என் மலர்
கர்நாடகா
- யார் மீதும் பழி போடுவதில் அர்த்தமில்லை.
- பொது இடங்களில் தேவையில்லாமல் அறிக்கை விடக்கூடாது.
பெங்களூரு:
கர்நாடகாவில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் கடந்த தேர்தலில் 27 இடங்களில் காங்கிரஸ் கட்சி தோற்றது. ஆனால் பெங்களூர் புறநகரில் மட்டும் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல் மந்திரியுமான டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷ் வெற்றி பெற்றார்.
பெங்களூர் புறநகர் டி.கே.சிவக்குமார், டி.கே. சுரேஷின் கோட்டையாக இருந்து வந்தது. இந்த தொகுதியில் கடந்த 2012-ல் நடந்த இடைத்தேர்தல், அதைத்தொடர்ந்து நடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் டி.கே.சுரேஷ் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் பெங்களூர் புறநகரில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் 2 லட்சத்து 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், தேவகவுடாவின் மருமகனுமான டாக்டர் மஞ்சுநாத் வெற்றி பெற்றார்.
இந்த தோல்வி டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் டி.கே.சுரேஷை திட்டமிட்டு கட்சியினர் தோல்வியடைய வைத்து விட்டனர் என்று டி.கே.சுரேசின் ஆதரவாளர்கள் பொதுவெளியில் பேச ஆரம்பித்தனர்.
இந்த விவகாரம் கர்நாடக காங்கிரசில் பெரும் பூதாகரமாக வெடித்து உள்ளது. ஏற்கனவே முதல் மந்திரி சித்தராமையாவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பேசி வரும் நிலையில் டி.கே.சுரேஷ் தோல்வியால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபத்திய தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு எச்சரிக்கை மணி. தோல்வி குறித்து மாநிலம் முழுவதும் உள்ள தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கூட்டங்களுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் அந்த எண்ணிக்கையை எட்ட முடியவில்லை. மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும். கட்சி தலைவர்களின் சொந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வாக்குகள் கிடைக்கவில்லை.
தேர்தல் தோல்விக்கு சில எம்.எல்.ஏ.க்கள் மீது அமைச்சர்கள் குற்றம் சாட்டுவது குறித்து கேட்டபோது இதுபற்றி யாரும் என்னிடம் புகார் செய்யவில்லை. யார் மீதும் பழி போடுவதில் அர்த்தமில்லை.
தோல்விக்கான காரணம் குறித்து தொகுதி பொறுப்பில் உள்ள தலைவர்கள், தொண்டர்களிடம் பேசி அதற்கான காரணங்களை ஆராய வேண்டும். அதை விட்டுவிட்டு எம்.எல்.ஏ.க்கள் பொது இடங்களில் தேவையில்லாமல் அறிக்கை விடக்கூடாது. கட்சி தொண்டர்களுடன் அமர்ந்து பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
- 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33) பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் கர்நாடகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவானது. இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தார்.
பின்னர் கடந்த மாதம் 31-ந் தேதி ஜெர்மனியில் இருந்து பெங்களூரு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். அவரை 6-ந்தேதி முதல் 10-ந்தேதி (நேற்று) வரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் நேற்று காலையில் பெங்களூரு பசவனகுடியில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீட்டுக்கும், அவரை போலீசார் அழைத்து சென்றார்கள்.
பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் அழைத்து சென்றபோது வீட்டின் முதல் மாடியில், அவரது தாய் பவானி ரேவண்ணா இருந்தார். ஆனாலும் தாயை சந்திக்கவும், அவருடன் பேசுவதற்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்திய வழக்கில் பவானி ரேவண்ணா முன்ஜாமீன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுடன் போலீஸ் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் நேற்று மதியம் 3 மணியளவில் பிரஜ்வல் ரேவண்ணாவை நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினா்.
இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் இருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்தியதாக, அவரது தந்தையான முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா இதே பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த மாதம் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 6 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
- பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.
இதையடுத்து அவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 6ம் தேதியுடன் அவரது காவல் முடிவடைந்தது.
இதையடுத்து போலீசார் மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மேலும் 5 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதையடுத்து மீண்டும் 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் பெரும்பாலான கேள்விகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே பிரஜ்வல் பிறந்து வளர்ந்த ஹோலே நரசிப்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் நாயுடு தலைமையில் இந்த சோதனை நடந்தது. சுமார் 4 மணி நேரம் அவரது வீட்டில் இந்த சோதனை நடந்தது. அப்போது பிரஜ்வலை பார்த்து அவரது தந்தை ரேவண்ணா கண்ணீர் விட்டு அழுதார். இதைப்பார்த்த பிரஜ்வலும் அழுதார். பின்னர் போலீசார் பிரஜ்வலை அங்கிருந்து மீண்டும் விசாரணை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
பிரஜ்வல் ஜெர்மனியில் பதுங்கி இருந்த போது அவர் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரஜ்வல் தங்க மற்றும் அவருக்கு தேவையான பண உதவிகளை அவரது காதலி செய்து இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது. எனவே அவரை மீண்டும் இன்று மாலை நீதிமன்றதத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து பெங்களூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- காதலிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்.
