என் மலர்
மகாராஷ்டிரா
- பட்டாசு வெடித்ததால் பீதியடைந்த நாய் வேகமாக ஓடுகிறது.
- வாலிபர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வாலிபர் ஒருவர், தெரு நாயின் வாலில் பட்டாசை கட்டி, அதை கொளுத்தி விடுகிறார். பட்டாசு வெடித்ததால் பீதியடைந்த நாய் வேகமாக ஓடுகிறது. இந்த சம்பவத்தில் நாய்க்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வாலிபர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மகாயுதி- மகா விகாஸ் அகாடி இடையே கடும் போட்டி.
- மகாயுதியில் பா.ஜ.க., சிவசேனா, என்.சி.பி. கட்சிகள் உள்ளன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் கட்சி.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. மகாயுதி, மகா விகாஸ் அகாடி ஆகிய இரண்டு கூட்டணிகளிலும் அதிருப்தி தலைவர்கள் எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க இரு கூட்டணி தலைவர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதன்பின் நவம்பர் முதல் வார இறுதியில் இருந்து கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாநில தேர்தலின்போதும் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய உத்தரவாத கார்டு (guarantee card) ரிலீஸ் செய்து வருகிறார். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்கான உத்தரவாத கார்டையும் ரிலீஸ் செய்வார் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ், ராகுல் காந்தியின் உத்தரவாத கார்டு இங்கு செல்லுபடியாகாது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பட்நாவிஸ் கூறியதாவது:-
ராகுல் காந்தியின் உத்தரவாத கார்டு ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், சத்தீஸ்கரில் வெற்றி பெறவும் உதவவில்லை. தெலுங்கானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உத்தரவாத கார்டு ஏன் அமல்படுத்தப்படவில்லை என்பதை ராகுல் காந்தி தெளிவுப்படுத்த வேண்டும். அவருடைய உத்தரவாத கார்டு இங்கேயும் தோல்வியடையும்.
ஏராளமான அதிருப்தி கட்சி தலைவர்கள் எதிர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாங்கள் ஒன்றாக அமர்ந்து அந்த பிரச்சனைகளை பேசி சமூகமாக முடித்துள்ளோம். நவம்பர் 4-ந்தேதி அதிப்தி தலைவர்கள் வேட்புமனுவை திரும்பப் பெறுவதை நீங்கள் பார்க்கலாம்.
நவம்பர் 5-ந்தேதியில் இருந்து முழு வீச்சில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வோம்" என்றார்.
- 2019-ல் சொத்து மதிப்பு 550.62 கோடி ரூபாய் ஆகும்.
- தற்போது 3383.06 ரூபாய் என வேட்புமனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 388 தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. நேற்றோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. சுமார் 8 ஆயிரம் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் தாக்கல் செய்தி பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் பா.ஜ.க. வேட்பாளர் பராக் ஷா மிகப்பெரிய கோடீஸ்வரர் வேட்பாளர் எனத் தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது காட்கோபார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2019-ல் அவரது சொத்து மதிப்பு 550.62 கோடி ரூபாய் என பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருந்தார். தற்போது 575 சதவீதம் உயர்ந்து 3383.06 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. அவரது பிரமாண பத்திரம் மூலம் இது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் போட்டியிடும் மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் இவர்தான். பராக் ஷா என்.டி.டி.வி.-க்கு அளித்த பேட்டியில் "நான் நேர்மையான வேட்பாளர்கள். நான் நேர்மையானவன் இல்லை என என்னுடைய எதிரியால் கூட குற்றம்சாட்ட முடியாது. நிறைய பேர் செல்வங்கள் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் அதை நல்ல விதமாக பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கடவுள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். நாடு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. ஆகவே, நான் சிலவற்றை கொடுக்க வுண்டும் என நம்புகிறேன். நான் ஒரு தலைவர். தொழில் அதிபர். மேலும் சமூக சேவகர். நான் என்னுடைய சேமிப்பில் இருந்து 50 சதவீதத்தை சமூக சேவைக்காக கொடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
- கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து மனுதாக்கல்.
