என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் சார்பில் காமாரெட்டி பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஐதராபாத்:

    பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் சார்பில் காமாரெட்டி பகுதியில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் எம்.எல்.சியான கவிதா பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    நீங்க தைரியமா இருங்க. உங்களை மிரட்டுறவங்களோட பெயர்கள் 'பிங்க் புக்'ல எழுதப்படும். நாங்க அவங்களை விட்டுட மாட்டோம்.

    கே.சி.ஆர் சார் நல்லவங்க. ஆனா நான் ஒரு ரவுடி. நாங்க எந்த விலை கொடுத்தாலும் இங்க இருந்துட மாட்டோம்.

    பன்ஸ்வாடால உங்களை தொந்தரவு பண்ணி காவல் நிலையத்துக்கு இழுத்துட்டு போறவங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்.

    நாங்க ஆட்சியில இருந்தப்போ எந்த அட்டூழியமும் செய்யவில்லை. மக்களுக்கு நல்லது செய்தோம், வளர்ச்சியும் செய்தோம் என தெரிவித்தார்.

    • வெளிநாட்டு பக்தர்களும் மீனாட்சி அம்மன் கோவிலை வியந்து பார்த்து செல்கின்றனர்.
    • வாரங்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 4 வாயில்களிலும் பிரம்மாண்ட ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியே தாமரை வடிவில் மதுரை மாநகரம் உருவானதாக வரலாறு கூறுகிறது.

    வெளிநாட்டு பக்தர்களும் மீனாட்சி அம்மன் கோவிலை வியந்து பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் புதுப்பிக்கப்படும் பழமையான கோவில் ஒன்றை மீனாட்சி அம்மன் கோவில் போன்று வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.

    வாரங்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கி.பி. 1323-ம் ஆண்டில் காகதிய பேரரசு காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.

    9 அடி அகலம் 9 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக பத்திரகாளி அம்மன் இந்த கோவிலில் காட்சியளிக்கிறார்.

    தினந்தோறும் இந்த கோவிலுக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் 4 முறை பிரம்மாண்டமாக திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.

    பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவிலை பிரமாண்டமாக புதுப்பிக்க வேண்டும். அனைவரும் பிரமிக்கும் வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை போல இந்த கோவிலை வடிவமைக்க வேண்டும் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கோவிலை சுற்றிலும் மாட வீதிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரூ.100 கோடி செலவில் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

    மேலும் 4 புறமும் பிரம்மாண்ட ராஜகோபுரங்கள் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1000 கோடி வரை செலவாகலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவில் போன்று மாதிரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணியில் ஈடுபடும் என்ஜினீயர்கள் கொண்ட குழுவினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சை பெரிய கோவில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    விரைவில் அவர்கள் மதுரை, தஞ்சை கோவில்களில் ஆய்வு செய்த பிறகு இதற்கான பணிகள் தொடங்கும்.

    இதற்கு நன்கொடையாளர்கள் உதவியும் நாடாப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார்.

    • மூன்றாவது மாடியில் அமைந்துள்ள ஸ்பாவில் தீ விபத்து ஏற்பட்டது.
    • உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பார்க் ஹயாட் ஹோட்டலில் இன்று (திங்கள்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது. அங்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணியின் வீரர்கள் தங்கியிருந்தனர். சொகுசு ஹோட்டலின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள ஸ்பாவில் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்து ஏற்பட்டபோது, SRH குழுவினர் ஹோட்டல் வளாகத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறினர்.

    ஹோட்டல் ஊழியர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும், யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    குறிப்பிடத்தக்க சேதம் இல்லாமல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தால் ஹோட்டலில் இருந்த விருந்தினர்களுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

    • தெலுங்கானாவில் எஸ்.சி. பிரிவில் 59 சமூகத்தினர் உள்ளனர்.
    • 59 சமூகத்தினரை மூன்று பிரிவுகளாக பிரித்து இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு பெறும் வகையில் எஸ்.சி. சமூகத்தினரை மூன்றாக வகைப்படுத்தி தெலுங்கானா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் எஸ்.சி. சமூகத்தினரை வகைப்படுத்திய முதல் மாநிலமாகியுள்ளது தெலுங்கானா.

    எஸ்.சி. சமூகத்தினரை வகைப்படுத்த தெலுங்கானா அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஷானீம் அக்தர் தலைமையில் ஆணையத்தை நியமனம் செய்தது. இந்த ஆணையம் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி அடிப்படையில் 59 எஸ்.சி. சமூகத்தினரை குரூப் 1, 2, 3 என மூன்று வகையாக பிரித்தது.

