என் மலர்
இந்தியா

ஓடும் காரில் ஐ.டி. மானேஜர் கூட்டு பாலியல் பலாத்காரம்: ராஜஸ்தானில் கொடூரம்
- பிறந்த நாள் விழா பார்ட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது சம்பவம் நடைபெற்றுள்ளது.
- மயக்க பொருள் கொடுத்து உயர் அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் தனியார் ஐ.டி. நிறுவன பெண் மானேஜரை, சக நிறுவன சிஇஓ மற்றும் பெண் அதிகாரியின் கணவர் ஓடும் காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் மானேஜராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை பிறந்த நாள் விழா பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இதே விழாவில் அந்த நிறுவனத்தின் சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவர் மற்றும் அவரது கணவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பார்ட்டி முடிந்து ஒவ்வொருவராக அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். பெண் மானேஜர் மட்டும் தனியாக இருந்துள்ளார். சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவர் ஆகியோர் அந்த பெண்ணை தங்கள் காரில் ஏறச் சொல்லியுள்ளனர். அவரும் தன் நிறுவத்தின் உயர் அதிகாரிகள்தானே, என நினைத்து காரில் ஏறியுள்ளார்.
கார் கொஞ்சம் தூரம் சென்ற பின், ஒரு கடை அருகே நின்றுள்ளது. ஒருவர் காரில் இருந்து இறங்கி சிகரெட் போன்ற ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதை பயன்படுத்துமாறு பெண் மானேஜரிடம் கொடுத்துள்ளனர். அவரும் பயன்படுத்தியுள்ளனர். உடனே மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவரின் கணவர் ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
காலையில் மயக்கம் தெளிந்த பின்னர்தான், தனக்கு நடந்த கொடூரத்தை உணர்ந்துள்ளார் பெண் மானேஜர். உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
போலீசார் புகார் அடிப்படையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் மானேஜரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அறிக்கை கிடைத்த பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.






