திருக்கோவிலூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து இறந்து போனவரின் நிலம் அபகரிப்பு: வக்கீல் மீது வழக்கு

இறந்து போன சுப்பிரமணியன் பெயரில் அதே ஊரில் உள்ள 13 ஆர் நிலம் இருந்தது.உயிரோடு இருப்பது போல போலி ஆதாரம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்து இருக்கின்றனர்.
திருக்கோவிலூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து இறந்து போனவரின் நிலம் அபகரிப்பு: வக்கீல் மீது வழக்கு
Published on

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 37). இவரது தந்தை சுப்பிரமணியன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி இறந்து விட்டார். இறந்து போன சுப்பிரமணியன் பெயரில் அதே ஊரில் உள்ள 13 ஆர் நிலம் இருந்தது. இதனை சங்கராபுரம் தாலுக்கா அலியாபாத் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி மலர் மற்றும் வக்கீல் கார்த்திகேயன் ஆகியோர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுப்பிரமணியன் உயிரோடு இருப்பது போல போலி ஆதாரம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்து இருக்கின்றனர். இதனை தெரிந்து கொண்ட ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அலியாபாத் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி மலர் மற்றும் வக்கீல் கார்த்திகேயன் ஆகிய இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com