என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு கிடைத்தது.
- சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
சேலம்:
சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"நமது அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது என்று கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய உரிமையை மத்திய அரசுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன பயம்? கணக்கெடுப்பு நடத்த பஞ்சாயத்து தலைவருக்கு கூட அதிகாரம் உள்ளது.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்துவிட்டது. 69 சதவீத இடஒதுக்கீடு ரத்தாகிவிட்டால் அன்றைய தினமே தி.மு.க. ஆட்சி கலைந்துவிடும். ஏனென்றால், 69 சதவீத இடஒதுக்கீடு நமக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை, பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு கிடைத்தது. அதை காப்பாற்றுவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது. இதனால், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுயுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, நாமக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
- திமுக முப்பெரும் விழா ஏற்பாடு, திமுகவின் பவளவிழா ஏற்பாடுகள் குறித்தும், முதலமைச்சர் கேட்டறிந்தார்.
திமுக ஒருங்கிணைப்புக்குழுவுடன் அமெரிக்காவில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை கட்சியின் ஒருங்கிணைப்பு குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கும் என்றும் முதலமைச்சர் தமிழ்நாடு திரும்பியதும், திமுகவில் மாற்றங்கள் தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந் காணொலி வாயிலாக ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளை ஆய்வு செய்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாக தகவல் வெளியானது.
அப்போது, திமுக முப்பெரும் விழா ஏற்பாடு, திமுகவின் பவளவிழா ஏற்பாடுகள் குறித்தும், முதலமைச்சர் கேட்டறிந்தார்.
- தவெக சார்பில் செஞ்சி ராமச்சரந்திரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்.
- செஞ்சி ராமசந்திரனின் 50 ஆண்டு அரசியல் அனுபவத்தை பயன்படுத்த விஜய் முடிவு.
தவெகவில் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அதிமுகளின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை விஜய் கட்சியின் அவைத் தலைவராக நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக சார்பில் செஞ்சி ராமச்சரந்திரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், செஞ்சி ராமச்சந்திரன் தவெகவில் இணையும் பட்சத்தில், கட்சியின் அவைத் தலைவர் பதவி கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
செஞ்சி ராமசந்திரனின் 50 ஆண்டு அரசியல் அனுபவத்தை பயன்படுத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் செஞ்சி ராமசந்திரனுக்கு முக்கியத்துவம் இல்லாததை பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும், தவெகவின் மாநாட்டில் விஜய் முன்னிலையில் செஞ்சிராமசந்திரன் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
- சிறுமிக்கும், காதலனான இளைஞர் செல்லத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் செல்லம் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியை இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருவரும் காதலித்து வந்த நிலையில், வழக்கம்போல் சந்தி்தது பேசியுள்ளனர்.
அப்போது, சிறுமிக்கும், காதலனான இளைஞர் செல்லத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இளைஞர், தனது சித்தப்பா வீட்டில் இருந்த ஏர்கன் எடுத்து வந்திருந்த நிலையில், ஆத்திரத்தில் சிறுமியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், சம்பந்தப்பட்ட சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் செல்லம் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால் அங்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடிகர் விஜய் விருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்டு அமைக்க வேண்டும்.
- குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற காவல் துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மாநாடு நடைபெறும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட மாநாடு சம்பந்தப்பட்ட இடங்களின் வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை மேலும் கூறியதாவது:-
மாநாடு 2 மணிக்கு தொடங்கினால், 1.30 மணிக்குள் தொண்டர்கள் பந்தலுக்குள் வந்துவிட வேண்டும். 2 மணிக்கு மேல் மாநாட்டில் பங்கேற்க தொண்பர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மாநாட்டிற்கு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் எத்தனை பேர் வர உள்ளனர்? எந்த பிரதிநிதி தலைமையில் வருவார்கள் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.
குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.
த.வெ.க நிர்வாகிகள் அளித்த கணக்குப்படி, வாகனங்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே வர முடியும். ஆனால், 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று சொல்லி உள்ளீர்கள். மீதி வருபவர்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அமர நெரிசல் இல்லாமல் தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.
நடிகர் விஜய் விருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்டு அமைக்க வேண்டும்.
