என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- இந்த தாக்குதல் சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும் கூறப்பட்டது.
- இந்திய ராணுவம் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.
இதன்மூலம் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு ஏற்பட்ட போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதல் சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய ராணுவம் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "பூஞ்ச் பகுதியில் போர்நிறுத்த மீறல்கள் குறித்து சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் எந்த போர்நிறுத்த விதிமீறலும் நடக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஏற்பட்ட போர் நிறுத்தத்தை ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது.
- பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஏற்பட்ட போர் நிறுத்தத்தை ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியளவில் இந்தியப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. கட்டுப்பாட்டுக் கோட்டில் துப்பாக்கிச் சூடு சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானின் இந்த தாக்குதலானது நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜனாதிபதி திரௌபதி முர்மு திங்களன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
- அவை உண்மை என்று என்னால் நம்ப முடியவில்லை.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகின்றன.
ஆகஸ்ட் 5, 2019 அன்று, இந்த பிரிவு நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
இந்த சூழலில், ஜனாதிபதி திரௌபதி முர்மு திங்களன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஊகங்கள் எழுந்தன.

இந்த சூழலில், இன்று (ஆகஸ்ட் 5) ஆம் தேதி மத்திய அரசு மாநில அந்தஸ்து குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.
இருப்பினும், இந்த செய்திகளை முதல்வர் அப்துல்லா மறுத்தார். அவரது எக்ஸ் பதவில், 'ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற செய்திகளை நான் கேள்விப்பட்டேன். இருப்பினும், அவை உண்மை என்று என்னால் நம்ப முடியவில்லை. நாளை எதுவும் நடக்காது.
சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தில் தெளிவு வரும் என்று நான் நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.
- ஜூலை 28 அன்று 'ஆபரேஷன் மகாதேவ்'வில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்துள்ளன.
ஜூலை 28 அன்று 'ஆபரேஷன் மகாதேவ்'வில் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தானியர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 அன்று 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்திய மூன்று பேர் காஷ்மீரின் டாச்சிகாம்-ஹர்வான் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை எடுத்து ஜூலை 28 நடந்த ஆபரேஷனில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட மூத்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பைசல் ஜாட் என்கிற சுலைமான் ஷா, அபு ஹம்சா என்கிற ஆப்கான் மற்றும் யாசிர் என்கிற ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் பயோமெட்ரிக் விவரங்கள், பாகிஸ்தான் அரசு வழங்கிய பாஸ்போர்ட் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையம் (NADRA), பயோமெட்ரிக் விவரங்கள், லேமினேட் செய்யப்பட்ட வாக்காளர் சீட்டுகள், டிஜிட்டல் செயற்கைக்கோள் தொலைபேசி விவரங்கள் மற்றும் GPS இணைப்புகளை பாதுகாப்பு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளது.
ஷா மற்றும் ஹம்சாவின் உடைமைகளில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்துள்ளன. செயற்கைக்கோள் தொலைபேசியின் சேதமடைந்த SD அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப விவரங்கள் உள்ளன.
இவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவலகோட்டின் சங்கமங்கா மற்றும் கோயன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை இது நிரூபிக்கிறது.
கராச்சியில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் பாக்கெட்டுகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. பஹல்காமில் கண்டெடுக்கப்பட்ட கிழிந்த சட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளும் இந்த சந்தேக நபர்களை சுட்டிக்காட்டுகின்றன.
இவர்கள் கடந்த மே 2022 இல் வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் துறை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு முந்தைய நாள், ஏப்ரல் 21 அன்று, பைசரனில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹில் பார்க்கில் உள்ள ஒரு குடிசையில் மூவரும் தஞ்சம் புகுந்தனர்.
அவர்களுக்கு உணவளித்ததற்காக இரண்டு உள்ளூர்வாசிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
- என்கவுண்டர் நடைபெற்று கொண்டிருக்கும்போது, பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளது என்று உங்களால் எப்படி கூற இயலும்.
- பாகிஸ்தான் உடனான உறவு மேம்படும் வரை பயங்கரவாதம் ஓயாது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படும் வரை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் ஓயாது என தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மேலும், குல்காம் மாவட்டத்தில் என்கவுண்டர் நடைபெற்று வருவது குறித்து கேட்ட கேள்விக்கு "என்கவுண்டர் நடைபெற்று கொண்டிருக்கும்போது, பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளது என்று உங்களால் எப்படி கூற இயலும்" என்றார்.
- 'ஆபரேஷன் அகால்' மூன்றாவது நாளாக தொடர்கிறது.
- இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக பாதுகாப்புப் படையினரால் தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் அகால்' மூன்றாவது நாளாக தொடர்கிறது.
தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் அகால் வனப்பகுதியில் இன்று நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் மேலும் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதன் மூலம், இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம், காட்டில் சோதனை நடத்தினர்.
- மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் .
