என் மலர்
இந்தியா

26/11 மும்பை தாக்குதலில் உயிரிழந்த தியாகிகள் நினைவிடத்தில் மகாராஷ்டிரா ஆளுநர், முதல்வர் அஞ்சலி
- வெடிகுண்டுகளுடன் புகுந்தது கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர்.
- தாக்குதலின் 16-வது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2008-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 26-ந்தேதியை மும்பை மக்களால் எப்போதும் மறக்க முடியாது. யாருமே எதிர்பாராத நிலையில் திடீரென பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நவீன துப்பாக்கிகளுடன் தென் மும்பையின் முக்கிய இடங்களில் புகுந்து சரமாரியாகச் சுட்டனர்.
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அந்த பயங்கரவாதிகள் மும்பைக்கு அருகில் உள்ள கராச்சி துறைமுகத்திலிருந்து சாட்டிலைட் போன்களுடன் மும்பைக்கு படகுகளில் வந்து சேர்ந்தனர். தெற்கு மும்பையிலுள்ள தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சி.எஸ்.டி ரெயில் நிலையம், காமா மருத்துவமனை, யூதர்களின் வழிபாட்டுத்தலம் போன்ற இடங்களில் தானியங்கித் துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் புகுந்தது கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர்.
பயங்கரவாதிகளின் மூன்று நாள் தாக்குதலில் காவல்துறையில் பலர் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் 166 பேர் உயிரிழந்தனர். மேலும் 238 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், இந்த தாக்குதலின் 16-வது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பை கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில், மகாராஷ்டிரா கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.






