என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
    • தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை குறைந்து, வெயில் வாட்டி வதைத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

    அந்த வகையில் நேற்று முன்தினம் இரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. தமிழ்நாட்டில் நாளை 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கேரளா, மாஹே, உள் மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து அக்டோபர் 2-ந்தேதி காலை புறப்படுகிறது.
    • அக்டோபர் 7-ந்தேதி திருக்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.

    சென்னை:

    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையான் கருட சேவைக்கு தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து அக்டோபர் 2-ந்தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் புறப்படுகிறது.

    இதுகுறித்து இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று 250 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் எடுத்துச் செல்லப்படும் ஏழுமலையான் கருடசேவைக்கான, வெண்பட்டு திருக்குடைகள்.

    தமிழக பக்தர்கள் சார்பாக, இந்த ஆண்டு, இந்து தர்மார்த்த சமிதி, திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை, சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்ய உள்ளது.

    அக்டோபர் 2-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்குடைகள் ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்தை திருக்குறுங்குடி ஜீயர் மடம் மடாதிபதிகள் ராமானுஜ ஜீயர் 50-வது பட்டம் (வர்த்தமான சாமி) ஆசி வழங்கி தொடங்கி வைக்கிறார்.

    திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, அன்று மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. பின்னர், யானைக்கவுனி பாலம், சூளை நெடுஞ்சாலை, ஏ.பி.ரோடு, வடமலையான் தெரு, தாணா தெரு, செல்லப்பா தெரு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது.

    அக்டோபர் 7-ந்தேதி திருக்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும். திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிதமான மழை பெய்யும்.
    • வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை குறைந்து, வெயில் வாட்டி வதைத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

    அந்த வகையில் நேற்று முன்தினம் இரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனைத்தொடர்ந்து மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை (சனிக்கிழமை) முதல் தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

    நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதாவது, இந்த பகுதிகளில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யக் கூடும். இதன் தொடர்ச்சியாக வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இத்திருவிழா உற்சாகமாக நடைபெற உள்ளது.
    • லுலு ஹைப்பர் மார்க்கெட், பிரத்யேக சலுகைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு அற்புதமான தள்ளுபடிகளுடன் தயாராகி வருகிறது.

    கோயம்புத்தூர் லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேக் மிக்சிங் திருவிழா வரும் செப்டம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது.

    பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இத்திருவிழா உற்சாகமாக நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற Cookd TVன் சிஇஓ அதித்தியன் கலந்து கொண்ட சிறப்பிக்க உள்ளார்.

    கொண்டாட்டம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமான பாரம்பரிய கேக் மிக்சிங் விழா, வரவிருக்கும் விடுமுறை காலத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைய இருக்கிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், லூலு ஹைப்பர்மார்க்கெட் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பண்டிகைக்கால அனுபவத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை இந்த விழா சிறப்பித்துக் காட்டுகிறது.

    அதே நேரத்தில், லுலு டோனட் விழாவை நடத்துகிறது. இது அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாடிக்கையாளர்கள் கிளாசிக் சுவைகள் முதல் அற்புதமான புதிய வகைகள் வரை டோனட்களின் மகிழ்ச்சிகரமான வகைப்படுத்தலில் ஈடுபடலாம் என்றும் இது அனைத்து இனிப்பு பிரியர்களுக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத.

    நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், லுலு ஹைப்பர் மார்க்கெட், பிரத்யேக சலுகைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு அற்புதமான தள்ளுபடிகளுடன் தயாராகி வருகிறது.

    பண்டிகை இனிப்புகள் முதல் வீட்டிற்குத் தேவையான பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல வகைகளில் நம்பமுடியாத சலுகைகளை வாங்க இருக்கிறது.

    லுலுவின் நவராத்திரி மற்றும் தீபாவளி ஆஃபர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருங்கள் மற்றும் பண்டிகை காலத்தின் உற்சாகத்தில் எங்களுடன் இணைந்திருங்கள் என்று லுலு ஹைப்பர் மாக்கெட் தெரிவித்துள்ளது.

    லுலு ஹைப்பர் மார்க்கெட் கோயம்புத்தூர் உங்கள் அனைத்து ஷாப்பிங் தேவைகளுக்கும், முறியடிக்க முடியாத சலுகைகள் மற்றும் மகிழ்ச்சிகரமான அனுபவங்களுடன், ஒரே இடத்தில் இருக்கும் இடமாகத் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு அளிப்பு.
    • நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பளித்துள்ளார்.