    எஸ்.சி. பிரிவினருக்கு வேலை மற்றும் கல்வியில் 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 15 சதவீதம் இவர்களுக்கு பிரித்து அளிக்கக்கூடிய வகையில் இந்த ஆணையம் அறிக்கை தயார் செய்து அரசிடம் தாக்கல் செய்தது.

    இதனடிப்பையில் தெலுங்கானா மாநில அரசு சட்டம் நிறைவேற்றியது. அந்த சட்டத்திற்கு கடந்த 8ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். அதனடிப்படையில் இன்று அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    குரூப் 1-ல் எஸ்.சி. பிரிவில் உள்ள 15 சமூகத்தினருக்கு ஒரு சதவீதம் வழங்கப்படும். குரூப் 2-ல் எஸ்.சி. பிரிவில் உள்ள 18 சமூகத்தினருக்கு 9 சதவீதம் வழங்கப்படும். குரூப் 3-ல் 26 சமூகத்தினருக்கு 5 சதவீதம் வழங்கப்படும்.

    • முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்களைக் குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 247 ரன்கள் எடுத்து வென்றது

    ஐதராபாத்:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 247 ரன்கள் எடுத்து வென்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அத்துடன் அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

    இந்நிலையில், ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 40 பந்தில் சதமடித்து அசத்தினார். சதமடித்து விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகையில் ஒரு துண்டுச்சீட்டை எடுத்து, ரசிகர்களை நோக்கி காட்டினார். அந்தத் துண்டுச்சீட்டில் என்ன எழுதியிருந்தது?

    அபிஷேக் சர்மா தனது பாக்கெட்டில் இருந்து காண்பித்த ஒரு துண்டுச்சீட்டில், 'This one is for Orange Army' (ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களே, இது உங்களுக்காகத்தான்) என எழுதப்பட்டிருந்தது.

    தொடர் தோல்வியால் துவண்டிருந்த ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாகவே இப்படி எழுதியுள்ளார் என விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    • ஐதராபாத் சார்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
    • தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 247 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்தது.

    ஷ்ரேயஸ் அய்யர் 36 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 82 ரன்கள் குவித்தார்.

    ஐதராபாத் அணியின் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் இறுதியில் 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் கொடுத்தார்.

    இதன்மூலம் ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 2வது வீரர் என்ற மோசமான சாதனையை ஷமி படைத்துள்ளார்.

    ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர்கள்:

    ஜோப்ரா ஆர்ச்சர்: 4-0-76-0

    முகமது ஷமி: 4-0-75-0

    மொஹித் சர்மா: 4-073-0

    • 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது.
    • அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்ததுடன், அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

    பிரியான்ஷ் ஆர்யா 36 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 42 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    ஷ்ரேயஸ் அய்யர் 36 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 82 ரன்கள் குவித்தார். நேஹல் வதேரா 27 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஸ்டோய்னிஸ் 11 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்.

    ஐதராபாத் அணியின் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் முதல் பந்தில் இருந்து விளாசத் தொடங்கினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 66 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும். பஞ்சாப் அணியின் 2வது தோல்வி இதுவாகும்.

    • "சேட்டு (மரம்) ராமையா" , "வனஜீவி" என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.
    • ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக, 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

    தெலுங்கானாவை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 'வனஜீவி' ராமையா இன்று (சனிக்கிழமை) மாரடைப்பால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 87.

    தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த பசுமைப் போராளி, "சேட்டு (மரம்) ராமையா" ,"வனஜீவி" என்று பிரபலமாக அழைக்கப்படும் தாரிபள்ளி ராமையா கடந்த பல தசாப்தங்களாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக, 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

    இந்நிலையில் கம்மம் மாவட்டத்தில் ரெட்டிபள்ளி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    அவரின் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் மறைவு சுற்றுசூழல் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • நவீன் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.
    • நவீன்- பத்மா இருவரும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை விரிவுரையாளர்களாக வேலையில் சேர்ந்தனர்.

    இன்றைய தலைமுறையினர் காதல் என்ற பெயரில் புத்தகங்களை கைவிட்டு வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

    தெலுங்கானாவில் கல்லூரி காதல் ஜோடி ஒன்று அரசு வேலையில் சேர்ந்த பிறகுதான் திருமணம் என்ற லட்சியத்தில் வெற்றி பெற்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், பாப்பண்ண பேட்டையை சேர்ந்தவர் நவீன். இவர் கல்லூரியில் படிக்கும் போது பத்மா என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது இருவரும் அரசு வேலை கிடைத்தால் தான் இரு வீட்டாரின் சம்மதம் கிடைக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தி திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அரசு வேலை என்பது லட்சியம்.