மாநாடு நடத்தப்படும் இடம் அருகில் உள்ள கிணறுகள் மூடப்பட வேண்டும்.
மின் ஒயர்கள் செல்லும் வழியில் நாற்காலிகள் போடாமல் தவிர்ப்பது நல்லது.
மாநாடு மேடையின் அளவு என்ன ? எத்தனை பேர் மேடையில் அமரப் போகிறார்கள் என்ற விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மாநாடு நடக்கும் பகுதியில் பட்டாசு வெடித்தல் வாண வேடிக்கை உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும்.
விஐபி பாஸ் வழங்கப்படும் விவரங்கள் முன்கூட்டியே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
மாநாடு முழுவதும், பார்க்கிங் உள்பட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.
போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.65 அடியாக உள்ளது. அணைக்கு 807 கன அடி நீர் வருகிறது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. 71 அடி உயரம் கொண்ட அணையில் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டதால் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட பாசனத்திற்காக அணையில் இருந்து 900 கன அடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் மழை ஓய்ந்ததால் அணைக்கு நீர்வரத்தும் 306 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 64 அடியில் இருந்து வேகமாக சரிந்து இன்று காலை 62.89 அடியாக குறைந்தது.
குடிநீருக்கான 69 கன அடி நீர் சேர்த்து 969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4180 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.65 அடியாக உள்ளது. அணைக்கு 807 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 800 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 5083 கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.15 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு.
- நடிகர் சங்க கட்டட பணிகள் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு என தகவல்.
தென்னிந்திய நடிகர் சங்க 68வது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.
கேரளாவின் ஹேமா கமிட்டி போன்று தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைப்பது குறித்தும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடனான மோதல் போக்கு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் பணிகளை தொடர்ந்தால் நடிகர் சங்க கட்டட பணிகள் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பிறகு, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறுகையில், "பொதுக்குழு முன்பாக இருந்த சவால்களை மீறி பொதுக்குழு கூட்டம் நடந்துள்ளது. பொதுக்குழு மகிழ்ச்சியாக நடந்துள்ளது. சங்கர தாஸ் சுவாமிகள் பெயரில் டெல்லி கணேஷ், விஜயகுமாரி, 10 நாடக கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது.
10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.
நடிகைகளுக்கு பாலியல் புகார் குறித்து நடிகை ரோகிணி பேசுகையில்," 2019ம் ஆண்டிலேயே கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகை மட்டும் இன்றி யாரும் புகார் கொடுக்கலாம். வழக்கறிஞர், என்ஜிஓ கமிட்டியில் உள்ளனர்.
புகார் தெரிவிக்க எண் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.
பெண் உறுப்பினர்களுக்கு புகார் எண், எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும். புகாருக்கு உள்ளான நபர் 5 ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து வெளியே தெரிவிக்கப்படாது. எந்த பெண்ணும் பயத்துடன் இருக்கக்கூடாது.
எந்த நடிகையும் தைரியமாக புகார் கூறலாம்.
நடிகை மீதான புகார் பெரிதுபடுத்தப்படுகிறது. நடிகை கூறும் புகார் மட்டும் திரும்ப திரும்ப பேசப்படுகிறது. எல்லா துறையிலும் அத்துமீறல் இருக்கிறது" என்றார்.
- ரூ.136 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள், 500 வீடுகள் ஆகியவை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.
- திருச்செந்தூரில் எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் ரூ. 200 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலுடன் இணைந்த மானூா் அம்பலவாண சுவாமி கோவிலில் இன்று அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதன் பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் 2021-22-ம் ஆண்டில் 1000 ஆண்டுகள் தொன்மையான கோவில்கள் மற்றும் போதிய வருமானம் இல்லாத கோவில்களில் குடமுழுக்கு நடத்த ரூ. 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியின் கீழ் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
தொடர்ந்து 2023-2024, 2024-2025 என 3 ஆண்டுகளில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உபயதாரர்கள் மூலம் ரூ. 142 கோடி பெறப்பட்டு 1000 ஆண்டுகள் பழமையான 37 கோவில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று வரை நெல்லை மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுடன் சேர்த்து 2098 கோவில்களில் கும்பாபிஷேகம் இதுவரை நடந்துள்ளது. இன்று மட்டும் 55 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 250 கோவில்களில் குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் திருத்தேர் பராமரிப்பு, தேர் கூடம் அமைத்தல், தெப்பக்குளம் பராமரித்தல் என நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பணிகள் நடந்து வருகிறது.
மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுக்கு சொந்தமான 173 ஏக்கர் நஞ்சை, 28 ஏக்கர் புஞ்சை நிலங்கள் முழுவதும் குத்தகைக்கு விடப்பட்டு அந்த தொகை கோவிலின் அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான 16 கோவில்களுக்கும், நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட 60 கோவில்களுக்கும் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
805 கோவில்களுக்கு சொந்தமான ரூ. 6 ஆயிரத்து 703 கோடி மதிப்புள்ள சுமார் 6 ஆயிரத்து 853 ஏக்கர் நிலம் தி.மு.க. ஆட்சியில் தான் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடங்களில் கோவிலின் பெயர்கள் இடம் பெறும் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் தான் ரூ.92 கோடி செலவில் 47 புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ.59 கோடி செலவில் புதிய மரத்தேர்கள் செய்யப்பட்டு வருகிறது. ரூ.11.93 கோடி செலவில் மரத்தேர் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
ரூ.28 கோடியே 44 லட்சம் செலவில் 172 கோவில்களில் மரத்தேர் கொட்டகைகள் அமைக்கும் திருப்பணிகள் நடந்து வருகிறது. ரூ.29 கோடி செலவில் 5 புதிய தங்கத்தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.
இன்னும் ஓரிரு மாதத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் தங்கத்தேர் பணி நிறைவு பெறும். 9 வெள்ளித் தேர் சுமார் ரூ.27 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. ரூ.120.33 கோடி செலவில் 220 குளங்கள் பழுது பார்க்கப்பட்டுள்ளது.
ரூ.321 கோடி மதிப்பீட்டில் 81 புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ. 86.97 கோடி மதிப்பீட்டில் 121 அன்னதான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ. 187 கோடி மதிப்பீட்டில் 28 பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. ரூ. 136 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள், 500 வீடுகள் ஆகியவை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.
ரூ.1530 கோடி செலவில் 19 கோவில்களில் பெருந்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருச்செந்தூர், பழனி உட்பட கோவில்களில் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து இவ்வாறு திட்டங்களை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். திராவிட மாடல் தி.மு.க. ஆட்சிதான் இந்து சமய அறநிலையத்துறையின் பொற்கால ஆட்சி.
திருச்செந்தூரில் எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் ரூ. 200 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு இந்து சமய அறநிலைத்துறை எவ்வித இடைஞ்சலும் கொடுக்கவில்லை.
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதிக்குள் பணிகள் அனைத்தையும் முடித்து விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் அதற்கு உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலில் உள்ள வெள்ளித்தேர் மற்றும் உள்தெப்பம் அருகே கட்டப்பட்டு வரும் ஆராட்டு மண்டபத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே ரத வீதியில் நிறுத்தப்பட்டிருக்கும் நெல்லையப்பர், காந்திமதியம்மன் உள்ளிட்ட 5 தேர்களை அவர் ஆய்வு செய்தார்.
5 தேர்களையும் மழைக்காலத்தில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிமெண்ட் தளம் அமைக்கும் பணியையும் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.
- இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஒரு நாள் மட்டும் 17 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது.
- தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரி நீரை நிரப்புவதற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது. இந்த தண்ணீர் ஒரு ஆண்டிற்கு போதுமானது.
தருமபுரி:
தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள பா.ம.க. கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று தருமபுரிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் இன்று வருகை தந்தனர்.
அப்போது அன்புமணி ராமதாஸ் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் ஒரே ஒரு பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது. அது தண்ணீர் பிரச்சனை. இந்த பிரச்சனை தீர்க்க பா.ம.க.வினர் பல கட்டங்களாக போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அரங்கேற்றி இருக்கிறோம். அதன் விளைவாக நிறைவேற்றப்பட்டது தான், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம்.
தருமபுரி மாவட்டம் முழுவதும் விவசாயம் நிறைந்த மாவட்டம் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால், 2, 3, அல்லது 5 ஏக்கர் வரை நிலம் வைத்து முதலாளியாக இருந்த விவசாயிகள் தற்போது கூலி ஆட்களாக திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், பெங்களூரு, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினக்கூலிகளாக வேலைக்கு செல்கின்றனர்.
