search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Registrar"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது.
    • பதிவாளர் தங்கவேல் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்திட துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக தணிக்கை குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கணிப்பொறி, உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்தது நிரூபணமானது. தேவைக்கு அதிகமாக கணினிகளை கொள்முதல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் பதிவாளர் தங்கவேல் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்திட துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • இறந்து போன சுப்பிரமணியன் பெயரில் அதே ஊரில் உள்ள 13 ஆர் நிலம் இருந்தது.
    • உயிரோடு இருப்பது போல போலி ஆதாரம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்து இருக்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 37). இவரது தந்தை சுப்பிரமணியன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி இறந்து விட்டார். இறந்து போன சுப்பிரமணியன் பெயரில் அதே ஊரில் உள்ள 13 ஆர் நிலம் இருந்தது. இதனை சங்கராபுரம் தாலுக்கா அலியாபாத் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி மலர் மற்றும் வக்கீல் கார்த்திகேயன் ஆகியோர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுப்பிரமணியன் உயிரோடு இருப்பது போல போலி ஆதாரம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்து இருக்கின்றனர். இதனை தெரிந்து கொண்ட ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அலியாபாத் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி மலர் மற்றும் வக்கீல் கார்த்திகேயன் ஆகிய இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மானாமதுரையில் சார்பதிவாளர் நியமிக்கப்படாததால் பத்திரப்பதிவுகள் செய்ய தாமதமாகிறது.
    • பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நாள்தோறும் சுமார் 40 ஆவணங்கள் வரை பதிவுகள் நடைபெற்றன.

    இங்கு சார் பதிவாளராக பணி செய்த ஆதிலெட்சுமி கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்று சென்று விட்டார். இதன்பிறகு இதுவரை மானாமதுரை சார்பதிவாளர் பணியிடத்துக்கு நிரந்தரப்பதிவாளர் நியமிக்கப்படாமல் பணியிடம் காலியாக உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் பணிபுரியும் சார்பதிவாளர்கள், பொறுப்பு அதிகாரியாக மானாமதுரைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் சொத்து ஆவ ணங்கள் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து மானா மதுரைச் சேர்ந்த பத்திர எழுத்தர்கள், பொதுமக்கள் கூறுகையில், மானா மதுரையில் சார் பதிவாளர் பணியிடம் கடந்த ஜூன் மாதம் முதல் காலியாக உள்ளது. இதனால் பதிவுக்கு தாமதம் ஏற்பட்டு, பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.

    இங்கு நாள்தோறும் 40 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 20 ஆவணங்கள் கூடப்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட பதிவுத் துறை நிர்வாகம் மானாம்துரைக்கு நிரந்த சார்பதிவாளரை நியமித்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றனர்.

    • சிந்துப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • 1914 ஆம் ஆண்டு முதல் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு முதல் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் அருகில் உள்ள கிராமங்களான தும்மக்குண்டு, காங்கேயநத்தம், நக்கலகோட்டை, பன்னீர்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவலகங்களை தாலுகா வாரியாக பிரிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தாலுகா வாரியாக பத்திர பதிவு அலுவலகம் பிரிக்கப்படும் சூழ்நிலையில் சிந்து பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வந்த திருமங்கலம் தாலுகா உட்பட்ட காங்கேயநத்தம், நக்கலக்கோட்டை, பன்னீர் குண்டு, பொக்கம்பட்டி, தங்களாசேரி, சென்னம்பட்டி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துக்கள் திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் இதுவரையில் செயல்பட்டு உள்ள சிந்துபட்டி சார்பதிவு அலுவலகம் செல்லம்பட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிந்து பட்டி, உடையாம்பட்டி, கட்ட தேவன்பட்டி, தும்மக்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதி மக்கள் பத்திர பதிவு செய்வதற்கு செல்லம்பட்டி செல்ல வேண்டும்.

