என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.
- சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ‘வி.சாலை’ என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலாக வந்துள்ளார்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரைவுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒரு கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
இதன் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.
திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை உள்பட பல இடங்களில் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் அங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். மாநாடு நடத்துவதற்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'வி.சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மாநாடு நடத்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் 21 கேள்விகள் கேட்டு புஸ்சி ஆனந்துக்கு கடிதம் அனுப்பினார்கள். அவரும் பதில் கடிதம் கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து மாநாட்டுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டது. விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் இதற்கான அனுமதி கடிதத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவரும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணி பாலாஜி, வக்கீல் அரவிந்த் ஆகியோரிடம் வழங்கினார்.
- அ.தி.மு.க ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
- உள்ளாட்சி தேர்தல் என்றாலும், சட்டமன்ற தேர்தல் என்றாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் முத்துபேட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருச்சியில் இருந்து கார் மூலம் புதுக்கோட்டை வந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு புதுக்கோட்டை அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதனை தொடர்ந்து புதுக்கோட்டைக்கு வந்த அவர் நிருபர்ளை சந்தித்தார்.
அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது அ.தி.மு.க. அரசு காலத்தில் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்றவர்களில் 3 ஆயிரம் பேரின் டாக்டர் கனவு ஆண்டு தோறும் நனவாகி வருகிறது. இதற்கு காரணம் அ.தி.மு.க. அரசுதான்.
2018-19ம் ஆண்டில் அரசு பள்ளியில் பயின்ற 30 பேர் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட பிறகு அதிக அளவிலான மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு வருகின்றனர்.
அ.தி.மு.க ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இதன் காரணத்தால்தான் காவிரி-குண்டாறு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதற்காக 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 70 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் இதனை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது. நான் ஒரு விவசாயி என்பதால் விவசாயத்திற்கு நீர் மேலாண்மை அவசியம் குறித்து நன்கு அறிவேன். எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். ஏனெனில் இத்திட்டம் நிறைவுற்றால் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவார்கள்.
40 மாத கால தி.மு.க. ஆட்சியில் தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவைகள் நடைபெற்று சட்ட, ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு, சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் தேர்தலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். 2026 வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றும். தொழிற்சாலை நிறைந்த மாநிலமாக மாறினால்தான் பொருளாதாரம் மேன்மை அடையும். 2015ம் ஆண்டு ஜெயலலிதா தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தினார். 2019ம் ஆண்டு எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் 3 லட்சம் கோடி தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, பூர்வாங்க பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் வந்து விட்டது.
தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அதிக அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில் முதலீட்டை ஈர்த்து வருவதாக கூறுகிறார்கள். நான் உள்பட எதிர்கட்சிகள் கேட்பதை போல இது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
விஜய் கட்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது. எங்கள் ஆட்சியில் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தினாலும் அனுமதி அளித்து, போலீஸ் பாதுகாப்பும் கொடுப்போம். ஆனால் தற்போது அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்த கூட தி.மு.க. அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது. நீதிமன்றம் சென்று அனுமதி பெறக்கூடிய நிலைஉள்ளது.
உள்ளாட்சி தேர்தல் என்றாலும், சட்டமன்ற தேர்தல் என்றாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
- வடக்கு-ஒடிசா-கங்கை மேற்கு வங்காளம் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் அதிக வாய்ப்பு உள்ளது.
சென்னை:
வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ளது.
ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திலிருந்து கிழக்கே சுமார் 310 கிமீ தொலைவிலும், 260 கிமீ கிழக்கு-தென்கிழக்கே கோபால்பூர் (ஒடிசா), பாரதீப் (ஒடிசா) க்கு தென்-தென்கிழக்கே 290 கிமீ மற்றும் திகாவிலிருந்து (மேற்கு வங்கம்) 410 கிமீ தெற்கே காற்றழுத்த தாழ்வு மையம் உள்ளது.
இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
அதன்பிறகு வடக்கு-ஒடிசா-கங்கை மேற்கு வங்காளம் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காணும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது.
- மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக தீர்வு காண செய்யும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு.
சென்னை :
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து சென்று வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை சிங்கள கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறை சிறையில் அடைத்திருக்கின்றனர்.
தற்போது 134 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 187 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காணும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது. என்றாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக தீர்வு காண செய்யும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தயாராக எழுதி வைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில், கைது செய்யப்படும் மீனவர்களின் எண்ணிக்கையை மட்டும் மாற்றி கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்புவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டு மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசுப்பள்ளிகளில் சனாதன சக்திகளில் ஊடுருவல் அதிகரித்துள்ளது.
- அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்புபவர்களை அடையாளம் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "அரசுப்பள்ளிகளில் சனாதன சக்திகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளர் என்ற பெயரில் பலர் அரசு கல்வி நிறுவனங்களில் ஊடுருவி தமது கருத்துக்களை திணித்து வருகின்றனர்.
சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசுப்பள்ளிகளில் மாணவர்களிடம் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை ஆன்மிகம் என்ற பெயரில் பேசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்புபவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்கள், அழகில்லாமல் இருப்பவர்கள் போன பிறவியில் பாவம் செய்தவர்கள் என்று அவர் பேசியுள்ளார். ஆகவே அவரை போலீசார் கைது செய்தது சரியான நடவடிக்கை தான்" என்று பேசியுள்ளார்.
- திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது.
- கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே...
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம்.
அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில். பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது.
இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.
தடைகளைத் தகர்த்தெறிந்து. கொடி உயர்த்தி. கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம்.
வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்!
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
— TVK Vijay (@tvkvijayhq) September 8, 2024
- நாசர் தலைமையிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
- கேரளாவின் ஹேமா கமிட்டி பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்.
தென்னிந்திய நடிகர் சங்க 68வது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தொடங்கியுள்ளது.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நடிகர் விஷால் சைக்கிளில் வந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் ஹேமா கமிட்டி போன்று தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைப்பது குறித்தும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடனான மோதல் போக்கு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்க தலைவர் சரவணன் அளித்த புகாரில் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் மட்டுமே பேசினேன். ஆனால் எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று போலீசாரிடம் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 794 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- 100 அடிக்கு குறையாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணை நீர்மட்டம் இருந்து வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள அணைகள் நிரம்பியது. பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அதிகளவில் வந்ததால் மேட்டூர் அணையும் நிரம்பியது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. தற்போது மீண்டும் நீர்வரத்து குறைந்து விட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115,93 அடியாக குறைந்தது.
அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 794 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டாவுக்கு 19 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் 100 அடிக்கு குறையாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணை நீர்மட்டம் இருந்து வருகிறது.
- ஆசிரியர்கள் பாதத்தை கழுவ வைப்பது எல்லாம் என்ன மாதிரியான கலாச்சாரம் என்று தெரியவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
- பாத பூஜை நமது கலாச்சாரம் என்பதால் அனுமதிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தது கண்டிக்கத்தக்க்து என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் தினத்தையொட்டி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஆசிரியர்கள் பாதத்தை கழுவ வைப்பது எல்லாம் என்ன மாதிரியான கலாச்சாரம் என்று தெரியவில்லை. ஆசிரியர்களை கொண்டாட வேண்டும். நாங்கள் கொண்டாடும் வகையில் யாரும் கொண்டாடியதில்லை. ஆனால், அவர்களின் பாதங்களை கழுவுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார், அதோடு, இனி இதுபோன்று நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்நிலையில், பாத பூஜை நமது கலாச்சாரம் என்பதால் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ஆன்மிகம் இல்லாத அரசியல் இப்போது செய்யமுடியாது. பள்ளிக்கல்வித்துறையில் பல குழப்பங்கள் உள்ளது. அசோக் நகர் மகளிர் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை நான் கண்டிக்கிறேன். ஆசிரியர்களை பலிகடா ஆக்குகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.
- மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் இல்ல திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், "மகாவிஷ்ணு பேசிய வீடியோவை நானும் பார்த்தேன்; கைது செய்யும் அளவிற்கு அவர் எதுவும் பேசவில்லை. இந்த விஷயத்தில் எதற்காக அன்பில் மகேஸ்க்கு இவ்வளவு சீற்றம் என்பது தெரியவில்லை. காலப்போக்கில் தெரியவரும்" என்று தெரிவித்தார்.
- 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது.
- உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் வருகிற ஜனவரி 5-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 25 மாநகராட்சிகள், 142 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளும், 388 ஊராட்சி ஒன்றியங்களும், 36 மாவட்ட ஊராட்சிகளும் இயங்கி வருகின்றன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது.
அதன்படி கடந்த 2019-ம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வார்டு மறுவரையறை, மாவட்ட எல்லை பிரிவு விவகாரம் போன்ற காரணங்களால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் வருகிற ஜனவரி 5-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
எனவே, இந்த 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் கி.பாலசுப்பிரமணியம் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர்வரும் சாதாரண, தற்செயல் தேர்தல்களை முன்னிட்டு, தேர்தல்களுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகிறது. இதில், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்கு பெட்டிகள், தற்போதைய தரம் மற்றும் நிலையை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நேரடியாக ஆய்வு செய்து, அவற்றின் தன்மையினை ஆராய வேண்டும்.
அதாவது, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் நல்ல நிலையில் உள்ளவை, சிறிதளவு பழுதடைந்து, அதனை சரி செய்வதன் மூலம் வாக்குப்பதிவுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளவை, முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளவை என வகை பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






