என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும்.

    2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்.

    பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும் இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ள வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, முதல் நாளில் முற்பகல் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல், 2ம் நாள் முதல் முற்பகல் 200 பேருக்கும், பிற்பகலில் 200 பேருக்கும் போக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு முன்பு பரிசுத்தொகுப்பினை வழங்கிடும் வகையில் டோக்கனில் தேதியை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் கடைகளில் போலீசாரின் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • காவல் ஆணையாளர் அலுவலகத்தில், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
    • பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை.

    புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், அதன் கொண்டாட்டம் தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

    அப்போது, புத்தாண்டை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாக கொண்டாட பொது மக்களுக்கு, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் புத்தாண்டு தினம் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் 2025-ம்ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி பொதுமக்கள் அமைதியாகவும். பாதுகாப்பகாவும் புத்தாண்டு கொண்டாட இன்று (28.12.2024) காவல் ஆணையாளர் அலுவலகத்தில், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில் சென்னை பெருநகரில் பணிபுரியும் கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர். 31.12.2024 அன்று இரவு 9.00 மணியிலிருந்து காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக் கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை தடுத்தல், அதிவேகமாக செல்லும் வாகனங்களையும், இருசக்கர வாகன வேக பந்தயத்தில் ஈடுபடுவர்களையும் தடுத்து கண்காணிக்க கண்காணிப்பு சோதனை குழுக்களை அமைத்து விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல் துறை பணி சிறப்பாக செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளார்கள்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2024 மாலை முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. கடற்கரையோரங்களில் உரிய தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்யவும்.

    மெரினா, சாந்தோம். எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள். குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும்.

    மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் (Police Assistant Booth) அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தவும். மெரினா. சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மைய கூடாரங்கள் அமைத்தும், முக்கிய இடங்களில் Drone Cameraக்கள் மூலம் கண்காணித்து குற்றத் தடுப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.

    கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை. கடலோர பாதுகாப்பு குழுமம். மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் யாரும் மூழ்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்கள்.

    மேலும், அவசர மருத்துவ உதவிக்கு. முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்குப் பதிவு செய்ய நேரிட்டால் பாஸ்போர்ட், வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளின் விண்ணப்பங்கள் போலீசாரால் சரிபார்ப்பு செய்யும்போது பாதிப்பு ஏற்படும் என்பதால் இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • வெளியூரில் இருந்த வந்த ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே தலைவர்கள் பலரும் விஜயகாந்தை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் வெளியூரில் இருந்த வந்த ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் இன்று விஜயாந்த் மறைந்து ஒர் ஆண்டு ஆகியுள்ளது என தெரிவித்தனர். உடனே ரஜினிகாந்த் யாரும் எதிர்பார்க்காத வகையில் வாழ்த்துகள் தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள், மீண்டும் அதனை தெளிவாக கூற, ஒ அப்படியா என கூறினார், அதனை தொடர்ந்து கூலி படம் நல்லா போகுது எனவும் படம் 70 சதவீதம் முடிவடைந்ததாகவும் கூறினார்.

    இதற்கு முன்பு திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து கேட்டதுக்கு அப்படியா, எப்போ நடந்துச்சு oh my god Extremely Sorry என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்து, இரண்டு முறை பிரதமராக இருந்தவரை நிகம்போத் காட் பகுதிக்கு அனுப்பியது, ஆணவம், பாரபட்சம்.
    • சிறந்த தலைவர்களை அவமதிப்பதன் கறை ஒருபோதும் வரலாற்றிலிருந்து மறையாது!

    மறைந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மன்மோகன் சிங் இறுதிச் சடங்கை அவரது நினைவு இடத்திற்கு ஏற்ற இடத்தில் நடத்த அனுமதி மறுத்தது மன்மோகன் சிங்கின் உயர் மாண்மையும், சீக்கிய சமூகத்தையும் அவமதித்ததாகும். குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்து, இரண்டு முறை பிரதமராக இருந்தவரை நிகம்போத் காட் பகுதிக்கு அனுப்பியது, ஆணவம், பாரபட்சம் மற்றும் அவரது மகத்தான பங்களிப்பை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க திட்டமிட்ட முயற்சி.