    அது கிடைத்த பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தனர். இதனால் பத்மா வேலைவாய்ப்பு படிப்புக்கு தேவையான பாடங்களை தேர்வு செய்து படித்து வந்தார்.

    அதேப்போல் நவீன் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். நவீன் குருப் தேர்வு மூலம் பள்ளி ஆசிரியர், கல்லூரி உதவியாளர், கல்லூரி ஆசிரியர் உட்பட 4 அரசு பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றார்.

    பத்மா குரூப் தேர்வில் பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி பேராசிரியை பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து நவீன்- பத்மா இருவரும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை விரிவுரையாளர்களாக வேலையில் சேர்ந்தனர்.

    அவர்கள் இருவருக்கும் ஒரே பல்கலைக்கழகத்தில் நிரந்தர அரசு வேலை கிடைத்ததால் அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து நவீன்- பத்மா கூறியதாவது:-

    நாங்கள் அரசு வேலை என்ற லட்சியத்துடன் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று இருக்கிறோம். காதலர்கள் பலர் குறிக்கோள் இல்லாமல் திசை மாறி சென்று திருமணம் செய்து கொள்வதால் அவர்கள் காதல் திருமணம் வெற்றி பெறுவது இல்லை.

    திருமணம் நடந்த சில மாதங்களில் பிரிந்து விடுகின்றனர். ஆனால் நாங்கள் எங்களுடைய இலக்கை நோக்கி சென்று வெற்றி அடைந்து இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெற்றோர் மகனை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • அஸ்வித் ரெட்டியின் தலையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது ரத்தக்கசிவு இருந்தது தெரிய வந்தது.

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம், ரங்காராவ் பள்ளியை சேர்ந்தவர் சீனிவாஸ் ரெட்டி. இவரது மகன் அஸ்வித் ரெட்டி (வயது 9). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது ஒரு சிறுவன் வீசிய பந்து அஸ்வித் ரெட்டியின் தலையில் பலமாக தாக்கியது.

    அஸ்வித் ரெட்டி மறுநாள் பள்ளிக்கு சென்றார். அப்போது அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மகனை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அஸ்வித் ரெட்டியின் தலையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது ரத்தக்கசிவு இருந்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அஸ்வித் ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 

    • ஐதராபாத்தில் தில்சுக் நகரில் கடந்த 2013, பிப்ரவரியில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது.
    • இந்த குண்டு வெடிப்பில் 18 பேர் கொல்லபட்டனர். 130 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் தில்சுக்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோனார்க் மற்றும் வெங்கடதிரி தியேட்டர்களில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். 130 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுதொடர்பான வழக்கு தேசிய புலானாய்வு கோர்ட்டில் நடைபெற்றது இந்த வழக்கில் யாஷின் பதக்கல் உள்பட 5 பேர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது.

    இந்திய முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான யாஷின் பதக்கல் மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேந்ர்த ஷியா உர் ரஹ்மான் மற்றும் 3 பேருக்கு மரணதண்டனை வழங்கி சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து யாஷின் பத்கல் உள்பட 5 பேரும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு அங்கு நடந்து வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கே.லட்சுமணன், நீதிபதி பி.ஸ்ரீசுதா ஆகியோர் அடங்கிய அமர்வு, அவர்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என உத்தரவிட்டது.

    • 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்.
    • கழுத்து வலியால் மிகவும் அவதிப்படுவதாக அமீன் அகமது அன்சாரி பஸ் பயணிகளிடம் புலம்பி உள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு அவரது தந்தை உயிரிழந்ததையடுத்து கருணை அடிப்படையில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டது.

    அமீன் அகமது அன்சாரி 7 அடி உயரம் உள்ளார். 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் தினமும் சுமார் 10 மணி நேரம் தலைகுனிந்தபடி வேலை செய்ததால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார். இதனால் அவருக்கு கழுத்து, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்கு அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.

    கழுத்து வலியால் மிகவும் அவதிப்படுவதாக அவர் பஸ் பயணிகளிடம் புலம்பி உள்ளார். மேலும் அவர் தனக்கு வேறு வேலை வழங்குமாறு போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கையும் வைத்துள்ளார்.

    10 மணி நேர கண்டக்டர் பணியில் அமீன் அகமது அன்சாரி டிக்கெட் வழங்க குனிந்து போராடுவது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த புகைப்படம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

    இதையடுத்து போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர் அமீன் அகமது அன்சாரியை பொருத்தமான பணியில் நியமிக்க உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானா போக்குவரத்து தலையகத்தில் அவரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    ×