என் மலர்
நீங்கள் தேடியது "ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கு"
- ஐதராபாத்தில் தில்சுக் நகரில் கடந்த 2013, பிப்ரவரியில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது.
- இந்த குண்டு வெடிப்பில் 18 பேர் கொல்லபட்டனர். 130 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஐதராபாத்:
தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் தில்சுக்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோனார்க் மற்றும் வெங்கடதிரி தியேட்டர்களில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். 130 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கு தேசிய புலானாய்வு கோர்ட்டில் நடைபெற்றது இந்த வழக்கில் யாஷின் பதக்கல் உள்பட 5 பேர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது.
இந்திய முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான யாஷின் பதக்கல் மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேந்ர்த ஷியா உர் ரஹ்மான் மற்றும் 3 பேருக்கு மரணதண்டனை வழங்கி சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யாஷின் பத்கல் உள்பட 5 பேரும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு அங்கு நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கே.லட்சுமணன், நீதிபதி பி.ஸ்ரீசுதா ஆகியோர் அடங்கிய அமர்வு, அவர்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என உத்தரவிட்டது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 25-8-2007 அன்று கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
இந்த பயங்கரவாத தாக்குதலில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேரும் திறந்தவெளி திரையரங்கம் அருகே 12 பேரும் என மொத்தம் 44 பேர் பலியாகினர். மேலும், 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 170 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று, வக்கீல்களின் வாதப்பிரதிவாதம் கடந்த 7ம் தேதி நிறைவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை அனீக் ஷபீக் சயீத் மற்றும் முஹம்மது அக்பர் இஸ்மாயீல் ஆகியோரை குற்றவாளிகள் என ஐதராபாத் பெருநகர இரண்டாவது அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.ஸ்ரீனிவாஸ் தீர்ப்பளித்துள்ளார்.
இவர்களுக்கான தண்டனை விபரம் வரும் 10-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளித்ததாக கூறப்படும் தாரிக் அஞ்சும் தொடர்பாக அன்றைய தினம் தீர்ப்பளிக்கப்படும்.
இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பரூக் ஷர்புதீன் டர்க்காஷ் மற்றூம் சாதிக் இஸ்ரார் அஹமத் ஷேக் ஆகியோரை விடுவித்தும் நீதிபதி உத்தரவிட்டார். #Hyderabadtwinbomb #twinbombJudgement
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 25-8-2007 அன்று கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

இந்த சம்பவம் தொடர்பாக, தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 170 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று, வக்கீல்களின் வாதப்பிரதிவாதம் கடந்த 7ம் தேதி நிறைவடைந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Hyderabadtwinbomb #twinbombJudgement






