டெல்லி, குஜராத் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் எனக்கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
மேற்கு வங்க சட்டசபையில் இந்த விவகாரம் தொடா்பான சிறப்பு தீா்மானம் ஆளும் கட்சி சார்பில் இன்று முன்மொழியப்பட்டது.
விவாதம் தொடங்கியவுடன் மேற்கு வங்க மந்திரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசுகையில், பா.ஜ.க. ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி. மிகப்பெரிய கொள்ளையர்களின் கட்சி. மத்தியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என தெரிவித்தார்.
மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு எதிராக பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாஜக கொறடா சங்கர் கோஷ் இன்று ஒருநாள் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சபையில் இருந்து அவர் வெளியேற மறுத்ததால், அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.
- பல தசாப்தங்களாக, கிழக்கு பெங்காலில் (தற்போது வங்கதேசம்) இருந்து வந்த தலித் அகதிகளை பற்றி யாரும் நினைக்கவில்லை.
- முதல்முறையாக பிரதமர் மோடி அவர்களின் அவலை நிலையை கருத்தில் கொண்டார்.
மத்திய கல்வித்துறை இணையமைச்சரான சுகந்தா மஜும்தார், இந்தியாவில் இந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் வரைக்கும், மதச்சார்பின்மை மற்றும் கம்யூனிசம் நிலைத்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுகந்தார் மஜும்தார் கூறுகையில் "பல தசாப்தங்களாக, கிழக்கு பெங்காலில் (தற்போது வங்கதேசம்) இருந்து வந்த தலித் அகதிகளை பற்றி யாரும் நினைக்கவில்லை. முதல்முறையாக பிரதமர் மோடி அவர்களின் அவலை நிலையை கருத்தில் கொண்டார்.
இந்தியாவில் இந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் வரைக்கும், மதச்சார்பின்மை மற்றும் கம்யூனிசம் நிலைத்திருக்கும். மாறாக அவைகள் நிலைத்திருக்க முடியாது. ஏனென்றால், இந்துக்கள் மட்டுமே உள்ளடக்கிய தன்மையை நம்புகிறார்கள்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக தலித்கள் தொடர்ந்து கொடுமைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த அகதிகள் 1947-ல் இருந்து இந்தியாவுக்கு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். பல ஆண்டுகளாக, அவர்களுக்காக யாரும் பேசவில்லை. முதல் முறையாக, நரேந்திர மோடி அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, CAA நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தார்.
வெளிநாட்டினர் சட்டத்தில் கொண்டு வந்ததுள்ள மாற்றத்தையும், உள்துறை அமைச்சகத்தின் அறிப்பாணையை மேற்கோள் காட்டி, உலகின் எந்த பகுதியிலும், இந்துவாக இருந்து கொடுமைக்கு ஆளானால், அல்லது அவர்களுடைய மதம் சார்ந்த சடங்குகளை செய்வதற்கு தடை ஏற்பட்டால், அந்த நபர் இந்தியாவில் அடைக்கலம் கேட்க முடியும்.
இவ்வாறு தெரிவித்தார்.
சிஏஏ சட்டத்தின்படி இந்தியாவின் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
CAA சட்டத்தின்படி வங்கசேதம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து மதக் கொடுமையால் இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்கள் இந்தயி குடியுரிமை பெற முடியும்.
- பா.ஜ.க.வினர் தொடர்ந்து ஊடுருவல் பற்றி பேசுகிறார்கள்.
- பி.எஸ்.எப். உள்ளிட்ட 5 படைகள் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.
கொல்கத்தா:
வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவுவது மேற்கு வங்க அரசியலில் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பா.ஜ.க.வினர் தொடர்ந்து ஊடுருவல் பற்றி பேசுகிறார்கள். நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியை 5 படைகள் செய்து வருகின்றன. அவை மத்திய உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் வருகின்றன. அப்படியிருக்க ஊடுருவலுக்கு மேற்குவங்க அரசை எப்படி பா.ஜ.க.வினர் குறை கூற முடியும்?
பிரதமர் மோடி ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் ஊடுருவல் பற்றி பேசுகிறார். இதனால் நாட்டின் மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது என்கிறார். அவர் இதைச் சொல்லும்போது உள்துறை மந்திரி சிரித்துக்கொண்டே கைதட்டுகிறார்.