- கட்சியில் உள்ள எதிர்ப்பாளர்களை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொள்வோம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. என்ற போதிலும் மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாடி ஆகிய இரண்டு கூட்டணிகளில் உள்ள கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டியிடுகின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை.
மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதிகளை பங்கீடு செய்வதில் மிகப்பெரிய இழுபறி நீடித்தது. தொகுதி பங்கீடு முடிவடைந்ததாலும், அந்த தொகுதியில் உள்ள கட்சி தலைவர்கள் இந்த தொகுதியை எப்படி கூட்டணிக்கு கட்சிக்கு விட்டுக்கொடுக்கலாம். நாங்கள் இங்கே போட்டியிடுவோம் என எதிர்த்து தெரிவித்த சம்பவங்கள் நடைபெற்றன.
இதெல்லாம் சமாளிக்கப்பட்டு வேட்புமனுதாக்கல் முடிவடைந்துள்ளது. இருந்த போதிலும் பலர் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் மகா விகாஸ் கூட்டணியில் 90 சதவீத இடங்களில் இதுபோன்ற எதிர்ப்பாளர்களை சமாதானம் செய்து வெற்றி பெற்றுள்ளோம் என சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சஞ்ச ராவத் கூறுகையில் "கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுவதாக தெரிவித்த எதிர்ப்பாளர்களை 90 சதவீத இடங்களில் சமாதானம் செய்துவிட்டோம். தேர்தலில் இதுபோன்றவை கூட்டணியில் நடக்கத்தான் செய்யும். எதிர்ப்பாளர்களை சமாதானம் செய்ய நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். நாங்கள் மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறோம். மாற்றம் கொண்டு வர ஒவ்வொருவரும் இணைய வேண்டும்" என்றார்.
வேட்புமனுவை திரும்பப் பெற நவம்பர் 4-ந்தேதி கடைசி நாளாகும்.
- மும்பையில் சல்மான்கானின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார்.
- பாபா சித்திக் கொல்லப்பட்டதையடுத்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது.
பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் அச்சுறுத்தல் உள்ள நிலையில், சமீபத்தில் அவரது வீடு அருகே துப்பாக்கி சூடு நடந்தது.
இதற்கிடையே மும்பையில் சல்மான்கானின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டது.
மும்பை போக்குவரத்து போலீசின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ரூ.5 கோடி கேட்டு விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாக ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் ஷேக் ஹுசைன் ஷேக் மவுசின் (24) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அதேபோல் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தயீப் அன்சாரி (வயது20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் அனுப்பிய தகவலில், நடிகர் சல்மான்கான் ரூ.2 கோடி தராவிட்டால் அவரை கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தார். அந்த மர்ம நபர் மீது மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மிரட்டல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யான சுதாகர் ஷ்ரங்காரே காங்கிரசில் இணைந்தார்.
- கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெறுகிறது.
அங்கு மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாடி ஆகிய இரு கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் இந்த கூட்டணியில் உள்ளன.
மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காஙகிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சுதாகர் ஷ்ரங்காரே இன்று அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.
முன்னாள் அமைச்சர்களான திலிப்ராவ் தேஷ்முக் மற்றும் அமித் தேஷ்முக் ஆகியோர் முன் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
லத்தூர் தொகுதி முன்னாள் எம்.பி.யான இவர் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இ-மெயிலில் மிரட்டல் அனுப்பியது தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கிய பிறகு ஜகதீஷ் உய்கே தலைமறைவாகி விட்டார்.