- காதலி குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதை யடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.
இதையடுத்து அவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 6-ந் தேதியுடன் அவரது காவல் முடிவடைந்தது.
இதையடுத்து போலீசார் மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மேலும் 5 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதையடுத்து மீண்டும் 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் பெரும்பாலான கேள்விகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே பிரஜ்வல் பிறந்து வளர்ந்த ஹோலே நரசிப்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் நேற்று அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் நாயுடு தலைமையில் இந்த சோதனை நடந்தது. சுமார் 4 மணி நேரம் அவரது வீட்டில் இந்த சோதனை நடந்தது. அப்போது பிரஜ்வலை பார்த்து அவரது தந்தை ரேவண்ணா கண்ணீர் விட்டு அழுதார். இதைப்பார்த்த பிரஜ்வலும் அழுதார். பின்னர் போலீசார் பிரஜ்வலை அங்கிருந்து மீண்டும் விசாரணை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
பிரஜ்வல் ஜெர்மனியில் பதுங்கி இருந்த போது அவர் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரஜ்வல் தங்க மற்றும் அவருக்கு தேவையான பண உதவிகளை அவரது காதலி செய்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அவரது காதலிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் பிரஜ்வல் காதலி குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.
இதே போல் பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் நாளையுடன் முடிவடைகிறது. எனவே அவரை மீண்டும் நாளை மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 3-வது முறையாகவும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- திருமணத்திற்கு வந்தவர்களுக்கு வழங்கிய பரிசு பொருட்களும் நூலால் நெய்யப்பட்ட கைப்பையில் கொடுத்தோம்.
- வீடியோ 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பெங்களூருவை சேர்ந்த பெண் டாக்டரான பூர்வி பட் தனது திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், விழா நடைபெறும் இடத்தை பொறுத்தவரை மாம்பழம் மற்றும் தேங்காய் இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மணமக்களின் திருமண மாலைகளில் பிளாஸ்டிக் இணைப்புகள் இல்லாத பூக்கள் மற்றும் பருத்தி நூல்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோவுடன் பூர்வி பட்டின் பதிவில், எனது திருமணம் பூஜ்ய அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் நடைபெற்றுள்ளது. திருமண மேடையை நாங்கள் கரும்பால் வடிவமைத்தோம். இதன்மூலம் திருமணம் முடிந்த பிறகு அதனை கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தோம். இதே போல திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவின் போதும் வாழை இலை மற்றும் எவர்சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் பரிமாறப்பட்டது.
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு வழங்கிய பரிசு பொருட்களும் நூலால் நெய்யப்பட்ட கைப்பையில் கொடுத்தோம். இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் எனது திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. எங்கள் குடும்பங்களின் ஒத்துழைப்பால் தான் எனது கனவு சாத்தியமாகி உள்ளது என கூறி உள்ளார்.
அவரது இந்த வீடியோ 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தார் ராகுல் காந்தி.
- விமான நிலையம் வந்தடைந்த ராகுலை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் மீது பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கர்நாடகா பா.ஜ.க. சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடைசியாக கடந்த 1-ந்தேதி நடைபெற்றது. அன்றைய தினம் முதல்-மந்திரி சித்தராமையா, ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் முதல்-மந்திரி சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேரில் ஆஜரானார்கள். அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வக்கீல், அவர் நேரில் ஆஜராக வாய்தா கேட்டார். இதையடுத்து 7-ந்தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தார் ராகுல் காந்தி. விமான நிலையம் வந்தடைந்த ராகுலை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
இதன்பின்னர், நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்திக்கு முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
- ராகுல் காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் மீது பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பா.ஜ.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
- வழக்கு விசாரணை கடைசியாக கடந்த 1-ந்தேதி நடைபெற்றது.
கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். இது தான் அவர்களின் பிரசாரத்தில் முக்கிய விஷயமாக இடம்பெற்றது. பா.ஜ.க.வின் தோல்விக்கு இந்த குற்றச்சாட்டு முக்கியமான காரணமாக அமைந்தது.
இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் மீது பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பா.ஜ.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை கடைசியாக கடந்த 1-ந்தேதி நடைபெற்றது. அன்றைய தினம் முதல்-மந்திரி சித்தராமையா, ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் முதல்-மந்திரி சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேரில் ஆஜரானார்கள். அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வக்கீல், அவர் நேரில் ஆஜராக வாய்தா கேட்டார். இதையடுத்து 7-ந்தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, பெங்களூரு கோர்ட்டில் இன்று நேரில் ஆஜராக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறபட்டார். பெங்களூர் வந்த ராகுலை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
#WATCH | Karnataka CM Siddaramaiah arrives at Bengaluru airport to receive Congress leader Rahul Gandhi.
