என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- மோதலின்போது காஷ்மீர்தான் கஷ்டங்களை எதிர்கொண்டது.
- எனவே ஒரு காஷ்மீரி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரவில்லை என்றால், வேறு யார் கோருவார்கள்?.
பாகிஸ்தானுடன் போர் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி நல்லிணக்கத்திற்கான பாதையை மேற்கொள்வது பற்றி பேசுங்கள் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் மக்கள் உங்களுடைய எதிரி இல்லை என்பதை மத்திய அரசுக்கு சொல்ல விரும்புகிறேன். நாங்கள் கண்ணியத்துடன் கூட அமைதியை விரும்புகிறோம். நட்பு மூலமாக அமைதியை விரும்புகிறோம். நாங்கள் போர் மூலம் அமைதியை விரும்பவில்லை. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது காஷ்மீரில் நடந்தது என்ன? என்பதை விளக்குவதற்காக நீங்கள் எம்.பி.க்கள் குழுவை உலக நாடுகளுக்கு அனுப்பினீர்கள்.
மோதலின்போது காஷ்மீர்தான் கஷ்டங்களை எதிர்கொண்டது. எனவே ஒரு காஷ்மீரி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரவில்லை என்றால், வேறு யார் கோருவார்கள்?.
நம்முடைய நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமென்றால், போரை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேச வேண்டும். உலகில் உங்கள் திறமையை நிரூபிக்கவும், சீனாவை வெல்லவும் விரும்பினால், ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நல்லிணக்கப் பாதையை மேற்கொள்ளுங்கள்.
இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
- ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
- ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு பாராளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்கவுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் நடந்த தேடுதல் வேட்டையின்போது ஸ்ரீநகர் அருகே வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ள நிலையில், பயங்கராவதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நிலச்சரிவைத் தொடா்ந்து, வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய கோவில் வாரியத்துக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளாா்.
ஜம்மு:
ரியாசி மாவட்டத்தின் கத்ராவில் உள்ள திரிகூட மலையில், பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ளது. கத்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் 184.2 மி.மீ. பலத்த மழை கொட்டித் தீா்த்த நிலையில், வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் செல்லும் பழைய வழித்தடத்தின் தொடக்கப் பகுதியான பான்கங்கா என்ற இடத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீா் நிலச்சரிவு ஏற்பட்டது.
யாத்திரை தொடங்குமிடம் என்பதால், பக்தா்கள் மட்டுமன்றி கோவேறு கழுதைகள் மூலம் அவர்களை அழைத்துச் செல்லும் பணியாளா்களும் கூடியிருந்தனா். நிலச்சரிவில் இப்பணியாளர்களின் பதிவு அலுவலகமும், இரும்பு கட்டுமானங்களும் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 10 போ் காயமடைந்தனா்.
சென்னையைச் சோ்ந்த பக்தா் உப்பன் ஸ்ரீவாஸ்தவா (70), அவரது மனைவி ராதா (66), அரியாணாவைச் சோ்ந்த ராஜீந்தா் பல்லா (70) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் ஸ்ரீவாஸ்தவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிலச்சரிவைத் தொடா்ந்து, வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனரக இயந்திரங்கள் உதவியுடன் மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று கோவில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் குமாா் வைஷியா தெரிவித்தாா்.
நிலச்சரிவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்-மந்திரி உமா் அப்துல்லா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய கோவில் வாரியத்துக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளாா்.
இக்கோவிலுக்கு செல்லும் புதிய வழித்தடத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணியில் ராணுவத்தினா் ஈடுபட்டுள்ளனா்.
- டோடா-பர்த் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
- ஓட்டுநர் வளைவில் கட்டுப்பாட்டை இழந்ததார்.
ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, டோடா நகரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள போண்டா அருகே டோடா-பர்த் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
சுமார் காலை 9 மணியளவில், 25 பேருடன் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் ஓட்டுநர் வளைவில் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் சாலையிலிருந்து விலகி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், முகமது அஷ்ரப் (35), மங்க்தா வாணி (51), அட்டா முகமது (33), தாலிப் ஹுசைன் (35), மற்றும் ரஃபீகா பேகம் (60) ஆகியோர் உய்ரில்நந்தனர்.