- கடந்த 2021-ம் ஆண்டு ஜகதீஷ் உய்கே கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சில நாட்களாக உள்நாடு, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. கடந்த 2 வாரங்களில் 400 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த மிரட்டல்கள் இ-மெயில் மற்றும் சமூக வலைதளங்களில் வந்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக மைனர் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் பின்னணியில் மகாராஷ்டிராவை சேர்ந்த வாலிபர் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள கிழக்கு விதர்பா பகுதியை சேர்ந்த ஜகதீஷ் உய்கே (வயது 35) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர் பயங்கரவாதம் குறித்து புத்தகம் எழுதியுள்ளார் என்றும், பிரதமர் அலுவலகம், மத்திய ரெயில்வே அமைச்சர், மகாராஷ்டிரா முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, விமான அலுவலகங்கள், டி.ஜி.பி., ரெயில்வே பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு ஜகதீஷ் உய்கே இ-மெயில்களை அனுப்பியதாகவும் தேசிய பாதுகாப்பு முகமை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து தனக்குள்ள அறிவு குறித்து விவாதிக்க பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதேபோல் ரகசிய பயங்கரவாதக் குறியீடு பற்றிய தகவலை முன்வைக்க வாய்ப்பளிக்காவிட்டால் துணை முதல்-அமைச்சரும் உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்தார்.
இ-மெயிலில் மிரட்டல் அனுப்பியது தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கிய பிறகு ஜகதீஷ் உய்கே தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, கடந்த 2021-ம் ஆண்டு ஜகதீஷ் உய்கே கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜீஷன் சித்திக் அலுவலகத்திற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 20 வயது வாலிபர் கைது.
பாலிவுட் நடிகரான சல்மான் கான் மற்றும் சமீபத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பாபா சித்திக்கின் மகன் ஜீஷான் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடிவந்தனர். இந்த நிலையில் மும்பை போலீசார். நொய்டாவின் செக்டார் 39-ல் இருந்து மிரட்டல் விடுத்த முகமது தையப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை பந்த்ராவில் உள்ள ஜீஷான் சித்திக் அலுவலகத்திற்கு, தாங்கள் கேட்கும் பணம் தரவில்லை என்றால் கொலை செய்யப்படுவாரக்ள் என சல்மான் கானுக்கு மிரட்டல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஸ்டாஃப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் மிரட்டல் விடுத்த நபர் முகமது தையப் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காங்கிரஸ் 103, உத்தவ் தாக்கரே கட்சி 87, சரத்பவார் கட்சி 82 என 272 தொகுதிகளில் போட்டி.
- பா.ஜ.க 150 இடங்களிலும், ஏக் நாத் ஷிண்டே கட்சி 80 இடங்களிலும் போட்டி.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாயுதி- மகா விகாஸ் அகாடி ஆகிய இரண்டு கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளின. அகிலோஷ் யாதவின் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் இந்த கூட்டணியில் உள்ளன.
மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் 85-85-95 என தொகுதிகளை பிரித்துக் கொள்ள முடிவு செய்தன. இருந்தபோதிலும் வெவ்வேறு இடங்களை அறிவித்தன. காங்கிரஸ் 103 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 87 இடங்களுக்கு அறிவித்துள்ளது. சரத்பவார் கடசி 82 இடங்களுக்கு அறிவித்தள்ளது. அதன்படி 272 தொகுதிகளை மூன்று கட்சிகளும் பிரித்துக் கொண்டன. ஆனால் 16 தொகுதிகள் இன்னும் உள்ளன. அந்த தொகுதிகள் யார் யாருக்கென்று இன்னும் முடிவாகவில்லை.
இன்றுதான் வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். இருந்தபோதிலும் இன்னும் தொகுதி பங்கீடு துல்லியமாக தெரியவரவில்லை.
அதேநிலைதான் மகாயுதி கூட்டணியிலும் நிலவுகிறது. பா.ஜ.க. தொடக்கத்தில் 150 இடங்களில் போட்டியிடுவதாக கூறியது. அதன்பிறகு 146 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். மீதமுள்ள நான்கு தொகுதிகளை சிறுசிறு கட்சிகளான யுவா சுவாபிமன் கட்சி, ராஷ்டிரிய சமாஜ் பக்ஷ, அத்வாலா கட்சி, ஜன் சுரஜ்யா சக்தி பக்ஷ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கியதாக தெரிவித்தது.
