என் மலர்
மணிப்பூர்
- நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை போராடி அணைத்துள்ளனர்.
- தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் சோதனை.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள உயர் பாதுகாப்பு செயலக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர் என் பிரேன் சிங்கின் அதிகாரபூர்வ பங்களாவில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு
நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை போராடி அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளிவரவில்லை.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அசாமின் எல்லையில் உள்ள மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில், பள்ளத்தாக்கு ஆதிக்கத்தில் உள்ள மெய்டேய் சமூகத்திற்கும், மலையில் ஆதிக்கம் செலுத்தும் ஹ்மர் பழங்குடியினருக்கும் இடையே புதிய வன்முறை வெடித்த ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மணிப்பூரின் தலைநகர் இம்பால் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தால் மூன்று அதிநவீன வெடிகுண்டாக IED செயலிழக்கச் செய்யப்பட்ட்டுள்ளது.
- வழக்கமாக கண்காணிப்பு ரோந்தின்போது இராணுவ வீரர்கள் மூன்று IEDகள், சாலையோரம், ஒன்றாக வைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர்.
மணிப்பூரின் தலைநகர் இம்பால் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தால் மூன்று அதிநவீன வெடிகுண்டாக IED செயலிழக்கச் செய்யப்பட்ட்டுள்ளது.46 கிமீ இடைவெளியில் உள்ள நோங்டாம் மற்றும் இத்தம் கிராமங்களை இணைக்கும் சாலையில் ஐஇடி வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
வழக்கமாக கண்காணிப்பு ரோந்தின்போது இராணுவ வீரர்கள் மூன்று IEDகள், சாலையோரம், ஒன்றாக வைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர். துரிதமாக செயல்பட்ட ராணுவம், அந்த சாலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் குழு அந்த இடத்திற்கு வந்து IED குண்டுகளை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தது. இதனால் கிராமப் பகுதியில் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குக்கி- மெய்தேய் பழங்குடியினருக்கு இடையே மோதல்கள் வெடித்து ஒரு ஒரு வருடத்திற்கும் மேலாகியும் அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

இதனால் மணிபூர் தலைநகர் இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலையடிவாரங்களுக்கு அருகில், இரு சமூகங்களின் கிராமங்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் சாலையில் வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என்று ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.
- பலத்த காற்றினால் பல பகுதிகளில் குடிசைகளும், கூரைகளும் பறந்தன.
- அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மணிப்பூரின் பல பகுதிகளில் கனமழை, ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால், வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இம்பாலின் மேற்கில் உள்ள காஞ்சிப்பூர் மற்றும் தேரா ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்தன. பலத்த காற்றினால் பல பகுதிகளில் குடிசைகளும், கூரைகளும் பறந்தன.
இந்நிலையில், மணிப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (மே 6) மற்றும் நாளை (மே 7) விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பிரேன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தில் நிலவும் வானிலை காரணமாக 2024 மே 6 மற்றும் மே 7ம் தேதிகள் அன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும். தற்போதைய வானிலையால் ஏற்படும் அபாயங்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,"அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். மாநில அரசு உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது," என்றார்.
- 2 பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் பதற வைக்கும் வீடியோ வெளியானது
- மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது
கடந்தாண்டு மணிப்பூரில் வன்முறையில் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியானது.
இதனையடுத்து மணிப்பூர் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட சிபிஐ விசாரணையில், ஆறு நபர்கள் மற்றும் ஒரு சிறார் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது கூட்டுப் பலாத்காரம், கொலை, குற்றச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில்,
"மணிப்பூரில் வன்முறையின் போது, ஆடைகள் இன்றி இழுத்துச் செல்லப்பட்ட இரு பெண்களும், சாலையில் நின்ற போலீஸ் வாகனத்தில் ஏறி, உதவி கேட்டுள்ளனர். எனினும், வாகனத்தை எடுக்க சாவி இல்லை எனக் கூறியுள்ள போலீசார், கலவரக் கும்பலிடமே இருவரையும் வலுக்கட்டாயமாக விட்டுச் சென்றுள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
- மணிப்பூர் உள்பட 13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
- மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து மறுதேர்தல்.
இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.
இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இதைத்தொடர்ந்து மணிப்பூர் உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங்க, ஒயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் வரும் 30ம் தேதி மறு வாக்கப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவின் போது பல வன்முறை சம்பவங்கள் பதிவாகியதால், ஏப்ரல் 22 ஆம் தேதி உள் மணிப்பூர் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் மறு வாக்குப்பதிவை நடத்தினர்.
தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட வாக்குப்பதிவை மே 7-ம் தேதி நடத்தவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை 2:15 மணி வரை தாக்குதல் நடந்துள்ளது.
- உயிரிழந்த இருவரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிஆர்பிஎப் 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு இன குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறி ஏராளமானோர் உயிரை பறித்தது.
இன்னமும் அந்த கலவரத்தில் இருந்து மணிப்பூர் மாநிலம் விடுபடவில்லை. அடிக்கடி இரு இன மக்களும் மோதலில் ஈடுபடுகிறார்கள்.
இந்த நிலையில் மணிப்பூரில் நேற்று பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதற்காக துணைநிலை ராணுவத்தினர் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பிஸ்னுபூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட துணைநிலை ராணுவத்தினர் மலையடி வார கிராமத்தில் தங்கியிருந்தனர்.
நரைன்சைனா என்ற கிராமத்தில் துணைநிலை ராணுவத்தினர் ஓய்வு எடுத்து வந்தனர். நேற்று இரவு 12.30 மணியளவில் அந்த முகாம் மீது மணிப்பூர் பயங்கரவாத குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியது. மலையில் பதுங்கி இருந்தபடி அவர்கள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தினார்கள்.
இதையடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று அதிகாலை 2.30 மணி வரை இந்த தாக்குதல் நீடித்தது.
இதில் ஏராளமான துணைநிலை ராணுவத்தினர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் துணைநிலை ராணுவத்தின் சப்-இன்ஸ்பெக்டர் சர்கார், தலைமை போலீஸ்காரர் அருப்சைனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
10-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளை பிடிக்க அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
- இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் பாகிடோரா தொகுதியில் 31% வாக்குகள் பதிவாகி உள்ளது.
மேற்கு வங்காளம்:
இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.
இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 11 மணி நிலவரப்படி அசாம் 27.43%, பீகார் 21.68%, சத்தீஸ்கர் - 35.47%, ஜம்மு-காஷ்மீர் - 26.61%, கர்நாடகா - 22.34%, கேரளா - 25.61%, மத்தியபிரதேசம் - 28.51%, மகாராஷ்டிரா - 18.83%, மணிப்பூர் - 33.22%, ராஜஸ்தான் - 26.84%, திரிபுரா - 36.42%, உ.பி.யில் 24.31%, மேற்கு வங்காளம் - 31.25% வாக்குகள் பதிவாகி உள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் பாகிடோரா தொகுதியில் 31% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- காலை முதலே ஜனநாயக கடமையாற்ற வாக்குப்பதிவு மையங்களில் வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்
- ராஜஸ்தான் - 11.77%, திரிபுரா-16.65%, உத்தரபிரதேசம் - 11.67%, மேற்கு வங்காளம் - 15.68% வாக்குகள் பதிவாகி உள்ளது.
மணிப்பூர்:
இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.
இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.
2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை முதலே ஜனநாயக கடமையாற்ற வாக்குப்பதிவு மையங்களில் வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 9 மணி நிலவரப்படி அசாமில் 9.71%, பீகாரில் 9.84%, சத்தீஸ்கரில் 15.42%, ஜம்மு காஷ்மீர் - 10.39%, கர்நாடகா - 9.21%, கேரளா - 11.98%, மத்தியப்பிரதேசம்-13.82%, மகாராஷ்டிரா -7.4%, மணிப்பூர் - 15.49%, ராஜஸ்தான் - 11.77%, திரிபுரா-16.65%, உத்தரபிரதேசம் - 11.67%, மேற்கு வங்காளம் - 15.68% வாக்குகள் பதிவாகி உள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானின் பாகிடோரா தொகுதியில் 13% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- கடந்த 19-ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சில இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது.
- இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 11 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 19-ந்தேதி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
மேலும், ஒரு சில இடங்களில துப்பாக்கிச்சூடு சம்பவமும், மிரட்டல் தொடர்பான சம்பவங்களும் நடைபெற்றன. இதனால் 11 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று இம்பால் கிழக்கு தொகுதிக்கு உடபட்ட மொய்ராங்காம்பு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும் பெண்கள் மற்றும் ஆண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
- மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படும்.
- அங்கு 72 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இம்பால்:
மணிப்பூர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் மணிப்பூரில் 2 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இன்னர் மணிப்பூரில் 68 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. இங்குள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மொய்ரங்காம்பு சாஜேப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்குப்பதிவின்போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கிருந்த வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். வாக்கு இயந்திரங்களும் சேதப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, 47 தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
இந்நிலையில், வாக்கு இயந்திரங்கள் சேதம் மற்றும் துப்பாக்கிச் சூடு எதிரொலியாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் 22-ம் தேதி (நாளை) மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
- வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கின.
இம்பால்:
நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதமும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
கொங்மேன் மண்டலத்தில் உள்ள 5 தொங்ஜு வாக்குச்சாவடியில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் வாக்குச்சாவடியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதால், தேர்தல் அதிகாரி உடனே வாக்குப்பதிவை நிறுத்தினார். கிழக்கு இம்பாலில் 2 வாக்குச்சாவடியும், மேற்கு இம்பாலில் 3 வாக்குச்சாவடியும் என மொத்தம் 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கின. பிற்பகல் 3 மணி அவரை அங்கு 63 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூரில் காலை 7 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 67.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் துப்பாக்கிச்சூடும், மிரட்டல் சம்பவமும் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
60 சட்டமன்ற இடங்களில் 32 இடங்களை கொண்ட இன்னர் மணிப்பூர் என அழைக்கப்படும் இடத்தில் 71.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அவுட்டர் மணிப்பூர் பகுதியான 28 சட்டமன்ற இடங்களில் 15-ல் 61.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாகா மற்றும் குகி மக்கள் வசித்து வரும் சண்டேல் பகுதியில் 85.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
- கிழக்கு இம்பால் மற்றும் மேற்கு இம்பாலில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் அமளியில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய இரண்டு மக்களவை தேர்தலில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது வந்தது.
இந்த நிலையில் கொங்மேன் மண்டலத்தில் உள்ள 5 தொங்ஜு வாக்குச்சாவடியில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் வாக்குச்சாவடியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் வைத்திருந்த பேப்பர்கள் தூக்கி வீசப்பட்டன். நிலைமை மோசம் அடைந்ததை தொடர்ந்து தேர்தல் அதிகாரி, உடனடியாக வாக்குப்பதிவை நிறுத்தினார்.
இதேபோன்று கிழக்கு இம்பாலில் இரண்டு வாக்குச்சாவடிகள், மேற்கு இம்பாலில் 3 வாக்குச்சாவடிகள் என மொத்தம் ஐந்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் 11 மணி நிலவரப்படி 28.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் உள்ளூர் மக்களுக்கும் அடையாளம் தெரியாத சமூக விரோதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.






