search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delay in Deed Entries"

    • மானாமதுரையில் சார்பதிவாளர் நியமிக்கப்படாததால் பத்திரப்பதிவுகள் செய்ய தாமதமாகிறது.
    • பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நாள்தோறும் சுமார் 40 ஆவணங்கள் வரை பதிவுகள் நடைபெற்றன.

    இங்கு சார் பதிவாளராக பணி செய்த ஆதிலெட்சுமி கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்று சென்று விட்டார். இதன்பிறகு இதுவரை மானாமதுரை சார்பதிவாளர் பணியிடத்துக்கு நிரந்தரப்பதிவாளர் நியமிக்கப்படாமல் பணியிடம் காலியாக உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் பணிபுரியும் சார்பதிவாளர்கள், பொறுப்பு அதிகாரியாக மானாமதுரைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் சொத்து ஆவ ணங்கள் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து மானா மதுரைச் சேர்ந்த பத்திர எழுத்தர்கள், பொதுமக்கள் கூறுகையில், மானா மதுரையில் சார் பதிவாளர் பணியிடம் கடந்த ஜூன் மாதம் முதல் காலியாக உள்ளது. இதனால் பதிவுக்கு தாமதம் ஏற்பட்டு, பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.

    இங்கு நாள்தோறும் 40 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 20 ஆவணங்கள் கூடப்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட பதிவுத் துறை நிர்வாகம் மானாம்துரைக்கு நிரந்த சார்பதிவாளரை நியமித்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றனர்.

    ×