என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள்தான் பாதுகாக்கப்பட்டவை.
- வழக்கை 2 மாதங்களில் பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து காளிப்பிரியனின் சொத்து விபரங்களை தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள்தான் பாதுகாக்கப்பட்டவை. ஆனால், சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று கூறிய நீதிபதி இந்த வழக்கை 2 மாதங்களில் பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
- 21 மாவட்டங்களிலுள்ள 195 பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறைக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 95 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 171 பள்ளிகளில் 56.11 கோடி ரூபாய் செலவில் 350 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள்;
அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தூய்மைக்கு புத்துயிர் அளித்தல் திட்டத்தின் கீழ், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 24 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 8.33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் என மொத்தம் 21 மாவட்டங்களிலுள்ள 195 பள்ளிகளில் ரூ.64.44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறைக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் 6 மாவட்டங்களில் 35 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 99 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 8 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான 95 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- உழவர்களின் ஒப்பற்றத் தலைவர் என்றால் அது சவுத்ரி சரண்சிங் தான்.
- மூன்று முத்தான சட்டங்களைக் கொண்டு வந்தவர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,
உழவர்களின் நலனுக்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட சவுத்ரி சரண்சிங்கின் பிறந்தநாளான இன்று தேசிய உழவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள உழவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உழவர்களின் ஒப்பற்றத் தலைவர் என்றால் அது சவுத்ரி சரண்சிங் தான். உத்தரப்பிரதேச அமைச்சர், உத்தரப்பிரதேச முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய நிதியமைச்சர், துணைப் பிரதமர், பிரதமர் என ஏராளமான பதவிகளை வகித்த போதும் கடைசி வரை உழவர்களை மறக்கவில்லை. அவர் உழவர்களுக்காகவே வாழ்ந்தவர்; உழைத்தவர். உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த போது, 1) கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து உழவர்களை மீட்க, கடன் மீட்பு சட்டம், 2) உழுபவர்களுக்கே நிலத்தை சொந்தமாக்கும் சட்டம், 3) ஜாமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் ஆகிய மூன்று முத்தான சட்டங்களைக் கொண்டு வந்தவர். அந்த சட்டங்கள் தான் உழவர்களை அழிவிலிருந்து மீட்டன.
உழவர்களின் நலனுக்காக சரண்சிங்கிற்கு பல கனவுகள் இருந்தன. அந்தக் கனவுகளை நனவாக்குவதற்காக போராடுவதற்கு இந்த நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்வோம் என கூறியுள்ளார்.
- மோசடி கும்பலிடம் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டாம்.
- போலியான அழைப்புகள் வந்தால் அந்த தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் புகார் செய்யுங்கள் என்று அறிவித்து உள்ளனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக மோசமான வானிலை, புயல் மற்றும் கனமழை காரணமாக பல விமானங்கள் தாமதம், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இதை பயன்படுத்திக் கொண்டு மோசடி கும்பல் தற்போது புதுவிதமாக பாதிக்கப்பட்ட விமான பயணிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விமான பயணம் தாமதம் அல்லது ரத்து போன்றவற்றிற்கு இழப்பீடுகள் தருவதாக கூறி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டு சுருட்டி வருகின்றனர்.
இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி, விமான பயணிகளிடம் நூதன முறையில் மோசடி செய்யும் கும்பல் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி, விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து ஆனதற்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையை கொடுக்கப் போவதாக, போலியான செல்போன் அழைப்புகள் மூலம், பயணிகளை ஏமாற்றி வருகின்றனர். அதற்கும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
அதைப் போன்ற இழப்பீடுகள் கொடுக்கும் திட்டமும் இல்லை. எனவே இதைப் போன்ற போலியான செல்போன் அழைப்புகள் வந்தால், பயணிகள் யாரும் அதை நம்ப வேண்டாம்.
பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அவர்கள் பயணிக்க இருந்த விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு, விவரங்கள் கேட்டு அறிந்து, தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மோசடி கும்பலிடம் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் பயணிகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. போலியான அழைப்புகள் வந்தால் அந்த தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் புகார் செய்யுங்கள் என்று அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, இந்த போலி மோசடி கும்பல் குறித்து போலீசிலும் புகார் தெரிவித்து உள்ளோம் என்றனர்.
- பேரூர் மற்றும் சிரவை ஆதினங்கள் தொடங்கி வைத்தனர்.
- சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை இந்தாண்டு 30,000 கி.மீ பயணிக்க உள்ளது.
இதையொட்டி, கோவை ஆதியோகி முன்பு நேற்று (டிசம்பர் 22) நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் ஆரத்தி எடுத்து தொடங்கி வைத்தனர்.

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே ஆதியோகியை தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளில் பயணிக்க உள்ளன. மஹாசிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் இந்த ரதங்கள் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன.
இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற பேரூர் ஆதீனம் அவர்கள் நிகழ்வில் பேசுகையில், "மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் மஹாசிவராத்திரையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறோம். இவ்விழா நம் திருக்கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை மக்களின் விழாவாக, மக்களின் வழிபாட்டு நிகழ்வாக மாற்றிய பெருமை ஈஷா யோக மையத்தையே சாரும்.
ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இருந்து பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். இவ்விழாவில் கலந்து கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆதியோகி ரதங்கள் இங்கிருந்து புறப்பட்டு கிராமங்கள் மற்றும் நகரங்கள்தோறும் பயணிக்க உள்ளன.
கோவில்களில் மூலவர் இருப்பதை போல் ஆதியோகி இங்கு இருந்து கொண்டு அருள் பாலிக்கிறார். இந்த ரதங்களில் உள்ள ஆதியோகி திருமேனிகள் உற்சவ மூர்த்திகளை போல் ஊர்தோறும் பயணித்து பக்தர்களுக்கு அருள்பாலிகின்றனர். அதன் நல்ல தொடக்க விழா இன்று தொடங்குகிறது.
ஈஷா மையத்தின் பணிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே வருகிறது. ஈஷாவின் சமயப் பணிகளும் சமுதாயப் பணிகளும் மேலும் சிறந்த விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.
இதற்கு முன்னதாக, கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
- கலைஞர் வழியிலான நமது திராவிட மாடல் அரசு உங்களில் ஒருவனாக இருந்து உழவர்களைக் காக்கும்!
- உணவு உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக நாம் படைத்து வரும் சாதனை தொடரும்!
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் வேளாண்துறையின் முன்னேற்றத்திற்கு அளித்த பங்களிப்பை போற்றும் விதமாக அவரது பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இன்று கொண்டாடப்படும் தேசிய விவசாயிகள் தினத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்கள் அனைவருக்கும் தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்!
இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி என வேளாண் பெருங்குடி மக்களைப் போற்றிய தலைவர் கலைஞர் வழியிலான நமது திராவிட மாடல் அரசு உங்களில் ஒருவனாக இருந்து உழவர்களைக் காக்கும்! உணவு உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக நாம் படைத்து வரும் சாதனை தொடரும்! என கூறியுள்ளார்.
- பிரதமர் மோடி யாரை விரும்புகிறாரோ, அவரைத் தான் தலைமை தேர்தல் ஆணையராகவோ, ஆணையர்களாகவோ நியமிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.
- ஜனநாயகம் செழிக்க வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நேர்மையாக, பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதற்காகத் தான் தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் ஆணையர்களை தேர்வு செய்வதற்கு கடந்த காலங்களில் பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது நீதிபதி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரிலேயே தேர்வு செய்யப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்தில் பிரதமர் மோடி ஆட்சியில் செய்த திருத்தத்தின்படி, மூவர் தேர்வுக் குழுவில் தலைமை நீதிபதியை அகற்றி விட்டு ஒன்றிய அமைச்சரை குழுவில் சேர்க்கப்பட்டது. இதன்மூலம் மூன்றில் இரண்டு பேர் பெரும்பான்மை என்ற அடிப்படையில் எதிர்கட்சித் தலைவரின் பரிந்துரை புறக்கணிக்கப்பட்டு, பிரதமர் மோடி யாரை விரும்புகிறாரோ, அவரைத் தான் தலைமை தேர்தல் ஆணையராகவோ, ஆணையர்களாகவோ நியமிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.
இந்நிலை ஏற்பட்டது தேர்தல் ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய ஆபத்து, பெரும் கேடு என்று தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். அதையெல்லாம் புறக்கணித்த காரணத்தினால் இன்றைக்கு தேர்தல் ஆணையமே பிரதமர் மோடியின் கைப்பாவையாக மாறி விட்டது. ஜனநாயகம் செழிக்க வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நேர்மையாக, பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டும். அத்தகைய சூழல் ஏற்படுவதன் மூலமே இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வேல்முருகன் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கே.கே.நகர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலிமையாக இருக்கின்றன. எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகள் வெல்லும் என்ற முதல்வரின் கருத்து சரியானது. தி.மு.க. செயற்குழுவில் 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாக இருக்க வேண்டும் என தீர்மானம் தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதை காட்டுகிறது.
தி.மு.க. கூட்டணி தமிழ்நாட்டில் பல இடங்களில் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது உறுதி. வருகிற சட்டமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகள் ஒரே அணியிலே திரளுவார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை.
வேல்முருகன் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பா.ஜ.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அது வெற்றிகரமாக அமையாது என்பதை கடந்த தேர்தலில் மக்கள் உணர்த்தி உள்ளனர்.