மேலும், காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்களில் ஐந்து வயது குழந்தை ஒன்று சிறப்பு சிகிச்சைக்காக ஜம்முவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
- அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.
- பாதுகாப்புப் படையினர் அங்கு தங்குவதற்கு இடமோ வசதிகளோ இல்லை.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா முக்கிய கருத்துக்களை பேசியுள்ளார் .
ஐந்து ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு, தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், மனோஜ் சின்ஹா தனது தவறை ஒப்புக்கொண்டார்.
"இது பாகிஸ்தானால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல். இந்தத் தாக்குதல் காஷ்மீரின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வகுப்புவாதப் பிரிவினைகளை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அங்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்.
பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைப்பதில்லை என்பது காஷ்மீரில் பொதுவான நம்பிக்கை. இந்தத் தாக்குதல் திறந்தவெளி புல்வெளிகளில் நடந்தது. பாதுகாப்புப் படையினர் அங்கு தங்குவதற்கு இடமோ வசதிகளோ இல்லை.
இந்தத் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் சூழல் முற்றிலும் மோசமடைந்துவிட்டதாகக் கருதுவது தவறு. இது நாட்டின் மீதான தாக்குதல். பாகிஸ்தான் காஷ்மீரில் அமைதியையும் செழிப்பையும் விரும்பவில்லை.
இருப்பினும், தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தகுந்த பதிலடியாக இருந்தன. பயங்கரவாதம் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதற்கு அவை சான்றாக இருந்தன. ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் எந்தத் தாக்குதல்களும் நடக்கவில்லை.
இருப்பினும், ஜம்மு-காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது" என்று மனோஜ் சின்ஹா கூறினார்.
இதற்கிடையில், மத்தியில் ஒருவரைப் பாதுகாக்க துணை நிலை ஆளுநர் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்ததாக காங்கிரஸ் விமர்சித்தது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு சட்டம் ஒழுங்கு துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது
- நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- எந்த சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்தினர் என்பதை விளக்க வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உமர் அப்துல்லாவை விட துணைநிலை ஆளுநர் அதிகாரமிக்கவர். போலீஸ் துறை இவரது கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
1931ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படையை எதிர்த்து சண்டையிட்ட காஷ்மீர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் உயிரிழந்தவர்களுக்கு வருடந்தோறும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.
அந்த வகையில் ஜூலை 13ஆம் தேதியான நேற்று முதல்வரான உமர் அப்துல்லா நேற்று அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் உமர் அப்துல்லாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சண்டையிடுவது போன்று போலீசார் தள்ளிவிட்டனர்.
இது தொடர்பான வீடியோவை உமர் அப்துல்லா வெளியிட்டுள்ளார். மேலும் "இது நாள் உடல் ரீதியான அனுபவித்த போராட்டம். நான் சட்டத்திற்கு புறம்பாக அல்லது சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை. எந்தச் சட்டத்தின் கீழ் அஞ்சலி செலுத்துவதை தடுக்க சட்ட பாதுகாவலர்கள் முயற்சி செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
- 1992ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கால் ஏரி முற்றிலும் சிதைந்துபோனது.
- பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் தற்போது தாமரை பூக்கள் மலர்ந்துள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஹராமுக்த் மலை அடிவாரத்தில் இருந்து பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் நகர் வரை 24 கி.மீ. தூரத்திற்கு (200 ச.கி.மீ.) வுலார் என்ற ஏரி பரந்து விரிந்துள்ளது.
இந்த ஏரி சுத்தமான நீரை கொண்ட 2ஆவது ஆசிய ஏரி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ஏரியில் தாமரை பூத்துக் குலுங்கும். போர்வை போர்த்தியது போல் ஏரி காட்சி அளிக்கும். இந்த ஏரிக்கு கடந்த 1992ஆம் ஆண்டு சோதனை ஏற்பட்டது.