தருமபுரி மாவட்டத்திலேயே அவர்கள் சொந்தமாக தொழில் செய்து முன்னேறுவதற்காக பல திட்டங்களை பா.ம.க. முன்னெடுத்தது. இதில் எண்ணகோள்புதூர் திட்டம், ஆணைமடுவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் முக்கிய திட்டமான காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்ற கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்தோம். இதுபோன்று பல கட்டங்களாக போராட்டம் நடத்தியதன் விளைவாக சென்ற ஆட்சியில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றுவதாக அவர் அறிவிப்பையும் வெளியிட்டனர்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு காவிரி உபரி நீர் திட்டம் குறித்து எந்தவித அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை.
இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஒரு நாள் மட்டும் 17 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரி நீரை நிரப்புவதற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது. இந்த தண்ணீர் ஒரு ஆண்டிற்கு போதுமானது.
இதைக்கூட நிறைவேற்ற தி.மு.க. அரசுக்கு மனமில்லை. அதனால் அகிம்சை முறையில் முதற்கட்டமாக அடுத்த மாதம் 4-ந்தேதி தருமபுரியில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை அனைத்து கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கு அரசுக்கு செவி சாய்க்கவில்லை என்றால், எங்களது போராட்டம் வேறு விதமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு மாதம் ஒருமுறை பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ.100-ம், கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ.150-ம் வழங்கப்படுவதாகவும் தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது.
- பலமுறை நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2021 மே மாதம், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, நான் ஏற்கெனவே ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள ஏழை, எளிய ஆதி திராவிடர் மாணவர்கள் அடிப்படை வசதியின்றி சொல்லொண்ணா துயரம் அனுபவித்து வருகிறார்கள் என்பதையும், பல இடங்களில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளேன்.
ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் உள்ள சுமார் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளில் சுமார் 82,500 பள்ளி மாணாக்கர்களும், சுமார் 16,500 கல்லூரி மாணாக்கர்களும் என்று சுமார் 99 ஆயிரம் மாணவ, மாணவியர் தங்கியுள்ளதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விதிகளின்படி, உணவுப்படி வழங்கப்படுவதாகவும், இது தவிர பண்டிகை காலங்களில் சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதியும், சோப்பு, எண்ணெய் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு மாதம் ஒருமுறை பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ.100-ம், கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ.150-ம் வழங்கப்படுவதாகவும் தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது.
மயிலாப்பூரில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் பல கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ளதாகவும், அங்குள்ள கழிவறைகள் சுகாதாரமின்றி, கதவுகள் உடைந்துள்ள நிலையில் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் வெளியாட்கள் வளாகத்தில் மதுபானங்கள் அருந்துவதாகவும், அசைவ உணவு வழங்கப்படும்போது 3-ல் 1 பங்கு மாணவர்களே சாப்பிடக்கூடிய அளவில் உணவு வழங்கப்படுவதால், பல மாணவர்கள் சாப்பாடு இல்லாமல் பசியோடு இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், இது போன்ற பல குறைகள் குறித்து பலமுறை நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளை போர்க்கால அடிப்படையில் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை சீர் செய்ய தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குழுவினரிடம் கட்சி செயல்பாடு குறித்து கேட்டறிகிறார்.
- 2026 சட்டசபை தேர்தலுக்கான வியூகம் குறித்தும் சில ஆலோசனை வழங்குவார் என தெரிகிறது.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தற்போது அவர் சிகாகோ நகரில் உள்ளார்.
இன்றிரவு சிகாகோ நகரில் இருந்தபடி தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் அவர் காணொலியில் ஆலோசனை நடத்துகிறார்.
தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள கட்சியின் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் காணொலி வாயிலாக இணைகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குழுவினரிடம் கட்சி செயல்பாடு குறித்து கேட்டறிகிறார்.
மாவட்டந்தோறும் பொது உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கூட்டம் எந்த அளவில் நடத்தப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறிகிறார்.
அது மட்டுமின்றி 2026 சட்டசபை தேர்தலுக்கான வியூகம் குறித்தும் சில ஆலோசனை வழங்குவார் என தெரிகிறது.