    மன்மோகன் சிங் தலைமையின் கீழ் லடசக்கணக்கானோர் வறுமையில் இருந்து மீண்டனர். டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமை பொருளாதாரத்தை மாற்றியது. சிறந்த தலைவர்களை அவமதிப்பதன் கறை ஒருபோதும் வரலாற்றிலிருந்து மறையாது!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும்.

    2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்.

    பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும் இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
    • அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுமார் ஒன்றரை மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்த வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். அப்போது, பல்கலைக்கழக பாதுகாப்பு தொடர்பாகவும் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுமார் ஒன்றரை மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 25 மாணவர்களின் கருத்துகளை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கேட்டறிந்துள்ளார்.

    பல்கலை மாணவர்களின் பாதுகாப்பு, காவலர்களின் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு நடத்தினார்.

    உயர்கல்வித்துறை செயலாளர் கோபால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம் உள்ளிட்டோர் ஆளுநருடன் இருந்தனர்.

    இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளரை மாற்றுமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பதிவாளரை மாற்றுவது தொடர்பான முடிவு மாநில அரசுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.
    • விஜயகாந்தின் நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர்.

    தே.மு.தி.க. முன்னாள் தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர்.

    விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் உள்பட சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் விஜயகாந்தின் மனிதநேயத்தை நினைவு கூறுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளில், அவரது மனிதநேயத்தை நினைவு கூறுவோம்.

    தேமுதிகவின் நிறுவனர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

    விஜயகாந்த் என்றாலே அரசியலை கடந்து நமது நினைவுக்கு வருவது அவரது மனித நேயம்தான் அதை எந்நாளும் நினைவு கூர்வோம் என பதிவிட்டிருந்தார்.

    • பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.
    • முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததற்கு, அன்புமணி எதிர்ப்பு.

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.வின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டம் தொடங்கியவுடன், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி குறித்து பேசினார்.

    இதையடுத்து, புதுச்சேரி பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.

    அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததற்கு, அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

    பா.ம.க. கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆனவருக்கு பதவி அளிப்பதா என மேடையிலேயே அன்புமணி கேள்வி கேட்டார்.

    நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என்றும் நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தமாக கூறினார்.

    எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் கூறியதும், மேடையிலேயே சரி சரி என அன்புமணி கூறினார்.

    அன்புமணிக்கு முகுந்தன் துணையாக இருப்பார் என ராமதாஸ் கூற, தேவையில்லை என அன்புமணி பதில் கூறினார்.

    சரி சரி என கூறிய அன்புமணியிடம் வெளியேறுவது என்றால் வெளியேறு என்று ராமதாஸ் கூறினார்.

    பனையூரில் எனக்கு அலுவலகம் உள்ளது. அங்கு வந்து தொடர்பு கொள்ளுங்கள் என மைக்கை எறிந்து விட்டு அன்புமணி சென்றார்.

    இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் நேரடி மோதலால் யாரை ஆதரிப்பது என தெரியாமல் பாமக நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணியை சமாதானம் செய்ய குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழுவிற்கு பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமைத் தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அன்புமணியை வரவழைத்து நாளை பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.
    • முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததற்கு, அன்புமணி எதிர்ப்பு.

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.வின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டம் தொடங்கியவுடன், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி குறித்து பேசினார்.

    இதையடுத்து, புதுச்சேரி பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.

    அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததற்கு, அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

    பா.ம.க. கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆனவருக்கு பதவி அளிப்பதா என மேடையிலேயே அன்புமணி கேள்வி கேட்டார்.

    நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என்றும் நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தமாக கூறினார்.

    எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் கூறியதும், மேடையிலேயே சரி சரி என அன்புமணி கூறினார்.

    அன்புமணிக்கு முகுந்தன் துணையாக இருப்பார் என ராமதாஸ் கூற, தேவையில்லை என அன்புமணி பதில் கூறினார்.

    சரி சரி என கூறிய அன்புமணியிடம் வெளியேறுவது என்றால் வெளியேறு என்று ராமதாஸ் கூறினார்.