கடந்த 1992ஆம் ஆண்டு கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரி அதன் உருவத்தை இழந்தது. ஏரி முழுவதும் வண்டல் மண்ணால் சூழப்பட்டது. இதனால் தாமரை மலர்களும் அழிந்துபோனது. பல்வேறு அமைப்புகள் மீண்டும் தாமரை மலர்கள் வளர முயற்சி மேற்கொண்டன. ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.
ஏரியில் உள்ள வண்டல் மணல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது தாமரை விதைகள் தூவப்பட்டன. தற்போது தாமரை பூத்துக் குலுங்கி காட்சி அளிக்கின்றன. சுமார் 30 வருடங்கள் கழித்து தாமரைகள் ஏரியை போர்வையால் போர்த்தியபோல் காட்சி அளிக்கின்றன.
- காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.
- பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) மோதல் ஏற்பட்டது.
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சத்ரூவின் குச்சல் பகுதியில் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.
அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.
அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அவர்களை பிடிக்க கூடுதல் படையினர் அனுப்பப்பட்டனர்.
முன்னதாக உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்கர் பகுதியின் தொலைதூர பிஹாலி பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஒரு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஒரு வாரத்திற்கு முன் கொல்லப்பட்டார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சத்ரூ பகுதியில் நடந்த இரண்டு தனித்தனி மோதல்களில் மூன்று பயங்கரவாதிகளும் ஒரு வீரரும் கொல்லப்பட்டனர்.
- அமர்நாத் புனித யாத்திரையின் முதல் குழு இன்று புறப்பட்டது.
- யாத்திரையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை நாளை தொடங்க உள்ளது. இந்த யாத்திரை ஆகஸ்ட் 9-ம் தேதி முடிவடைகிறது.
புனித யாத்திரை வருவோரின் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு முன் அமர்நாத் யாத்திரை வருவதற்கு 2.36 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
தாக்குதலுக்கு பிறகு முன்பதிவு எண்ணிக்கை குறைந்தது.
அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. பாதுகாப்புக்காக சுமார் 600 கூடுதல் துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜம்முவிலிருந்து கடும் பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
- திருடனுக்கு செருப்பு மாலை அணிவித்து போலீஸ் வாகனத்தின் மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
- இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
ஜம்மு காஷ்மீரின் பக்ஷி நகர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை வாலிபர் ஒருவர் திருடியதாக கூறப்படுகிறது. அப்போது பணம் திருடிய வாலிபரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.
அப்போது பொதுமக்களை அந்த வாலிபர் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று கைது செய்தனர்.
பின்னர் அந்த வாலிபரின் சட்டையை கழற்றி அவரது கைகளை கட்டி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து போலீஸ் வாகனத்தின் மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
போலீசாரின் இந்த செயல் மனிதாபிமானமற்ற நடவடிக்கை என்று பலரும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல.
- எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள் என்றார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றால் மாநில சட்டசபை கலைக்கப்பட வேண்டும் என ஒரு செய்தித்தாளில் படித்தேன். அப்படியானால் அது நடக்கட்டும்.
என் நாற்காலியைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எங்கள் எம்.எல்.ஏ.க்களை பயமுறுத்துவதற்காக இந்த செய்திகள் செய்தித் தாள்களில் விதைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல. அது ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக.
எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள். மாநில அந்தஸ்து வழங்கப்படும் நாளில் நான் ஆளுநரிடம் சென்று சட்டசபையைக் கலைப்பேன் என தெரிவித்தார்.
- பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது.
- பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டார்.
ஸ்ரீநகர்:
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள உதம்பூர் மாவட்டத்திற்குச் சென்ற ராஜ்நாத் சிங் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படைவீரர்களைச் சந்தித்தார்.
இந்தப் பயணத்தின்போது ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதியும் உடன் இருந்தார்.
இந்தச் சந்திப்பிற்குப்பின் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், நமது வடக்கு எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதில் உதம்பூர் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சிய அடைகிறேன் என தெரிவித்தார்.
அதன்பின், பாதுகாப்புப் படைவீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.






