என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மதச்சார்பின்மை, கம்யூனிசம் நிலைத்திருக்கும்: மத்திய அமைச்சர்
    X

    இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மதச்சார்பின்மை, கம்யூனிசம் நிலைத்திருக்கும்: மத்திய அமைச்சர்

    • பல தசாப்தங்களாக, கிழக்கு பெங்காலில் (தற்போது வங்கதேசம்) இருந்து வந்த தலித் அகதிகளை பற்றி யாரும் நினைக்கவில்லை.
    • முதல்முறையாக பிரதமர் மோடி அவர்களின் அவலை நிலையை கருத்தில் கொண்டார்.

    மத்திய கல்வித்துறை இணையமைச்சரான சுகந்தா மஜும்தார், இந்தியாவில் இந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் வரைக்கும், மதச்சார்பின்மை மற்றும் கம்யூனிசம் நிலைத்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுகந்தார் மஜும்தார் கூறுகையில் "பல தசாப்தங்களாக, கிழக்கு பெங்காலில் (தற்போது வங்கதேசம்) இருந்து வந்த தலித் அகதிகளை பற்றி யாரும் நினைக்கவில்லை. முதல்முறையாக பிரதமர் மோடி அவர்களின் அவலை நிலையை கருத்தில் கொண்டார்.

    இந்தியாவில் இந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் வரைக்கும், மதச்சார்பின்மை மற்றும் கம்யூனிசம் நிலைத்திருக்கும். மாறாக அவைகள் நிலைத்திருக்க முடியாது. ஏனென்றால், இந்துக்கள் மட்டுமே உள்ளடக்கிய தன்மையை நம்புகிறார்கள்.

    வங்கதேசத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக தலித்கள் தொடர்ந்து கொடுமைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த அகதிகள் 1947-ல் இருந்து இந்தியாவுக்கு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். பல ஆண்டுகளாக, அவர்களுக்காக யாரும் பேசவில்லை. முதல் முறையாக, நரேந்திர மோடி அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, CAA நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தார்.

    வெளிநாட்டினர் சட்டத்தில் கொண்டு வந்ததுள்ள மாற்றத்தையும், உள்துறை அமைச்சகத்தின் அறிப்பாணையை மேற்கோள் காட்டி, உலகின் எந்த பகுதியிலும், இந்துவாக இருந்து கொடுமைக்கு ஆளானால், அல்லது அவர்களுடைய மதம் சார்ந்த சடங்குகளை செய்வதற்கு தடை ஏற்பட்டால், அந்த நபர் இந்தியாவில் அடைக்கலம் கேட்க முடியும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    சிஏஏ சட்டத்தின்படி இந்தியாவின் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    CAA சட்டத்தின்படி வங்கசேதம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து மதக் கொடுமையால் இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்கள் இந்தயி குடியுரிமை பெற முடியும்.

    Next Story
    ×