ஊடுருவல்காரர்கள் தினமும் நம் நாட்டினுள் வந்து கொண்டிருக்கின்றனர். நம் நிலங்களை அபகரிக்கிறார்கள் என்றால், இதற்கெல்லாம் யார் காரணம்?
அமித்ஷாவின் தலையை வெட்டி உங்கள் (பிரதமர்) மேஜையில்தான் வைக்கவேண்டும். வேறு வழியில்லை. உள்துறை மந்திரியும் உள்துறை அமைச்சகமும் நம் எல்லைகளைப் பாதுகாக்க தவறினால் அது யார் தவறு? எங்கள் தவறா? உங்கள் தவறா? பி.எஸ்.எப். என்னதான் செய்கிறது? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
மஹுவா மொய்த்ராவின் பேச்சு பா.ஜ.க.வினரை கொந்தளிக்க வைத்துள்ளது. மஹுவாவை கைது செய்யும்படி பா.ஜ.க. சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மஹுவா மொய்த்ராவை மன்னிப்பு கேட்க மம்தா பானர்ஜி சொல்ல வேண்டும் அல்லது அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜ.கவினர் தெரிவித்தனர்.
- பா.ஜ.க. நாடு முழுவதும் வங்காளிகள் மீது மொழி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து வருகிறது.
- யாராவது உங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்புக்காக வந்தால் உங்கள் விவரங்களைத் தர வேண்டாம் என்றார்.
கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசியதாவது:
பா.ஜ.க. நாடு முழுவதும் வங்காளிகள் மீது மொழி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து வருகிறது.
வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் நோக்கில், மேற்கு வங்கத்தில் நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட குழுக்களை கணக்கெடுப்புகளை நடத்த பாஜ அனுப்பி வைத்துள்ளது.
யாராவது உங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்புக்காக வந்தால் உங்கள் விவரங்களைத் தர வேண்டாம். அவர்கள் அந்தத் தரவைப் பயன்படுத்தி உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவார்கள். அதற்கு பதிலாக, வாக்குச் சாவடிகளில் நேரடியாகச் சரிபாருங்கள்.
நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க விட மாட்டேன் என தெரிவித்தார்.
- நான் மத்திய அமைச்சராக எட்டு முறை இருந்துள்ளேன்.
- நான் என்ன பார்த்தேன். எப்படி பார்த்தேன் என்பதை எழுதுவேன் என்கிறார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, தனக்கு பல பிரதமர்களுடன் நெருங்கி பணியாற்றிய அனுபவம் உள்ளது. அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை புத்தகமாக எழுதி வெளியிட இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்து முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி இது தொடர்பாக கூறியதவாது:-
நான் பல பிரதமர்களை அருகில் இருந்து பார்த்துள்ளேன். தற்போது, யார் யார் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து புத்தகம் எழுதப்போகிறேன். அடுத்த வருடம் நடைபெறும் புத்தக திருவிழாவில் இந்த புத்தகம் வெளியிடப்படும்.
நான் மத்திய அமைச்சராக எட்டு முறை இருந்துள்ளேன். ரெயில்வேத்துறை, நிலக்கரி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைகளை கையாண்டுள்ளேன். நான் என்ன பார்த்தேன். எப்படி பார்த்தேன் என்பதை எழுதுவேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு சுமார் 40 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளது. காங்கிரஸ் மற்றும் என்டிஏ கூட்டணியில் இணைந்து பல்வேறு மத்திய அமைச்சர் பொறுப்புகளை ஏற்றுள்ளார். 1998 முதல் 2006 வரை என்டிஏ அரசில் இடம் பிடித்துள்ளார். 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை மன்மோகன் சிங் தலைமையிலான 2ஆம் முறை ஆட்சியில் இடம் பிடித்துள்ளார்.
1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரிந்த நிலையில், வாஜ்பாய் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார்.
- விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
- மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸின், பர்வான் தொகுதி எம்எல்ஏ ஜீபன் கிருஷ்ணா சாஹா அமலாக்கத்துறையால் இன்று கைது செய்தனர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜீபன் கிருஷ்ணா தனது மொபைல் போன்களை வீட்டின் பின்னால் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு, சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார்.
இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்கு வந்திருந்த CRPF வீரர்கள் உதவியுடன் அவரை துரைத்திச் சென்று கைது செய்தனர். பின்னர், சாக்கடையில் இருந்து தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எம்எல்ஏவை அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 ஆம் ஆண்டு இதே வழக்கில் ஜீபன் கிருஷ்ணா சாஹாவை சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த ஊழலில் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது நெருங்கிய தோழி அர்பிதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்ட பல முக்கிய நபர்களை அமலாக்கத் துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.
- 5ஆவது மாடி முதல் 13ஆவது மாடி வரை 9 மாடிகளை குத்தகைக்கு எடுத்துள்ளது.
- ஒரு சதுர அடிக்கு 235 ரூபாய் விதம் வாடகை செலுத்தி வருகிறது.
மொபைல் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்ந்து வருவது ஆப்பிள். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் மொபைல் போன்களை உற்பத்தி செய்து அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் Embassy Zenith கட்டிடத்தில் 5 ஆவது மாடியில் இருந்து 13ஆவது மாடி வரை 9 மாடிகளை 10 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. அந்த கட்டடிடத்தில் பார்க்கிங் இடம் உள்பட மொத்தமாக 2.7 லட்சம் சதுர அடி இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
மாதத்திற்கு சுமார் 6.3 கோடி ரூபாய் வாடகையாக செலுத்துகிறது. 10 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதியில் இருந்து வாடகை செலுத்தி வருகிறது.
மாத வாடகையாக 6.3 கோடி ரூபாய் செலுத்தும் நிலையில், பாதுகாப்பு டெபாசிட்டாக 31.57 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. ஒரு சதுர அடிக்கு 235 ரூபாய் என்ற அடிப்படையில் மாத வாடகை செலுத்துகிறது. இது வருடத்திற்கு வரடம் 4.5 சதவீதம் அதிகரிக்கும். அதன்படி 10 வருடத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வாடகை செலுத்தியிருக்கும்.
- கோவில்களுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
- விபத்தின்போது பேருந்தில் சொகுசு பேருந்தில் 45 பேர் இருந்தனர்.
மேற்கு வங்காளத்தின் பர்த்வான் நகரில் இன்று, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் 10 பக்தர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 35 பேர் காயமடைந்தனர்.
பீகாரை சேர்ந்த இந்த பக்தர்கள் மேற்கு வங்காளத்தில் பல்வேறு கோவில்களுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஃபகுய்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை இல் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தின்போது பேருந்தில் சொகுசு பேருந்தில் 45 பேர் இருந்தனர்.
இறந்தவர்களில் எட்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர் என்று அவர் கூறினார். ஆறு குழந்தைகள் உட்பட காயமடைந்தவர்கள் பர்த்வான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கமிட்டிகளுக்கு மேற்கு வங்காள மாநில அரசு ஆண்டு தோறும் நிதி வழங்கி வருகிறது.
- கடந்த ஆண்டு ரூ.340 செலவழிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.60 கோடி நிதி.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் காளி பூஜைகள் மிகவும் கோலாகலமாக நடத்தப்படும். இதற்காக மாநிலம் முழுவதும் ஏராளமான கமிட்டிகள் உருவாகும். அந்த கமிட்டிகளுக்கு மேற்கு வங்காள மாநில அரசு ஆண்டு தோறும் நிதி வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு துர்க்கை பூஜைகளுக்காக மட்டும் ஒவ்வொரு கமிட்டிக்கும் தலா ரூ. 85 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஒவ்வொரு துர்க்கை பூஜை கமிட்டிக்கும் தலா ரூ.1.10 லட்சம் வழங்கப்படும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்த ஆண்டு துர்க்கை பூஜைக்கு மேற்கு வங்காள மாநில அரசு ரூ.400 கோடி செலவிட உள்ளது.
கடந்த ஆண்டு ரூ.340 செலவழிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.60 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- உரிய ஆவணங்கள் இல்லாமல் கொல்கத்தாவில் தங்கியிருந்தது தெரியவந்தது.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 8-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் வங்கதேசத்தை சேர்ந்த ஏராளமானோர் உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது.
இந்தநிலையில் நேற்று கொல்கத்தா போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வங்கதேச மாடல் அழகி சாந்தாபால் கைது செய்யப்பட்டார்.
அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொல்கத்தாவில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து போலியாக தயாரிக்கப்பட்ட 2 ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேசன் கார்டு பறிமுதல் செய்யப்பட்டன.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 8-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.






