என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் பணியிடம்"

    • நான் என் தந்தை மற்றும் தாத்தாவுடன் இங்கு வசிக்கிறேன்.
    • நான் எனது தாயை மிகவும் நேசிக்கிறேன்.

    மேற்கு வங்க மாநிலம் அசன்சோலியை சேர்ந்தவர் ஸ்வாகதா பெயின். ஆசிரியையான இவருக்கு 5 வயதில் ஐதிஜ்யா என்ற மகன் உள்ளார். 2021 -ம் ஆண்டில் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்ட ஸ்வாகதா பெயின் தனது ஊரில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தொலைவில் உள்ள உத்தர் தினாஜ்பூரில் பணியமர்த்தப்பட்டார்.

    அவர் குடும்பத்தை பிரிந்து உத்தர் தினாஜ்பூரில் வேலை செய்து வந்தார். தொடர் விடுமுறை வந்தால் மட்டும்தான் தனது சொந்த ஊருக்கு வந்து கணவன்- மகனை பார்த்து செல்வார்.

    இந்த நிலையில் அவரது 5 வயது மகன் ஐதிஜ்யா மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு தனது தாய்க்கு இடமாற்றம் செய்து தரக்கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    அவர் முதல்-மந்திரியை "அன்புள்ள மம்தா திதுன்" என்று அழைத்து, எனது வீடு அசன்சோலில் உள்ளது. என் அம்மா உத்தர் தினாஜ்பூரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    எங்களிடமிருந்து விலகி அங்கு வசிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் வீட்டிற்கு வருகிறார். நான் என் தந்தை மற்றும் தாத்தாவுடன் இங்கு வசிக்கிறேன்.

    அவர் இல்லாமல் வாழ்வது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் எனது தாயை மிகவும் நேசிக்கிறேன். தயவு செய்து என் அம்மாவை விரைவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கவும், அவர் இனி எங்களிடமிருந்து பிரிந்து வாழ வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தவும்."

    இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

    ஸ்வாகதா இடமாற்றத்திற்காக முயற்சித்து வருவதாகவும், ஆனால் பல அலுவலகங்களுக்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். 2021-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சுமார் 16,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் இவரும் ஒருவர், அவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மாநில அரசிடம் பணியிட மாற்றம் நிவாரணம் கோரி வருகின்றனர்.

    இதுகுறித்து ஐதிஜ்யா கூறுகையில்:-

    முதல்-மந்திரி தனது கோரிக்கையின் பேரில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாகக் கூறினார். மம்தா திதுன் எனது வேண்டுகோளை நிறைவேற்றினால் மீண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்க ஒரு கடிதம் எழுதுவேன் என்றார். 

    • பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ.15 ஆயிரமும், இடைநிலைஆசிரியர் நிலையில் ரூ.12 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும்.
    • பள்ளிஅமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் நலன்கருதி தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர் களை நியமனம்செய்ய ஆதி திராவிடர் நல இயக்குநர் தெரி வித்துள்ளார். அதன்படி பட்டதாரி ஆசிரி யர் நிலையில் ஆங்கிலம்-2, கணிதம்-1, அறிவியல்-1, சமூக அறிவியல்-1 என 5 காலிப்பணியிடங்களும், இடை நிலை ஆசிரியர் நிலையில் 22காலிப்பணியிடங்களும் உள்ளன. பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ.15 ஆயிரமும், இடைநிலைஆசிரியர் நிலையில் ரூ.12 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும்.

    வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள், இடை நிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியலினத்த வர்க்கும், பள்ளிஅமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர்களிட மிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்று களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் வருகிற 5-ந் தேதிமாலை 5 மணிக்குள்சமர்ப்பிக்க வேண்டும். கால நிர்ணயத்திற்கு பின்பு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    ×