search icon
என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் ஆடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • குஜராத் டைட்டன்ஸ் தான் ஆடிய 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மழை காரணமாக டாஸ் போட தாமதமானது. இரவு 7.25 மணிக்கு டாஸ் போடப்பட்டடது.

    டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது.

    • ஐபிஎல் புள்ளி பட்டியலில் கொல்கத்தா 2ம் இடத்தில் உள்ளது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 183 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 189 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது இடத்திலும் உள்ளன. பெங்களூரு அணி 4 தோல்வியுடன் 8வது இடத்தில் உள்ளது.

    நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஆடிய 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிக்கணக்கை தொடங்காமல் கடைசி இடத்தில் உள்ளது.

    • ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்றார்.
    • எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி, கட்சியில் சேர்க்க அனைத்து யுத்திகளையும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை ஆகியவற்றை மத்திய அரசு ஊக்கப்படுத்தியது.

    ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. அரசியல் சாசனத்தை மாற்ற சதி நடக்கிறது. நாட்டையும், ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி அழித்து வருகிறார்.

    எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி, அவர்களை கட்சியில் சேர்க்க அனைத்து யுத்திகளையும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது.

    அனைத்து இடங்களிலும் அநீதி என்ற இருள் நிலவுகிறது. இதற்கு எதிராக நாம் அனைவரும் போராட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10 வருடங்களில் நாங்கள் செய்தது எல்லாம் டிரைலர்தான்.
    • மோடி முத்தலாக் சட்டம் மூலம் இஸ்லாமிய சகோதரிகளை மட்டும் பாதுகாக்கவில்லை.

    பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏமாற்றம் மற்றும் விரக்தி என்னை (மோடி) நெருங்க முடியாது. இன்று ஒட்டுமொத்த நாடும் இந்தியாவை முன்னனேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பணியாற்றி கொண்டிருக்கிறது. இதில் ராஜஸ்தான் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

    மற்ற கட்சிகளை போன்று பா.ஜனதா வெறும் கோஷ்னா பத்ரா செய்யவில்லை. நாங்கள் சங்கல்ப் பத்ரா கொண்டு வருகிறோம். 2019-ல் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்.

    10 வருடங்களில் நாங்கள் செய்தது எல்லாம் டிரைலர்தான். பசியை தூண்டுவதுபோல், முக்கியமானது இன்னும் வெளியாகவில்லை. முத்தலாக் சட்டம் மூலம் இஸ்லாமிய சகோதரிகளை மட்டும் பாதுகாக்கவில்லை. மொத்த இஸ்லாமிய குடும்பங்களையும் பாதுகாத்துள்ளேன்.

    இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

    • ராஜஸ்தானின் கோடா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிடுகிறார்.
    • கோடா நகரில் ஓம் பிர்லா தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், கோடா நகரில் ஓம் பிர்லா தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து, ஓம் பிர்லா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் மூன்றாவது முறை ஆட்சிக்கு மக்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர் என தெரிவித்தார்.

    • ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்புடி பகுதியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
    • அப்போது அவர் பேசுகையில், இந்தியா கூட்டணி நாட்டிற்காக போட்டியிடவில்லை என்றார்.

    ஜெய்ப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் சென்றார். அங்கு கோட்புடி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டின் அரசியல் இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பா.ஜ.க. முதலில் தேசம் என்று இருக்கிறது, மறுபுறம் நாட்டைக் கொள்ளையடிக்க வழிகளைக் கண்டுபிடிக்கும் காங்கிரசும் இருக்கிறது.

    ஒட்டுமொத்த நாட்டையும் ஒரு குடும்பமாக பா.ஜ.க. கருதுகிறது. தேசத்தைவிட தங்கள் குடும்பத்தைக் காங்கிரஸ் பெரிதாக கருதுகிறது.

    காங்கிரஸ் வெளிநாட்டிற்குச் செல்லும்போது நாட்டை துஷ்பிரயோகம் செய்துவரும் நிலையில், பா.ஜ.க. நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளது.

    ஆத்மநிர்பர் பாரத் கனவை நனவாக்கவே இந்த தேர்தல். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி நாட்டிற்காக போட்டியிடவில்லை, தங்கள் சுயநலத்துக்காக போட்டியிடுகிறது. ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என்கிறார்கள்.

    தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேசாமல் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாடு தீப்பற்றி எரியும் என மிரட்டும் முதல் தேர்தல் இது என தெரிவித்தார்.

    • வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார்
    • இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும் - பாஜக எம்.பி ஆனந்த குமார்

    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார்.

    அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என ராஜஸ்தான் மாநிலம் நாகூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோதி மிர்தா மக்களிடையே பேசுகையில், "அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும். அதற்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பலம் வேண்டும். அதற்கு பெரியளவில் பெரும்பான்மை பெற்று இம்முறை நாம் வெற்றி பெற வேண்டும்" என கூறியுள்ளார்.

