என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
'தேர்தல் ஆணையம் நரேந்திர மோடியின் பங்களா நாய்'.. காங்கிரஸ் எம்.எல்.சி. பேச்சால் சர்ச்சை
- மொத்தம் ள்ள 288 இடங்களில் பாஜக கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது.
- மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது வாக்குச் சீட்டு முறையை வலியுறுத்தினார்
இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களா வெளியே நிற்கும் நாய் என மகாராஷ்டிர காங்கிரஸ் மேலவை உறுப்பினர் [எம்எல்சி] பாய் ஜக்தாப் பேசியுள்ளார். மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தம் ள்ள 288 இடங்களில் பாஜக கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. காங்கிரசின் மகாயுதி கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வென்றது. முன்னதாக 6 மாதங்களுக்கு முன் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை விட காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடித்த நிலையில் 6 மாதங்களுக்குள் எப்படி மக்கள் மாற்றி வாக்களிக்கக்கூடும் என்றும் இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய பாய் ஜக்தாப், "தேர்தல் ஆணையம் ஒரு நாயைப் போல் செயல்படுகிறது, நரேந்திர மோடி ஜியின் பங்களாவுக்கு வெளியே அமர்ந்திருக்கும் நாய் அது. நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் இப்போது நரேந்திர மோடியின் செல்வாக்கின் கீழ் செயல்படும் பொம்மைகளாக மாறியுள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் இவிஎம் மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், " நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது வாக்குச் சீட்டு முறையை வலியுறுத்தினார். ஆனால் இப்போது ஏறுக்குமாறாக பேசுவதாக குறிப்பிட்டார்.
காங்கிரஸ் எம்எல்சி. ஜக்தாப் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.