குல்காம் மாவட்டத்தின் அகால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்த குறிப்பிட்ட தகவலைப் பெற்றதை அடுத்து பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம், காட்டில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இன்று (சனிக்கிழமை) காலை ஆபரேஷன் அகால் தொடர்கிறது என்று ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உடனே ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது.
இதுதொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "ஆபரேஷன் அகால் தொடர்கிறது. இதுவரை படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை" என்று தெரிவித்துள்ளது.
வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இன்னும் இருக்க வாய்ப்புள்ளதால், படைகள் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளன.
- சுகம் சவுத்ரி தனது பட்டாலியன் தலைமையகமான பந்த்சௌக்கில் இருந்து திடீரென காணாமல் போனார்.
- பந்தசௌக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் முகாமில் இருந்து எல்லைப் பாதுகாப்பு படை (BSF) வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
தகவலின்படி, நேற்று (ஜூலை 31) இரவு, BSF வீரர் சுகம் சவுத்ரி தனது பட்டாலியன் தலைமையகமான பந்த்சௌக்கில் இருந்து திடீரென காணாமல் போனார்.
BSF உடனடியாக சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. ஆனால் அந்த அவர் குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பந்தசௌக் காவல் நிலையத்தில் அவரை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து அவரை தேடி வருகின்றனர்.
- அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தால், சட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியும் என அரசு மகிழ்ச்சியாகிவிடும்.
- நீங்கள் அவையை நடத்த அனுமதிக்கவில்லை என்றால், பிறகு ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள்?.
பாராளுமன்ற நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காதது, அரசுக்கு சட்டங்களை நிறைவேற்ற எளிதாக இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற விவகாரத்தை துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-
அவை செயல்படுவதற்கு இடையூறு செய்வதை நான் எதிர்க்கிறேன். நீங்கள் அவையை நடத்த அனுமதிக்கவில்லை என்றால், பிறகு ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள்?.
பாராளுமன்றத்தில் அரசுக்கு முன்பாக தேசிய, சர்வதேச, உள்நாட்டு பிரச்சினைகளை எழுப்புவீர்கள் என்பதுதான் அவைக்குள் நுழைவதற்கான அர்த்தம். அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தால், சட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியும் என அரசு மகிழ்ச்சியாகிவிடும். ஆகவே, வெளிநடப்பு அரசுக்கு உதவுவதாகவே இருக்கும். அவர்களுக்கு எதிராக இருக்காது.
இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
- இந்த மெகா திட்டத்திற்கு தோராயமாக ரூ. 22,704 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- செனாப் நதியின் நீர் ஓட்டத்தில் அணை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகளைக் காரணம் காட்டி, திட்ட கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்தியது.
சிந்து நதி ஒப்பந்தத்தின்படி, பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் நதிகளின் நீரை இந்தியா கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் சிந்து, செனாப் மற்றும் ஜீலம் நதிகளின் நீரை பாகிஸ்தான் கட்டுப்படுத்துகிறது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் ஒரு பகுதியை இந்தியா தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தம் கூறுகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் மீது தனது மிகப்பெரிய நீர்மின் திட்டமான 1856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாவல்கோட் நீர்மின் திட்டத்தை கட்ட இந்தியா தயாராகி வருகிறது.
இந்த மெகா திட்டத்திற்கு தோராயமாக ரூ. 22,704 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 1980களிலேயே தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப காரணங்கள், நடைமுறை சிக்கல்களால் இந்த திட்டம் 40 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.
செனாப் நதியின் நீர் ஓட்டத்தில் அணை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகளைக் காரணம் காட்டி, திட்ட கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் உடன் மோதல் நிலவுவதால் இதை பயன்படுத்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தேசிய நீர்மின் கழகம் (NHPC) இந்த திட்டத்திற்கான டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 10 ஆகும். இந்த திட்டம் NHPC மற்றும் ஜம்மு காஷ்மீரின் மின் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியாகும்.
இந்த திட்டம் 847 ஹெக்டேர் வன நிலத்தை அழிக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன ஆலோசனை குழு, திட்ட கட்டுமானத்திற்காக சுமார் 3000 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வன நிலத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை சுட்டு கொன்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 3 பயங்கரவாதிகளை நேற்று முன்தினம் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. தொடர்ந்து அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோடு (எல்.ஓ.சி.) பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை சுட்டு கொன்றனர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
- பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ராகுல் கந்து ஏற்றுள்ளார்.
- குழந்தைகள் பட்டம் பெறும் வரை இந்த உதவித் தொகை தொடரும்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டிய இந்தியா, இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்தது. அதன்படி முப்படைகளும் இணைந்து கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 2.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியா- பாகி்ஸ்தான் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்த தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சேதமடைந்தன.
இதனையடுத்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, "இந்திய - பாகிஸ்தான் சண்டையில் பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ராகுல் கந்து ஏற்றுள்ளார். இந்த உதவித் தொகைக்கான முதல் தவணை நாளை வழங்கப்படும். குழந்தைகள் பட்டம் பெறும் வரை இந்த உதவித் தொகை தொடரும்" என்று தெரிவித்தார்.