    2014ம் ஆண்டு சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த கொலை வழக்கில் 5 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 பேருக்கு தலா 2 ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பளித்துள்ளார்.

    அதன்படி, பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை காம்தார் நகர் முதல் தெருவிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

    மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் 4ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    இந்நிலையில், எஸ்பிபி வாழ்ந்த இல்லம் உள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    சென்னையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வசித்த பகுதி சாலைக்கு அவரது பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது பதிவில், "என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று இளையராஜா பதிவிட்டுள்ளார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயர் சூட்டியதற்காக முதல்வருக்கு கமல்ஹாசன், எஸ்.பி.பி.சரண் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • செந்தில் பாலாஜியை சிறை வாசலில் ஆர்.எஸ். பாரதி வரவேற்றார்.
    • சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மெரினாவுக்கு சென்றார்.

    பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து 471 நாட்கள் கழித்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறை வாசலில் ஆர்.எஸ். பாரதி வரவேற்றார்.

    சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலத்த வரவேற்புடன் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

    இதைத் தொடர்ந்து மெரினா சென்ற செந்தில் பாலாஜி அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். 

    • செந்தில் பாலாஜியை சிறை வாசலில் ஆர்.எஸ். பாரதி வரவேற்றார்.
    • சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

    பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து 471 நாட்கள் கழித்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறை வாசலில் ஆர்.எஸ். பாரதி வரவேற்றார்.

    சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலத்த வரவேற்புடன் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "தி.முக. தலைவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்நாள் முழுக்க எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது போடப்பட்ட பொய் வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். என் மீதான பொய் வழக்கில் இருந்து விரைவில் மீண்டு வருவேன்," என்று தெரிவித்தார்.  

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
    • செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜியின் சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

    இதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்ட செய்தி அறிந்து அவரது ஆதரவாளர்கள் சிறை வாசலில் குவிய தொடங்கினர்.

    செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருந்தார். இதனால் செந்தில் பாலாஜி எப்போது சிறையில் இருந்து வெளியே வருவார் என்ற கேள்வி எழுந்தது.

    இது தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து பிணை உத்தரவாதத்தை ஏற்பதில் ஆட்சேபனை இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி தரப்பில் ரூ.25 லட்சம் இரு நபர் ஜாமின் உத்தரவாதம் முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வர தடை இல்லை என உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரது பாஸ்போர்ட் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்துள்ளார்.

    சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு அவரது ஆதரவாளர்கள், திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் அந்த பகுதியில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
    • வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளிவைத்தார்.

    தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

    இதைதொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. எப்போது செந்தில் பாலாஜி விடுதலையாகி வருவார் என அவரது ஆதரவாளர்கள் சிறை வாசலில் குவிந்து காத்துக் கிடக்கின்றனர்.

    இந்த நிலையில், தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுக்கிறேன் என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

    மேலும், வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளிவைத்தார்.

    இந்த வழக்கின் மீதான விசாரணை சற்று நேரம் முன்பு நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார். அப்போது, "உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளன. பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம். விசாரணை அதிகாரி முன்பு தாக்கல் செய்யுங்கள்.

    பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை" என நீதிபதி தெரிவித்திருந்தார்.

    அதற்கு, "விசாரணை அதிகாரி முன்பு இந்த நேரத்தில் எப்படி பிணை உத்தரவாதத்தை தாக்கல் செய்ய முடியும் என செந்தில் பாலாஜி தரப்பி தெரிவித்தது.

    இதனால், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமினில் இன்று வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

    • தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துகிறார்.
    • விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார்.

    சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தார்.

    அதன்படி வருகிற 27-ந் தேதி (நாளை) காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளது.

    இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

    அப்போது, தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துகிறார். விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார்.

    பிரதமரை சந்தித்து முடித்ததும் நாளை மாலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    • சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இருந்தது.
    • மூன்று வாரங்களில் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

    தமிழகம் முழுக்க கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ. 8 கோடியே 55 லட்சம் தொகையை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மாநிலம் முழுக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள சானிடரி நாப்கின் எந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இருந்தது.

    இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க வேண்டும் என்றும் இதற்காக தமிழக அரசு ரூ. 8 கோடியே 55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    ×