ஆனால் பா.ஜ.க. கட்சியின் இரண்டு பேர் சிவசேனா சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஷைனா என்.சி. மும்பாதேவி தொகுதியிலும், அமோல் கதால் சங்கம்னர் தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
138 தொகுதிகள் சிவசேனாவுக்கும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே கட்சி ஏற்கனவே 65 வேட்பாளர்களை அறிவித்த நிலையில், ஷைனா என்.சி. உள்பட 15 பேர் கொண்ட வேட்பாளரை பட்டியலை அறிவித்தது. இதனால் மொத்தம் 80 இடங்களுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. சிவசேனா இரண்டு இடங்களை சிறுசிறு கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.
அப்படி பார்க்கும் வகையில் அஜித் பவாருக்கு 58 தொகுதிகள். அவர் இதுவரை 49 இடங்களுக்கு வேட்பாளரை அறிவித்துள்ளார்.
இதனால் இரண்டு கூட்டணிகளிலும் உள்ள கட்சிகளுக்கு மொத்தம் எத்தனை தொகுதிகள் என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
- பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார்.
- பா.ஜ.க.வில் இருந்து விலகியதும், வாய்ப்பு வழங்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாகாயுதி கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணியில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
தற்போது இந்த கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு ஏற்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர்களாக இருந்தவர் ஷைனா என்.சி. இவர் நேற்று திடீரென பா.ஜ.க.-வில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.
கட்சியில் சேர்ந்த உடனே மும்பாதேவி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
மும்பாதேவி தொகுதி மும்பை மக்களவை தொகுதிக்குள் வருகிறது. இந்த தொகுதியில் 2009-ல் இருந்து காங்கிரசை சேர்ந்த அமின் பட்டேல் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
முன்னதாக பா.ஜ.க. ஷைனா என்.சி.-ஐ வொர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரேவை எதிர்த்து களம் இறக்க விரும்பியது. ஆனால் சிவசேனா அந்த தொகுதியில் மிலிந்த் தியோராவை களம் இறக்கியது.
பா.ஜ.க. முன்னாள் மந்திரி ராவ்சாஹேப் தன்வே மகள் சஞ்ஜனா ஜாதவ் கன்னத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டள்ளது. முன்னாள் எம்.எல்.எ. அஷோக் பாட்டீல் பந்தப் மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்ப வழங்கப்பட்டுள்ளது.
- பாரமதி தொகுதி பவார் குடும்பத்தின் குடும்ப தொகுதியாக கருதப்படுகிறது
- நாளை வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் ஆகும்
மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நவமபர் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆளும் மாகாயுதி [பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.
பாஜக, சிவசேனா கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், 38 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த 23ஆம் தேதி வெளியிட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் பாரமதி தொகுதி பவார் குடும்பத்தின் குடும்ப தொகுதியாக கருதப்படுகிறது. இந்த தொகுதியில் அஜித் பவார் போட்டியிடுகிறார்.
அஜித் பவாருக்கு எதிராக பேரனை களம் இறக்கியுள்ளார் சரத் பவார். அஜித் பவாரின் இளைய சகோதரர் ஸ்ரீனிவாஸ். இவரது மகன் யுகேந்திர பவார். தற்போது பெரியப்பாவை எதிர்த்து யுகேந்திர பவார் பேட்டியிடுகிறார்.
இந்நிலையில் நாளை வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால் மகாராஷ்டிர துணை முதல்வரும் , என்சிபி தலைவருமான அஜித் பவார், பாராமதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
- நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவுடைய உள்ளது.
- பஞ்பகாடி தொகுதியில் சிவசேனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார்
மகாராஷ்டிர சட்டமன்றதிற்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 299 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடக்க உள்ள இந்த வாக்குபதிவின் முடிவுகள் நவம்பர் 23 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும், எதிர்க்கட்சி மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவுடைய உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைருமான ஏக்நாத் ஷிண்டே, கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின் போது அவரது குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் உத்தவ் சிவசேனா கட்சி சார்பில் ஆனந்த் திகேவின் தம்பி மகன் கேதார் திகே களமிறக்கப்பட்டுள்ளார்.