— ANI (@ANI) June 7, 2024
Rahul Gandhi will appear before a special court in Bengaluru in response to a summons issued by a court in a defamation case filed by BJP's Karnataka unit. pic.twitter.com/frDakl8Vtf
- நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்தார்.
- சிறப்பு விசாரணைக்குழு போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு பெண்களை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். கர்நாடகா மற்றும் மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்தியா திரும்பி விசாரணையை எதிர்கொள்வேன் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மே 31 அன்று பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு வந்தடைந்தார். பெங்களூரு வந்து இறங்கியதும் சிறப்பு விசாரணைக்குழு போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா அன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 6-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த போலீஸ்க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்தார்.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ரேவண்ணாவின் போலீஸ் காவலை ஜூன் 10 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ராஜினாமா செய்ததாக கடிதம் ஒன்று வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாகி வருகிறது.
- காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
கர்நாடகாவில் பாராளுமன்ற தேர்தலின்போது சிக்கபள்ளப்பூர் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளரும், முன்னாள் மந்திரியுமான டாக்டர் சுதாகர் ஒரு ஓட்டு கூடுதலாக பெற்றால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதீப் ஈஸ்வர் கூறினார்.
இந்த நிலையில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 8 லட்சத்து 22 ஆயிரத்து 619 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரக்ஷா ராமையா 6 லட்சத்து 59 ஆயிரத்து 159 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் சிக்பள்ளாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரதீப் ஈஸ்வர் எப்போது ராஜினாமா செய்வீர்கள் என பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே அவர் ராஜினாமா செய்ததாக கடிதம் ஒன்று வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில் கொடுத்த வாக்குறுதி தவறக்கூடாது என்ற பழமொழியை சிறுவயது முதலே வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வருகிறேன். பாராளுமன்ற தேர்தலில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் டாக்டர் சுதாகர் ஒரு ஓட்டு கூடுதலாக பெற்றால் ராஜினாமா செய்வேன் என சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக கூறினேன்.
எனது தொகுதியில் சுதாகர் கிட்டதட்ட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால் எனது எம்.எல்.ஏ. பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த கடிதம் விவகாரம் காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து எம்.எல்.ஏ.வின் உதவியாளர் கூறுகையில், பிரதீப் ஈஸ்வர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது போலியானவை. அவர் ராஜினாமா செய்யவில்லை. அவரை கிண்டல் செய்வதற்காக இந்த கடிதத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்றார்.
- பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
- கர்நாடகத்தின் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி வெற்றி பெற்றார்.
பெங்களூரு:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார். இவர் 8,51,881 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா567261 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2,84,620 ஆகும்.
- குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷா முன்னிலை.
- டெல்லியில் 7 இடங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி 264 இடங்களிலும், இந்தியா கூட்டணி 198 இடங்களிலும், மற்றவை 20 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தபிரஜ்வல் ரேவண்ணா தற்போது கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷா முன்னிலை.
* இமாச்சலப் பிரதேசம் ஹமீர்பூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் அனுராக் தாகூர் முன்னிலையில் உள்ளார்.
* இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் முன்னிலை வகிக்கிறார்.
* டெல்லியில் 7 இடங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.
* கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி பின்னடைவை சந்தித்துள்ளார்.
- பிசாசு பிடித்துள்ளதால், உடலுறவு வைத்தால் சரியாகிவிடம் என சகோதரரை வற்புறுத்தியுள்ளார்.
- பாலியல் துன்புறுத்தலை படம் பிடித்து, அவரும் கற்பழித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மதகுருவாக இருந்து வந்தார்.
இந்த மதகுருவிடம் சிறுமி ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக குர்ரான் படித்து வந்தார். சம்பவத்தன்று, அந்த சிறுமியின் வீட்டிற்கு மதகுரு வந்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு பிசாசு பிடித்துள்ளது. அதை தான் விரட்டியடிக்கிறேன் எனச் சொல்லியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சகோதரரிடம், உன் தங்கைக்கு பிசாசு பிடித்துள்ளது. இதனால் அவளுடன் உடலுறவு வைத்தால் சரியாகிவிடும் எனக் கூறினார். இது தொடர்பாக சகோதரரை வற்புறுத்தி, உடலுறவுக்கு தூண்டியுள்ளார். மேலும், தங்கைக்கு சகோதரர் கொடுத்த பாலியல் துன்புறுத்தலை படம் எடுத்துள்ளார். அந்த படத்தை காட்டி அந்த சிறுமியை அவரும் கற்பழித்துள்ளார்.
வாரத்திற்கு ஒருமுறை என இந்த கொடுமை ஆறு முதல் ஏழு மாதங்கள் நடந்துள்ளது. சிறுமி வயிறு வலிப்பதாக அவருடைய அம்மாவிடம் தெரிவித்தார். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது தான் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தனது மகளுக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து பெண்கள் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளுக்க எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மேலும், மதகுரு மற்றும் சகோதரர் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.