    இதற்கு முன்னதாக இதே போல அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கர்நாடகா பாஜக எம்.பி அனந்த் குமார் ஹெக்டே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மார்ச் 9-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தின் சித்தாபுராவில் உள்ள ஹலகேரி என்ற கிராமத்தில், முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க எம்.பியுமான அனந்த் குமார் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

    அப்போது, "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும். இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார். தற்போது மக்களவையில் 2/3 பெரும்பான்மையாக நாம்தான் இருக்கிறோம். ஆனால், மாநிலங்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. மாநில அரசுகளிலும் நமக்குத் தேவையான பெரும்பான்மை இல்லை.

    எனவே, அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையைப் பெறுவது அவசியம். இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும். அதற்கு, இந்த பெரும்பான்மை போதாது." எனப் பேசினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது.

    இதனையடுத்து 6 முறை எம்.பி ஆக இருந்த ஆனந்த குமாருக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பெரும்பான்மை பெற பாஜக விரும்புவதன் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியதும் ஆனந்த் ஹெக்டேவை வேட்பாளர் பட்டியலிலிருந்து பாஜக நீக்கியது. இப்போது இன்னொரு பாஜக வேட்பாளர், அரசியல் சாசனத்தை மாற்றுவதே பாஜகவின் நோக்கமென வெளிப்படையாக பேசியிருக்கிறார். உண்மையை எத்தனை நாள் பாஜக மறைக்க முயலும்?" என தெரிவித்துள்ளார். 

    • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 3 பிரிவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
    • பெண்களுக்கு மாதம் உதவி தொகை கொடுப்பது பற்றி அறிவிப்புகள் வர உள்ளன.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இந்த தடவை மிகவும் வித்தியாசமான கோலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர். சமீபத்தில் அந்த அறிக்கை காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    வருகிற 6-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட காங்கிரஸ் மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இதற்கான விழா நடக்கிறது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 3 பிரிவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிமொழி அளிக்கப்பட உள்ளது.

    அதுபோல பெண்களுக்கு மாதம் உதவி தொகை கொடுப்பது பற்றி அறிவிப்புகள் வர உள்ளன. இதனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன.

    கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • வாலிபர் கோவிலில் திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • காணிக்கை பெட்டியில் கையை போட்டு அதில் இருந்த பணம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை திருடி கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் இருந்தது.

    ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ஆதர்ஸ் நகரில் ஒரு கோவில் உள்ளது. இந்த கோவிலிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இந்த கோவில் ஊழியர்கள் கதவை திறந்த போது அங்கு காணிக்கை பெட்டியில் இருந்து பணம், நகை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நபர் கோவிலுக்கு வரும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. அந்த நபர் காணிக்கை பெட்டி அருகே சென்று கடவுள் முன்பு கை நீட்டி வழிபட ஆரம்பிக்கிறார். அதன் பிறகு காணிக்கை பெட்டியில் கையை போட்டு அதில் இருந்த பணம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை திருடி கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் இருந்தது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் கோவிலில் கைவரிசை காட்டியது அதே பகுதியை சேர்ந்த கோபேஷ் சர்மா என்பதும், இவர் கோவில்களை குறிவைத்து திருடும் பழக்கம் கொண்டவர் என்பதும் தெரியவந்தது. இரவு நேரங்களில் கோவில் கதவுகளை உடைத்து, கடவுளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து நகை, பணத்தை திருடுவதை வாடிக்கையாக கொண்ட இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே இவர் கோவிலில் திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரெயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.
    • நான்கு பெட்டிகள் தடம் புரண்டதில், உயிர்ப்பலி ஏதும் நிகழவில்லை.

    குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சபர்மதி- ஆக்ரா விரைவு ரெயில் சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை புறப்பட்ட இந்த ரெயில், நள்ளிரவு ஒரு மணி அளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென தடம் புரண்டது. ரெயில் இன்ஜின் உடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன.

    அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் உயிர்ப்பலி ஏதும் நிகழவில்லை. தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என வடமேற்கு ரெயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.

    டெல்லி நோக்கி செல்லும், டெல்லியில் இருந்து வரும் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்து. உத்தர பிரதேசம் நோக்கி செல்லும் பாதை சீரமைப்பு நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளது.

    ரெயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் ஆறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டு ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளது.

    • தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
    • முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜனதாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

    ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியதாவது:-

    அரியானா மாநிலத்தில் தற்போது எம்.பி.யாக இருக்கும் நபர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    ராஜஸ்தானில் கூட மக்களவை எம்.பி.யாக இருந்தவர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ஆகவே, தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எம்.பி.க்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜனதாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

    காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு, எங்களது தலைவர்களின் மீது நம்பிக்கை வைப்பவர்கள் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்களின் செயல்பாடுகள் மற்றும் கட்சி மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். இந்தியா கூட்டணிக்கு நல்ல சூழல் உருவாகி வருகிறது. முக்கியமான போட்டி, குறிப்பாக வட இந்தியாவில் காங்கிரஸ்க்கும் பா.ஜனதாவுக்கும் இடையில்தான்.

    இவ்வாவறு சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

    ×