என் மலர்tooltip icon

    இந்தியா

    SIR பணியின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
    X

    SIR பணியின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

    • பட்டியல் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
    • கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமையால் மன அழுத்தத்தில் இருந்தார்.

    ராஜஸ்தானின் பாரா பகுதியில் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் 42 வயதான அனுஜ் கார்க். அவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக தோல்பூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார்.

    அந்த வகையில் நேற்று இரவு 1 மணியளவில் வீட்டில் வைத்து வாக்காளர் பட்டியல் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமைக்கு அவர் ஆளாகியிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

    இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    தமிழகம், மேற்கு வங்கம், உட்பட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மரணங்கள் தொடர்ந்து வருகின்றன.

    Next Story
    ×