    பனையூரில் எனக்கு அலுவலகம் உள்ளது. அங்கு வந்து தொடர்பு கொள்ளுங்கள் என மைக்கை எறிந்து விட்டு அன்புமணி சென்றார்.

    இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 2022ம் ஆண்டு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த பதிவில், " '' நம்மள படைச்சது சாமின்னு சொல்றாங்க. ஆனா, நம்மள படைச்ச உண்மையான சாமி அப்பனும், ஆத்தாளுந்தான். அவங்க போனதுக்கப்புறம் போயிட்டாங்களேன்னு அழுகுறதை விட வாழ்ற காலத்துல அவங்கள பொக்கிஷமா பாத்துக்கிறது ஒவ்வொரு புள்ளையோட கடமை"

    'முத்துக்கு முத்தாக' என்ற திரைப்படத்தை நான் இன்று பார்த்தேன். அந்த படத்தின் இறுதிக்காட்சியில் வரும் வசனம் தான் இது. அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம் இது" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி-சேலைகள் வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
    • இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு முகாம்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

    சென்னை:

    தமிழர்களின் அடையாளமாக அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பெருமைமிகு பண்டிகை பொங்கல் திருநாளாகும்.

    இந்த நன்னாள் அனைத்து தொழில்களுக்கும், ஏன் மனித குலத்திற்கே அடித் தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாய பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பெருமைமிகு விழா ஆகும்.

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ரொக்க பணம் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது.

    அதே போல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்க அரசின் சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தெரிகிறது.

    மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என தெரிகிறது.

    பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி-சேலைகள் வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு முகாம்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என தெரிகிறது.

    • மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
    • மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக உள் விசாரணை குழுவிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்த வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். அப்போது, பல்கலைக்கழக பாதுகாப்பு தொடர்பாகவும் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.

    மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக உள் விசாரணை குழுவிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 25 மாணவர்களின் கருத்துகளை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கேட்டறிந்துள்ளார்.

    பல்கலை மாணவர்களின் பாதுகாப்பு, காவலர்களின் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு நடத்தினார்.

    உயர்கல்வித்துறை செயலாளர் கோபால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம் உள்ளிட்டோர் ஆளுநருடன் இருந்தனர்.

    • வீடியோ காட்சிகளை அவர் வாட்ஸ்அப் மூலம் வேறு யாருக்காவது பகிர்ந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    • மாணவிகள் இருந்தால் அவர்களிடம் பேசி புகார் பெறுவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கைதான ஞானசேகரகனின் செல்போனை ஆய்வு செய்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "ஞானசேகரன் காமகொடூரனாக இருப்பது தெரிந்தது. நிறைய பாலியல் குற்றங்களை அவன் செய்து இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது" என்றனர்.

    போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறுகையில், "ஞானசேகரன் மாணவிகள் மட்டுமின்றி தனது மிரட்டலுக்கு பணியும் பெண்கள் அனைவரையுமே செல்போனில் படமாக்கி இருக்கிறார். அந்த செல்போன் காட்சிகளை அவர் கடந்த 6 மாதமாக சேமித்து வைத்து இருப்பதை கண்டறிந்துள்ளோம்.

    அந்த வீடியோ காட்சிகளை அவர் வாட்ஸ்அப் மூலம் வேறு யாருக்காவது பகிர்ந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுபற்றியும் தீவிர ஆய்வு செய்து வருகிறோம். செல்போன் வீடியோ காட்சிகளுக்கு விடை கிடைத்தால்தான் இதில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும்" என்றனர்.

    இதன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் வளாகம் மட்டுமின்றி மேலும் பல இடங்களில் குற்றவாளி ஞானசேகரன் பல குற்றங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு அவரது செல்போன் வீடியோ காட்சிகளை போலீசார் ஆதாரமாக சொல்கிறார்கள்.

    ஞானசேகரனின் செல்போனில் இருக்கும் வீடியோக்களில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் யாராவது இருக்கிறார்களா? என்று ஆய்வு நடந்து வருகிறது. அப்படி மாணவிகள் இருந்தால் அவர்களிடம் பேசி புகார் பெறுவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ஒருவேளை மேலும் சில மாணவிகள் ஞானசேகரனால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர் மீதான வழக்குகள் மேலும் இறுகும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த சர்ச்சை மேலும் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×