    இந்த நடைமுறைக்கு இப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செல்லம்பட்டிக்கு இடமாற்றம் செய்வதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படும். எனவே சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படாததால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிந்து பட்டி கிராமத்தில் உள்ள கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்த சார் பதிவாளர் அலுவலகம் இன்று வரை நல்ல நிலையில் இயங்கி வருவதாகவும் இங்கிருந்து செல்லம்பட்டி செல்ல வேண்டுமானால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும் எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தை இடம் மாற்றம் செய்யாமல் சிந்துபட்டியிலேயே தொடர்ந்து இயங்கி வர நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • நுழைவு சீட்டு கிடைக்கப்பெறாத மாண வர்கள் தேர்வாணையர் அலுவலகத்தை தேர்வு நாட்களில் அணுகி தேர்வு எழுதலாம்.
    • சிறப்பு துணைத்தேர்வுக்கு கால அட்டவணை தேர்விற்கு 5 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ( பொறுப்பு) அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் 2019-20-ம் கல்வி ஆண்டில் இளங்கலை, இளம் வணிகவியல் மற்றும் இளம் அறிவியல் பாடங்களின் அனைத்து பிரிவுகளிலும் சேர்ந்து பயின்ற மாணவர்கள் ஏப்ரல் 2022-ல் நடைபெற்ற 1 முதல் 5 -ம் பருவ தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற்று 6 -ம் பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மற்றும் 1 முதல் 5 பருவத்தேர்வு வரையிலான பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணக்கர்களுக்கு (எழுத்து தேர்வு அல்லது செய்முறைத்தேர்வு ) சிறப்புத் துணைத்தேர்வுகள் அடுத்தமாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு

    மேலும் இறுதி பருவமாகிய ( இளநிலை எனில் 6-ம் பருவம், முதுநிலை எனில் 4-ம் பருவம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் எனில் 2-ம் பருவம்) ஏப்ரல் 2022 தேர்விற்கு தகுதியுடைய வருகைப்பதிவு இருந்தும், தேர்வுக்கட்டணம் செலுத்த பல்கலைக்கழகம் மூன்று கடைசி வாய்ப்புகள் வழங்கிய போதும், சில மாணக்கர்கள் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை. எனவே அந்த மாணவர்களின் நலன் கருதி உரிய கட்டணம் செலுத்தி சிறப்பு தேர்வு எழுத பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, அவ்வாறு உரிய கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த சிறப்புதுணைத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் 26-ந் தேதி ( இன்று) முதல் வருகிற 1-ந் தேதிக்குள் www.msuniv.ac.in என்ற பல்கலை கழக இணையதளத்தில் தேர்வு கட்டணமாகிய ரூ. 1,000 செலுத்தி

    மேற்கூறிய சிறப்பு துணைத்தேர்வுகள் அல்லது சிறப்பு தேர்வுகள் பல்கலை கழக வளாகத்தில் வைத்து மட்டுமே நடத்தப்படும். தேர்வு அனுமதிச்சீட்டை மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும், இத்தேர்வுகளின் கால அட்டவணை தேர்விற்கு 5 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும்.

    எனவே,இந்த தேர்வு எழுத தகுதியுடைய மாணவர்கள் அந்தந்த தேதிகளுக்கான கால அட்டவணையை கடைபிடித்து தேர்வு எழுத கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நுழைவு சீட்டு கிடைக்கப்பெறாத மாண வர்கள் தேர்வாணையர் அலுவலகத்தை தேர்வு நாட்களில் அணுகி தேர்வு எழுதலாம்.

    இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

    • ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும்.
    • கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பதிவாளர் அலுவலகத்தின் தலையீடுகள் அதிகமாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையின் மீது உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கருணை ஓய்வூதியம் 10 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து சம்பளம் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பதிவாளர் அலுவலகத்தின் தலையீடுகள் அதிகமாகி உள்ளது. அவர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக தொந்தரவுகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன . இது குறித்து பதிவாளர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு தஞ்சை மாவட்ட வங்கி சங்க ஊழியர் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தர்ணா போராட்டத்தினை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தொடக்கி வைத்தார். போராட்டத்தில் கோரிக்கைகள் குறித்து தீர்வு காணாவிட்டால் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநிலந்தழழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டது.

    இதில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன செயலர் கோவிந்தன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர்சுரேஷ், பொருளாளர் ராமச்சந்திரன், தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற ஊழியர் சங்க தலைவர் சிவமணி, சங்க செயலாளர் கந்தவேல், ஓய்வு பெற்ற நகர வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பாண்டியன், மாவட்ட கூட்டுறவு நகர வங்கி ஊழியர் சங்க பொருளாள ர்நெப்போலியன், மாவட்ட தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் மனோகரன், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் வீரசேகர் , மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் பொதுச்செயலாளர் குமார் , ஓய்வு பெற்ற அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மாநில துணை தலைவர் துரை. மதிவாணன், தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டம் மாவட்ட கூட்டுறவு நகர வங்கி ஊழியர் சங்க செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.ஐ.டி.யூ.சி.மாவட்ட செயலாளர் தில்லைவனம் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

    ×