பத்திரப்பதிவு துறையில் கட்டணம் உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு எப்போதும் தி.மு.க. கூட்டணி உறுதுணையாக இருக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். புதிய கல்விக் கொள்கை திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தது தவறானது ஆகும்.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து இந்தியா முழுவதும் வரும் 28-ந்தேதி அம்பேத்கர் அமைப்புகள் பல்வேறு கட்சியினர்கள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 'அம்பேத்கர் அம்பேத்கர்' என்று ஆயிரம் முறை முழக்கங்கள் எழுப்பப்படும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் முற்றிலுமாக போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தை கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மேற்கு மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- 63 மலை கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
- கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள், முதியோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
அரூர்:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராமங்களில் நேற்று அதிகாலை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக மலைகளில் ஆங்காங்கே சிறுசிறு அருவிகள் உருவாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரின் காரணமாக சித்தேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில், சூரியக்கடை பிரிவு சாலை அருகே மூன்றாவது முறையாக மண் சரிவு ஏற்பட்டு சூரியக்கடை சித்தேரி பேரரூபுதூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 63 மலை கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக இவ்வழியாக கார் மற்றும் பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள், முதியோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் சேதமான மண் சரிவை சீரமைத்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தி.மு.க. அரசின் திறனற்ற நிர்வாகத்தால் அலங்கார ஊர்தி இடம்பெறாத நிலை.
- வருடந்தோறும் அலங்கார அணிவகுப்பு ஊர்தி இடம்பெறுவது மரபு.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
குடியரசு தின விழாவில் தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அ.தி.மு.க. ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு.
ஆனால் தி.மு.க. அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன்.
தி.மு.க. அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உழவர் சந்தைகள் வெள்ளி விழாவை கொண்டாடி வருகின்றன.
- தி.மு.க. அரசு விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது.
சேலம்:
உழவர் சந்தை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக வெள்ளி விழா சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் நடைபெற்றது.
இந்த வெள்ளி விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சூரமங்கலம் உழவர் சந்தையில் வெள்ளி விழாவை தொடங்கி வைத்து விவசாயிகள் விற்பனை செய்யும் காய்கறிகளின் தரத்தை நேரடியாக ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் நலன் கருதி கடந்த கலைஞர் ஆட்சியில் 1999 ஆம் ஆண்டு முதன்முதலாக 100 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது 9 உழவர் சந்தைகள் சேலம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
இன்று 25-வது ஆண்டு நிறைவடைந்ததை யொட்டி, வெள்ளி விழாவை இந்த உழவர் சந்தைகள் கொண்டாடி வருகின்றன.
அதாவது விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக இந்த உழவர் சந்தைகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது.
சேலத்தில் உள்ள சூரமங்கலம் உழவர் சந்தையில் 170 முதல் 200 வரை கடைகள் உள்ளன. அந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்கள் விற்பனையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த உழவர் சந்தைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.
அவர்களிடம் கேட்ட போது, உழவர் சந்தைகளில் தரமான, புதிய காய்கறிகள் கிடைப்பதாக பெருமை யோடு சொல்லுகிறார்கள்.
அந்த வகையில் உழவர் நலன் காக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உழவர் சந்தைகளை மேம்படுத்த 27.50 கோடி ரூபாய் அளவில் ஒதுக்கீடு செய்து, சீரமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல விவசாயத்திற்கு என தனி நிதிநிலை அறிக்கையை கொண்டு வந்தவர் ஸ்டாலின். அதாவது தனி நிதிநிலை அறிக்கையில் கடந்த 21- 22 ம் ஆண்டில் 32.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதனை தொடர்ந்து 2022 -2023 -ல் 33 ஆயிரம் கோடியும், 2023 -2024- ம் ஆண்டில் ரூ.38 ஆயிரத்து 904 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார்.
அது மட்டுமில்லாமல் நீர் வளத் துறையை உருவாக்கி அதற்காக மூத்த அமைச்சர் துரைமுருகனை நியமித்து, நீர் மேலாண்மை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த அரசு, விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது. தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலுவிடம் திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விவசாயிகளுக்கு தமிழக அரசு எதும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளாரே? என்று கேட்டதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
தோழமைக் கட்சிகளைப் பொறுத்தவரை இந்த ஆட்சியை பாராட்டி வருகிறார்கள்.
ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக பா.ம.க. தற்போது மனசாட்சியை மறந்து பேசி வருகிறது. வேளாண்மைக்கு தனியாக நிதி ஒதுக்குகிறோம், அதற்கான செலவு செய்யப்படுகிறது.
ஆனால் காழ்புணர்ச்சி காரணமாக மனசாட்சியை மறந்து பேசுகின்றனர். மனசாட்சியோடு இருப்பவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள் என பா.ம.க.விற்கு காட்டமான பதில் அளித்தார்.
- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51-வது ஆண்டு நினைவுநாள் நாளை அனுசரிக்கப்படுகிறது.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
சென்னை:
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நே.சிற்றரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51-வது ஆண்டு நினைவுநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் (சிம்சன் அருகில்) அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






