என் மலர்tooltip icon

    இந்தியா

    சகோதரியுடன் உடலுறவுக்கு வற்புறுத்திய மதகுரு: படம் பிடித்து அவரும் கற்பழித்த கொடூரம்
    X

    சகோதரியுடன் உடலுறவுக்கு வற்புறுத்திய மதகுரு: படம் பிடித்து அவரும் கற்பழித்த கொடூரம்

    • பிசாசு பிடித்துள்ளதால், உடலுறவு வைத்தால் சரியாகிவிடம் என சகோதரரை வற்புறுத்தியுள்ளார்.
    • பாலியல் துன்புறுத்தலை படம் பிடித்து, அவரும் கற்பழித்துள்ளார்.

    கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மதகுருவாக இருந்து வந்தார்.

    இந்த மதகுருவிடம் சிறுமி ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக குர்ரான் படித்து வந்தார். சம்பவத்தன்று, அந்த சிறுமியின் வீட்டிற்கு மதகுரு வந்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு பிசாசு பிடித்துள்ளது. அதை தான் விரட்டியடிக்கிறேன் எனச் சொல்லியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் சகோதரரிடம், உன் தங்கைக்கு பிசாசு பிடித்துள்ளது. இதனால் அவளுடன் உடலுறவு வைத்தால் சரியாகிவிடும் எனக் கூறினார். இது தொடர்பாக சகோதரரை வற்புறுத்தி, உடலுறவுக்கு தூண்டியுள்ளார். மேலும், தங்கைக்கு சகோதரர் கொடுத்த பாலியல் துன்புறுத்தலை படம் எடுத்துள்ளார். அந்த படத்தை காட்டி அந்த சிறுமியை அவரும் கற்பழித்துள்ளார்.

    வாரத்திற்கு ஒருமுறை என இந்த கொடுமை ஆறு முதல் ஏழு மாதங்கள் நடந்துள்ளது. சிறுமி வயிறு வலிப்பதாக அவருடைய அம்மாவிடம் தெரிவித்தார். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது தான் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    தனது மகளுக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து பெண்கள் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளுக்க எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மேலும், மதகுரு மற்றும் சகோதரர் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×